திரைப்படக்கலை

திரைப்படக்கலை

திரைப்படக்கலை

திரைப்படத்தின் சிறப்பு

  • உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம்.
  • அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.

திரைப்படத்தின் வரலாறு

  • ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.
  • ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
  • எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
  • பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

திரைப்படம்

  • நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குனர் என்பர்.
  • கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.

திரைப்படச்சுருள்

  • திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
  • படம் எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்ச்சுருள் எனப்படும்.

திரைப்படக்கலை – படம்பிடிக்கும் கருவி

  • இது ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
  • படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.

திரைப்படக்கலை – ஒலிப்பதிவு

  • நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.

திரைப்படக்காட்சிப் பதிவு

  • ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
  • இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.

திரைப்படக்கலை

திரைப்படக்கலை – கருத்துப்படம்

  • கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் “வால்ட் டிஸ்னி” என்பார் ஆவார்.
  • படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர்.
  • கனவு கண்டு கொண்டே கனவுக்குள் இருப்பது போல நம்மைச் சூழ்ந்த பெருங்கனவே திரைப்படம்
  • மொழிக்கு இருப்பது போல் நிறுத்தற்குறிகள், அசைவுகள், அமைப்புகள், உத்திகள் என எல்லாமும் இதன் காட்சி மொழிக்கும் உண்டு.

திரைப்படக்கலை – லூமியர் சகோதரர்கள்

  • 1895 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள் மாலை 5 மணி = பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள “கிராண்ட் கபே விடுதி” முன் “அதிசயம் பிறக்கிறது” என்ற தலைப்பில் விளம்பரம் செய்யப்பட்டு மக்கள் முன் முதன் முதலாக திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.
  • அன்று கிராண்ட் கபே விடுதியில் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட திரைப்படங்களே பிற்பாடு உலகையே கட்டிப்போடும் பேராற்றலாக வளர்ந்துள்ளது.

திரைப்படக்கலை – தாமஸ் ஆல்வா எடிசன்

  • அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியை கண்டு பிடித்தவர் = தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார்
  • பிரான்சின் லூமியர் சகோதரர்கள் = படம் பிடிக்கும் கருவியோடு “திரையிடும் கருவியையும்” (PROJECTOR) சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை உலகிற்கு அளித்தனர்.
  • ஜார்ஜ் மிலி = திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்

திரைப்படக்கலை – காட்சி மாற்றம்

  • காட்சி மறைவு = ஒரு காட்சியை சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக் காட்டுதல், காட்சி மறைவு (FADE OUT) ஆகும்
  • காட்சி உதயம் = இருட்டாக இருந்த பகுதி சிறிது சிறிதாக வெளிச்சமாக மாறுதல், காட்சி உதயம் (FADE IN) எனப்படும்
  • கலவை / கூட்டு = ஒரு காட்சி மறையும் போதே அடுத்த காட்சி தெரியத் தொடங்கும். இதனை கலவை / கூட்டு (MIX) என்பர்

காட்சிமொழி

  • ஒரு மணிநேர நிகழ்வை 5 நொடிகளில் காட்சி தொகுப்புகளாக பார்வையாளர்களிடம் உணர்த்த முடிவதையே “காட்சி மொழி” என்கிறோம்

படத்தொகுப்பு

  • தேவையற்ற காட்சிகளை நீக்கி, தேவையான காட்சிகளைப் பொருத்தமான வகையில் சேர்ப்பதே படத்தொகுப்பு ஆகும்.

திரைப்படக்கலை

குலஷோவ் விளைவு

  • “மாடர்ன் டைம்ஸ்” (1936) திரைப்படத்தில் மனிதர்கள் தொழிற்சாலைக்குள் முண்டியடித்து செல்வதை, செம்மறியாடுகள் முண்டியடித்து செல்லும் காட்சிகளை காட்டி, சமூகத்தில் மனிதர்கள் சில நேரங்களில் மந்தைகளாக மாறுவதை காட்டினர்.
  • இதனை “குலஷோவ் விளைவு” (KULESHOV EFFECT) என்பர்

கர்நாடக மாநிலம் ஹெக்கோடு

  • கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு என்னும் சிற்றூர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை.
  • 1977 இல் ஒரு முயற்சியாக உலகில் முக்கிய விருது பெற்ற திரைப்படங்கள் அங்கு ஆறுநாள் திரையிடப்பட்டன.

