விவேகானந்தர் கடிதங்கள்

விவேகானந்தர் கடிதங்கள்

விவேகானந்தர் கடிதங்கள்

விவேகானந்தர் கடிதங்கள்

  • நாட்டில் சொன்னபடி செய்ய ஆளில்லை, ஆனால் கண்டபடி சொல்ல ஆள் ஏராளம் என்றவர் – விவேகானந்தர்.
  • அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை, அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது என்றவர் – விவேகானந்தர்.
  • ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டு மக்கள் பெற்றுள்ள கல்வி அறிவாற்றலைப் பொறுத்து அமையும் என்றவர் – விவேகானந்தர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • கல்வி என்றால் என்ன? அது நூல்களைப் படிப்பதா? அல்லது அது பலவகையானதைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின்மூலம் மனத்தின் ஆற்றலும் அது வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுப் பயன்தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.
  • கல்வி வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சி.
  • கல்வியின் நோக்கம் செய்திகளைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று. கல்வியின் நோக்கமே மனத்தை ஒருமுகப் படுத்துவது தான்.
  • மனவொருமைப்பாடே கல்வியின் அடிப்படை.
  • மனிதன் தன் சக்தியை நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு வீண் செய்து விடுகிறான். இதனால்தான், அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய மனத்தைப் பெற்றவன் ஒரு தவற்றையும் செய்ய மாட்டான்.
  • மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது.
  • எத்துறையிலும் வெற்றி பெறுவது, இதைப் பொறுத்துத்தான் அமைகிறது.
  • இசை, ஓவியம், சிற்பம் முதலிய எல்லாக் கலைகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வது மன ஒருமைப்பாடுதான்.
  • மேலும், உலகத்தின் புதிர்களை மூடி வைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமையை நாம் பெற வேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது மன ஒருமைப்பாடுதான்.
  • அதுவே கல்விக்கு அடிப்படையாகும்.

 

 

கடித இலக்கியம்

Leave a Reply