நாலடியார்
நூல் உருவம்
- ஆசிரியர் = சமண முனிவர்கள்
- தொகுத்தவர் = பதுமனார்
- பாடல்கள் = 400
- பொருள் = அறம்
- பா வகை = வெண்பா
பெயர்க்காரணம்
- நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் அழைப்பர்
நாலடியார் வேறு பெயர்கள்
- நாலடி
- நாலடி நானூறு
- வேளாண் வேதம்
- திருக்குறளின் விளக்கம்
நூல் பகுப்பு
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
- அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்
- பொருட்பால் = 24 அதிகாரங்கள்
- இன்பத்துப்பால் = 3 அதிகாரங்கள்
நூலின் சிறப்பு
- முப்பெரும் அற நூல்கள் = 1) திருக்குறள் 2)நாலடி யார் 3)பழமொழி நானூறு
- இந்நூலை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
- நூலின் பெருமையை கூறும் அடிகள்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி |
பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில் |
பொதுவான குறிப்புகள்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.
- நாலடியாரில் முதல் இயல் = துறவறவியல்
- நாலடியாரை தொகுத்தவர் = பதுமனார்
- நூலை முப்பாலாக பகுத்தவர் = தருமர்
- நூலிற்கு உரை கண்டவர் = தருமர், பதுமனார்
- முத்தரையர் பற்றி கூறுகிறது இந்நூல்
- நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.
முக்கிய அடிகள்
- கல்வி கரையில; கற்பவர் நாள்சில
- ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
- பால்உண் குருகின் தெரிந்து
- கல்வி அழகே அழகு