சென்னைக்கு அருகே துள்ளம் என்னும் ஊரில் விருதாச்சலனார் – சினம்மையாரின் மகனாக 26.08.1883ஆம் நாள் பிறந்தார்.
சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் படித்தார்.
கதிரைவேலனாரிடம் தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் படித்தார்.
தமிழ் பற்று:
“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதை முழு மூச்சாக கொண்டார்.
வடமொழிச் சொற்களை கலவாமல் தூய தமிழிலே எழுதவும் பேசவும் செய்தார்.
பிறமொழியறிவு:
தமிழை வளர்க்க பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளல்ல என்றார்.
ஆங்கிலத்தில் மிக்க புலமை பெற்றிருந்தார்.
காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடை பேச்சை மொழிபெயர்த்தார்.
இளைஞர்களுக்கு அறிவுரை:
“இளைஞர்களே! தமிழுலகின் இழிந்த நிலை ஊறுங்கள்; ஓர்ந்து உங்கள் பொறுப்பை உணருங்கள்; தமிழ்த்தையைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தில் அமர்த்த சூள்கொண்டு எழுங்கள்; எழுங்கள்; பழந்தமிழ் வீரத்துடன் எழுங்கள்” என்று அறைகூவல் விடுத்தார்.
பேசுப்பணி:
“திரு.வி.க நடை” என்ற ஒரு தனி நடையை நடைமுறைப் படுத்தினார்.
பேசுவது போலவே எழுதுவது, எழுதுவது போலவே பேசுவது ஆகும்.
அறிஞர் அண்ணா உள்ளிட்ட அக்கால இளைஞர்களை தன் உணர்ச்சிமிகு பேச்சால் தம்பால் ஈர்த்தார்.
எழுத்துப்பணி:
உரைநடை எழுதுவது எனது தொழில் என்று கூறினார்.
“அவருக்கு வாய்த்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது” என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பாராட்டி உள்ளார்.
உரைநடை நூல்கள்:
மனித வாழ்கையும் காந்தியடிகளும்
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
இமயமலை அல்லது தியானம்
முருகன் அல்லது அழகு
சைவத்திறவு
சைவத்தின் சமரசம்
கடவுட் காட்சியும் தாயுமானவரும்
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
நாயன்மார் வரலாறு
தமிழ்நூல்களில் பௌத்தம்
காதலா?முடியா?சீர்திருத்தமா?
என் கடன் பணிசெய்து கிடப்பதே
இந்தியாவும் விடுதலையும்
தமிழ்ச்சோலை
உள்ளொளி
செய்யுள் நூல்கள்:
முருகன் அருள்வேட்டல்
திருமால் அருள்வேட்டல்
கிருத்துவின் அருள்வேட்டல்
அருகன் அருகே
உரிமை வேட்டல்
பொதுமை வேட்டல்
பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியடிகளும்
இதழ்ப்பணி:
தேசபக்தன், நவசக்தி என்னும் இதழ்களின் வாயிலாகத் தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டார்.
தமிழ் வாழ்வினர்:
வயதாகி படுக்கையில் இருந்த போதும் “வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுகைப் பிதற்றல்” என்னும் நூலை மு.வ உதவியுடன் வெளியிட்டார்.
அவர் மனைவி இறந்த போதும், “நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்.