நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள்

  • தமிழ் நாட்டுப்புறப் பாடலின் தந்தை = வானமாமலை.
  • நாட்டுப்புறப் பாடலுக்கு “நாட்டார் வழக்காற்றியல்” என்ற வேறு பெயரும் உண்டு.
  • நாட்டுப்புற பாடல்கள் நிலைத்த அமைப்பு உடையன இல்லை.
  • நிலைத்த அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல் வகை பிசி.
  • விடுகதையை தொல்காப்பியர் பிசி என்று கூறுகிறார்.
  • தொல்காப்பியர் கூறும் பண்ணத்தி என்பது நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்கிறார் பேராசிரயர்.
  • தொல்காப்பியர் கூறும் புலன் என்ற வனப்பு நாட்டுப்புறப் பாடலைக் குறிக்கும் என்கிறார் அழகப்பன்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • வள்ளைப்பாட்டு என்பது உலக்கைப் பாட்டு.
  • வள்ளைப் பாட்டைத் திருப்பொற்சுண்ணம் என்கிறார் மாணிக்கவாசகர்.
  • தோழியர் இருவர் விளையாட்டாகப் பாடுவது திருச்சாழல்.
  • தாலாட்டுப் பாடல் நீலாம்பரி ராகத்தில் பாடப்படும்.
  • ஒப்பாரிப் பாடலின் வேறு பெயர்கள் = பிலாக்கணம், கையறுநிலை, இரங்கற்பா.
  • காதல் சுவை மிகுந்த பாடல் தெம்மாங்கு(தேன்+பாங்கு).
  • பழமொழிப் பதிகம் பாடியவர் திருநாவுக்கரசர்.
  • ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் = கலித்தொகை.
  • முதல் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு = காற்றிலே மிதந்த கவிதை(மு.அருணாசலம்).
  • முதல் நாட்டுப்புறக் கதைப்பாட்டு = பவளக்கொடி மாலை(கருணானந்த சாமி).
நாட்டுப்புறப் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறவியல்

  • நாட்டுப்புறவியல் 2 பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. அவை,
    • நாட்டுபுற இலக்கியம்
    • நாட்டுப்புற கலைகள்

நாட்டுப்புற இலக்கியம்

  • முனைவர் சு.சக்திவேல் = நாட்டுபுற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுபுற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்” என்கிறார்.
  • நாட்டுபுற இலக்கியத்தை பல வகைகளாக பிரிப்பர்.
    • நாட்டுப்புறப் பாடல்கள்
    • நாட்டுப்புறக் கதைகள்
    • நாட்டுப்புறக் கதைப் பாடல்கள்
    • நாட்டுப்புறப் பழமொழிகள்
    • விடுகதைகள்
    • புராணங்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புற பாடல்கள்

  • நாட்டுப்புறப் பாடல்கள் முன்னைப் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குகின்றன.
  • இப்பாடல்கள் என்று பிறந்தவை, எவரால் பாடப்பட்டவை என்று உறுதியாக அறுதியிட்டு சொல்ல இயலாது.
  • இப்பாடல்கள் எழுத்திலக்கிய பாடல்களை போன்று எதுகை, மோனை, இயைபு, இரட்டைக்ககிளவி என்ற யாப்பிலக்கணத்தின் கட்டுக் கோப்பில் அமைந்துள்ளன.

நாட்டுபுறப் பாடல்களின் வகைகள்

  1. தாலாட்டுப் பாடல்கள்
  2. குழந்தைப் பாடல்கள்
  3. காதல் பாடல்கள்
  4. தொழில் பாடல்கள்
  5. கொண்டாட்டப் பாடல்கள்
  6. அகப் பாடல்கள்
  7. புறப்பாடல்
  8. பக்திப் பாடல்கள்
  9. பன்மலர்ப் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்

தாலாட்டுப் பாடல்கள்

  • தாலாட்டுப் பாடல் என்பது தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும். அப்பாடல்களில் வெளிப்படும் உணர்வுகலாவன,
    • குழந்தை பற்றின,
    • குழந்தைக்குரிய பொருட்கள் பற்றியன,
    • குழந்தைகளின் உறவினர் பெருமை பற்றியன

குழந்தைப் பாடல்கள்

  • குழந்தைப் பாடல்கள் குழந்தை உள்ளத்தை புலப்படுத்துவனவாக அமைந்திருக்கும்.
  • அதில் பொருள் அமைவதை விட ஓசை நிறைவுகளே அதிகமாக காணப்படும். இப்பாடல்கள் காணப்படுபவை,
    • குழந்தை வளர்ச்சி நிலைகள்
    • (குழந்தைப் பாடல்கள்) மற்றவர்கள் பாடுவது
    • சிறுவர் பாடல்கள்

காதல் பாடல்கள்

  • காதல் பாடல்கள் இருவகைப் படும். அவை,
    • காதலர்கள் பாடுவது
    • காதலர்கள் அல்லாதவர்கள் தொழில் செய்யும் பொழுது பாடுவது

தொழில் பாடல்கள்

  • மனிதர்கள் கூடித் தொழில் செய்யும் பொழுது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில் பாடல்கள்.
  • தொழில் பாடல்களை “ஏலோலங்கிடி பாட்டு, ஏற்றப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு” என்றெல்லாம் கூறுவர்.

Leave a Reply