பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

  • பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று.
  • புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும்.
  • முதல் பிள்ளைத்தமிழ் நூல் = ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  • பெரியவர்களை குழந்தையாக பாவித்து பாடுதல் ஆகும்
  • இதனை “பிள்ளை கவி, பிள்ளைப் பாட்டு” எனவும் கூறுவர்
  • பிள்ளைதமிழ் இரு வகைப்படும் = ஆண் பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்
  • பிள்ளைத்தமிழ் பாடாமல் விலக்கு அளிக்கப்பட்ட கடவுள் = சிவன்
  • பிள்ளைதமிழ் இலக்கியத்தின் முன்னோடி = பெரியாழ்வார்

ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள்

  • காப்பு, ஆண்பாற் பிள்ளைத்தமிழின் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிறில், சிறுபறை, சிறுதேர்.

பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள்

  • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல்.

பிள்ளைத்தமிழ் நூல்கள்

குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் (முதல் பிள்ளைதமிழ் நூல்)

ஒட்டக்கூத்தர்
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்

குமரகுருபரர்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

குமரகுருபரர்
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (பெரிய தமிழ்)

பகழிக் கூத்தர்

காந்தியம்மை பிள்ளைத்தமிழ்

அழகிய சொக்கநாதர்
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்

அந்தக்கவி வீரராகவர்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

  • இதன் ஆசிரியர் குமரகுருபரர்
  • பெயர் – குமரகுருபரர்
  • பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
  • ஊர் – திருவைகுண்டம்
  • இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
  • சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
  • இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
  • காலம் – பதினேழாம் நூற்றாண்டு.

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *