இப்பாடல் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
இதில் 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன.
சீட்டுக்கவி:
புலவர், பெரும்பாலும் அரசர் முதலான கொடையாளர்களுக்குத் தாம் விரும்பும் பொருளைப் பெறவேண்டி, ஒலைச்சீட்டில் கவியாக எழுதி அனுப்புவர். அக்கவிதைக்கு சீட்டுக்கவி எனப் பெயர்.
இதற்கு ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.