சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்தக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
திரி = மூன்று
கடுகம் = காரமுள்ள பொருள்
ஆசிரியர் குறிப்பு
இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.
“செருஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது
பொதுவான குறிப்புகள்
“திரி கடுகம் = சுக்கு, மிளகு, திப்பிலி” என திவாகர நிகண்டு கூறுகிறது
இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.
இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வருகிறது.
மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
இந்நூலில் 66 பாடல்களில் நன்மை தருபவை எவை என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
இந்நூலில் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக் கூறப்பட்டுள்ளது.