சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இன்பம்

இன்பம்

கற்றவர் முன்தாம் கற்ற
கல்வியைக் கூறல் இன்பம்
வெற்றியை வாழ்வில் சேர்க்கும்
வினைபல புரிதல் இன்பம்
சிற்றினக் கயவ ரோடு
சேராது வாழ்தல் இன்பம்
பெற்றதை வழங்கி வாழும்
பெருங்குணம் பெறுதல் இன்பம்.
– சுரதா

சொற்பொருள்:

 • இசைபட – புகழுடன்
 • கயவர் – கீழ்க்குணமுடையோர்

இலக்கணக்குறிப்பு:

 • தளிர்க்கை – உவமைத்தொகை
 • பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் – பண்புத்தொகை
 • வழங்கி – வினையெச்சம்
 • கற்றல், பெறுதல், வாழ்தல் – தொழிற்பெயர்

ஆசிரியர் குறிப்பு:

 • உவமை கவிஞர் சுரதா அவர்களின் இயற்பெயர் இராசகோபாலன்.
 • இவர் நாகை மாவட்டம் பழையனூரில் பிறந்தார்.
 • பெற்றோர் = திருவேங்கடம், செண்பகம்.
 • பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா.

படைப்புகள்:

 • தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்

சிறப்பு:

 • இவரின் தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கானப் பரிசை பெற்றுள்ளது.
 • இவர் கலைமாமணி பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் பெற்றுள்ளார்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இன்பம்

Leave a Comment

Your email address will not be published.