விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி இனையார்க்கு மகனாய் 1903ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் பிறந்தார்.
காமராசரின் தாத்தா நாட்டாண்மைக்காரர்.
அவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று.
அரசியலில் ஈடுபாடு:
காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
“மெய்கண்டான் புத்தகசாலை” என்ற நூல் நிலையத்திற்கு சென்று அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து திறமையாக பேசவும் கற்று கொண்டார்.
இளம் வயதிலேய காங்கிரசில் சேர்ந்தார்.
பதினோரு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
அவரது தன்னலமற்ற உழைப்பைக் கண்டு தலைவர் சத்தியமூர்த்தி அவரை கட்சியின் செயலாளர் ஆக நியமித்தார்.
காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.
தலைவர்களை உருவாக்குபவர்
1939ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஆனார்.
12 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.
பலர் ஆட்சி அமைக்க இவர் காரணமாக இருந்ததால் இவர் “தலைவர்களை உருவாக்குபவர்” எனப் போற்றப்பட்டார்.
முதலமைச்சர் காமராசர்
1954இல் இராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதும் காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1963இல் தாமாக பதவி விலகும்வரை அப்பதவியில் திறம்படச் செயலாற்றினார்.
காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும், சி.சுப்பிரமணியம் கல்விஅமைச்சராகவும் பணியாற்றினார்.
தொழில் முன்னேற்றம்:
காமராசர் முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிண்டி, அம்பத்தூர், ராணிப்பேட்டை முதலிய இடங்களில் பெரிய தொழிற்பேட்டைகளும், மாவட்டந்தோறும் சிறிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டன.
இவர் காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, ஆவடி இரயில்வே வாகனத் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியன இவரது காலத்தில் தொடங்கப்பெற்றன.
கல்விப் புரட்சி
காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.
“தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி” என்பதே அவரது நோக்கமாக அமைந்தது.
பள்ளி வேலைநாட்களை 180இல் இருந்து 200ஆக உயாத்தினார்.
தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
ஈராண்டுகளில் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் 133 நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வாங்கப்பட்டன.
மருத்துவக்கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்தார்.
சமுக முன்னேற்ற திட்டங்கள்
தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார்.
நிலசீர்திருத்தம் இவரால் கொண்டுவரப்பட்டது.
நில உச்ச வரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் முக்கியமானது.
காமராசர் திட்டம்
1962ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்கு பின், காங்கிரசுக் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராசர் திட்டம் ஒன்றை கொண்டுவந்தார். அத்திட்டமே “காமராசர் திட்டம்” ஆகும்.
அகில இந்திய காங்கிரசுத் தலைவர்
புவனேஸ்வர் நகரில் 1963ஆம் ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.
லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி போன்றோரை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.
காமராசருக்கு செய்த சிறப்புகள்
காமராசரக்கு நடுவண் அரசு “பாரதரத்னா விருது” அளித்துச் சிறப்பித்து, நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியது.
தமிழக அரசு இவரின் பெயரால் “மதுரை காமராசர் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டியது.
கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலை அமைத்து சிறப்பித்தது.
காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.
அவரின் விருதுநகர் இல்லமும் அரசுடைமை ஆக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது.
தேனாம்பேட்டையில் காமராசர் அரங்கம் நிறுவப்பட்டது.
காமராசர் பிறந்த நாளான சூலை 15ஆம் நாள் ஆண்டுதோறும் “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழக அரசு அறிவித்துள்ளது.
இவரை “கல்விக் கண் திறந்தவர்” எனத் தமிழுலகம் போற்றுகிறது.
மறைவு
1972ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வி நீத்தார்.