நாடகம், திரைப்படம்

  • திரைப்படம் என்பது ஒருவகையில் பார்த்தல் நாடகத்தின் குழந்தை எனலாம்
  • நாடகம் = ஒற்றைக் கோணக்கலை (SINGLE DIMENSION ART)
  • திரைப்படம் = முப்பரிமாணக் கலை (THREE DIMENSIONAL ART)

நேரேட்டர் / கதைசொல்லி

  • மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியைப் பிடித்து கதை சொல்லும் காலாமும் இருந்தது
  • அவருக்கு “நேரேட்டர்” (கதைசொல்லி) என்று பெயர்

திரைப்படக்கலை – சார்லி சாப்ளின்

  • இங்கிலாந்தின் இலண்டனில் பிறந்தவர்
  • நாடக நடிகராக சேர்ந்து, அமேரிக்கா சென்று திரை வாய்ப்பை பெற்றார்
  • லிட்டில் டிராம்ப் (LITTLE TRUMP) = அவருக்காக அவரே உருவாக்கிக்கொண்ட உருவம்
  • அவரின் வறுமைக் காலங்களை “தி கிட்” (THE KID) என்ற பெயரில் படமாக்கினார்
  • அவர் தொடங்கிய பட நிறுவனம் = யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
  • அவரின் சிறந்த திரைப்படங்கள் = தி கோல்டு ரஷ் (THE GOLD RUSH), தி சர்க்கஸ் (THE CIRCUS)
  • சாப்ளினின் முதல் பேசும் படம் = சிட்டி லைட்ஸ் (CITY LIGHTS)
  • தொழில்மைய உலகை விமர்சிக்க “மாடர்ன் டைம்ஸ்” (MODERN TIMES) என்ற படத்தை எடுத்தார்
  • தி கிரேட் டிக்டேட்டர் = அவரின் சாதனைப் படமான “தி கிரேட் டிக்டேட்டர்” (THE GREAT DICTATOR) 1940 இல் வெளிவந்தது. இதில் ஹிட்லரை விமர்சித்து வெளிவந்த முதல் படம். இதில் “மனித குலத்திற்கு தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும் தான்” என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது
  • இப்படத்தில் ஹிட்லரை காட்சிபடுத்த “ஹென்கோல்” என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கினார்.
  • 1952 இல் அமேரிக்கா அவரை நாடு கடத்தியதாக அறிவித்தது.
  • அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” என்ற பிரிவில் “ஆஸ்கார் விருது” வழங்கப்பட்டது.

சாமிக்கண்ணு வின்சென்ட்

  • தந்து மனைவியின் வைரமாலையை விற்று, 2500 ரூபாய்க்கு “DUPONT’ என்ற பிரெஞ்ச்காரர் இடம் இருந்து ஒரு புரோஜெக்டரையும் சில துண்டுப் படங்களையும் வாங்கி, தமிழகம் முழுவதும் காட்சிகளை நடத்தினார்
  • தமிழ் சினிமாவின் முன்னோடி (LEGEND OF TAMIL CINEMA) என அழைக்கப்பட்டார் = சாமிக்கண்ணு வின்சென்ட்
  • இவர் சென்னையில் இருக்கும் பொழுது சினிமாத் தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கிய அடியாக “ப்ரொஜெக்டர்களை” இறக்குமதி செய்து விற்றார். இதனால் புதிய திரையரங்குகள் தமிழகத்தில் முளைத்தன.

அஜயன் பாலா

  • திரைமொழி குறித்த இப்பாடம் “திரு. அஜயன் பாலா” வின் கட்டுரையை அடிப்படைச் சட்டமாகக் கொண்டு சுஜாதா, செழியன், அம்ஷன்குமார் முதலானோரின் திரைப்பார்வைகளை ஊடும்பாவுமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கலைச்சொற்கள்

காட்சி மறைவு

FADE OUT
காட்சி உதயம்

FADE IN

கதைசொல்லி

NARRATOR
மீ சேய்மைக் காட்சித்துணிப்பு

EXTREME LONG SHOT

சேய்மைக் காட்சித்துணிப்பு

LONG SHOT
நடுக் காட்சித் துணிப்பு

MID SHOT

மீ அண்மைக் காட்சித் துணிப்பு

EXTREME CLOSE UP SHOT
படங்காட்டுதல்

EXHIBITION

 

 

கலைகள்

Leave a Reply