10TH TAMIL தேம்பாவணி

10TH TAMIL தேம்பாவணி

10TH TAMIL தேம்பாவணி

10TH TAMIL தேம்பாவணி

  • கிறித்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்.
  • இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர்.
  • “அருளப்பன்” என குறிப்பிடப்படுபவர் = யோவான்.
  • இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி.
  • இயேசு கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி = யோவான் எனப்படும் அருளப்பன்.
  • வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று என்று பெயரிட்டுள்ளார்.
  • வீரமாமுனிவர் தனது தேம்பாவணியில் “கருணையன்” என குறிப்பிடப்படுபவர் = யோவான் எனப்படும் அருளப்பன்.
  • கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.
  • கருணையானின் தாயார் = எலிசபெத் அம்மையார்.
  • அச்சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • சேக்கை = படுக்கை
  • யாக்கை = உடல்
  • பிணித்து = கட்டி
  • வாய்ந்த = பயனுள்ள
  • இளங்கூழ் = இளம்பயிர்
  • தயங்கி = அசைந்து
  • காய்ந்தேன் = வருந்தினேன்
  • கொம்பு = கிளை
  • புழை = துளை
  • கான் = காடு
  • தேம்ப = வாட
  • அசும்பு = நிலம்
  • உய்முறை = வாழும் வழி
  • ஓர்ந்து = நினைத்து
  • கடிந்து = விலக்கி
  • உவமணி = மணமலர்
  • படலை = மாலை
  • துணர் = மலர்கள்
10TH TAMIL தேம்பாவணி
10TH TAMIL தேம்பாவணி

இலக்கணக்குறிப்பு

  • காக்கென்று = காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
  • கணீர் = கண்ணீர் என்பதன் இடைக்குறை
  • காய்மணி, உய்முறை, செய்முறை = வினைத்தொகைகள்
  • மெய்முறை = வேற்றுமைத்தொகை
  • கைமுறை = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

இஸ்மத் சன்னியாசி எனப்படும் வீரமாமுனிவர்

  • வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
  • இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
  • வீரமாமுனிவருக்கு “இஸ்மத் சன்னியாசி” என்ற பட்டதை வழங்கியவர் = திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர்.
  • “இஸ்மத் சன்னியாசி” என்பது பாரசீக சொல்.
  • இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் “தூய துறவி” என்று பொருள்.

தேம்பாவணி நூல் குறிப்பு

  • தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன்போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.
  • கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.
  • தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன் = யோசேபு (வளவன்)
  • இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.
10TH TAMIL தேம்பாவணி
10TH TAMIL தேம்பாவணி

வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு

  • 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி.
  • இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர்.
  • இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.
  • தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.

 

 

Leave a Reply