“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று ஔவையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர்.
தொல்காப்பியம், தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை “முந்நீர் வழக்கம்” எனக் குறிப்பிட்டுளார்.
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “பொருள்வயிற் பிரிவு” விளக்குகிறது. இப்பிரிவு “காலில்(தரைவழிப் பிரிதல்) பிரிவு, களத்தில்(நீர்வழிப் பிரிதல்) பிரிவு” என இரு வகைப்படும்.
யவனர்:
தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் “யவனர்” என அழைத்தனர்.
கப்பல் கட்டுதல்:
“கலம்செய் கம்மியர்” என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன.
புறநானூறு கூறும் உவமை:
நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.