Skip to content
திருக்குறள்
சொற்பொருள்:
- செவிச்செல்வம் – கேள்விச்செல்வம்
- தலை – முதன்மை
- போழ்து – பொழுது
- ஈயப்படும் – அளிக்கப்படும்
- ஆவி உணவு – தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு
- ஒப்பர் – நிகராவர்
- ஒற்கம் – தளர்ச்சி
- ஊற்று – ஊன்றுகோல்
- ஆன்ற – நிறைந்த
- வணங்கிய – பணிவான
இலக்கணக்குறிப்பு:
- வயிற்றுக்கும் – இழிவு சிறப்பும்மை
- கேட்க – வியங்கோள் வினைமுற்று
- இழுக்கல், ஒழுக்கம் – தொழிற்பெயர்கள்
- ஆன்ற – பெயரெச்சம்
- அவியினும் வாழினும் – எண்ணும்மை
பிரித்தறிதல்:
- சுவையுணரா = சுவை + உணரா
- வாயுணர்வு = வாய் + உணர்வு
- செவிக்குணவு = செவிக்கு + உணவு
பொதுவான குறிப்புகள்:
- திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
- திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
- ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாகளில் இடம்பெற்றுள்ளது.
- அதிகாரங்கள் 133. இதன் கூட்டுத்தொகை ஏழு.
- மொத்த குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகை ஏழு.
Related