பெரும்பாணாற்றுப்படை
நூல் அமைப்பு
- பொருள் = ஆற்றுப்படை
- திணை = புறத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 500
பெயர்க்காரணம்
- பெரிய யாழ்ப்பாணர்கள் ஆற்றுப்படுத்துவதாலும்,
- சிறுபாணாற்றுபடையை காட்டிலும் அதிக அடிகளைப் பெற்றிருப்பதாலும் இது பெரும்பாணாற்றுப் படை ஆயிற்று.
பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர்
- பாடிய புலவர் = கடியலூர் உருத்திரங் கண்ணனார்
- பாட்டுடைத் தலைவன் = தொண்டைமான் இளந்திரையன்
வேறு பெயர்கள்
- பாணாறு
- சமுதாயப் பாட்டு
தொண்டைமான்
- சோழன் ஒருவனுக்கும் நாகக் கன்னிக்கும் பிறந்தவன் என நச்சினார்கினியர் கூறுகிறார்.
- சோழன் நெடுமுடிக்கிள்ளிக்கும் னாக நாட்டரசன் மகள் பீலவள்ளிக்கும் பிறந்தவன் தொண்டைமான் என்கிறது மணிமேகலை.
- துரோணர் மகன் அசுவத்தாமனுக்கும், மதனி என்கிற அரக்கன் மகளுக்கும் பிறந்த பல்லவ மன்னனே தொடைமான் என்கிறார் இராகவையங்கார்
பெரும்பாணாற்றுப்படை குறிப்பு
- நீர்ப்பெயற்று என்னும் ஊரின் பழம் பெயர் “நீர்ப்பாயல்துறை”.
- இங்கு மிகப்பெரிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது.
- தொண்டைமானின் தலைநகரம் திருவெகஃகா.
- திருவெகஃகா என்பது காஞ்சிபுரம்
- யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது.
- நெல்லரிசி கொண்டு மது தயாரித்தல் பற்றி குறிப்பிடுகிறது.
முக்கிய அடிகள்
- பொழிமலை துறந்த புகைவேய் குன்றத்து
பழுமரம் தேடும் பறவை போல
- மணிவார்த் தன்ன மாயிரு மருப்பின்
பொன்வார்த் தன்ன புரியடங்கு நரம்பு
- முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டி நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி
- புனலோடு மகளிர் இட்ட பொலங்குழை
இறைதேர் மணிச்சிரல் இரைசெத்து எரிந்து