பொருள் இலக்கணம்

பொருள் இலக்கணம்

பொருள் இலக்கணம்

அகப்பொருள் இலக்கணம்

  • பொருள் என்பது = ஒழுக்கமுறை.
  • அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர்.
  • வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே!

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்

  • பொருள் இலக்கணம் இரண்டு வகைப்படும். அவை,
    1. அகப்பொருள் இலக்கணம்
    2. புறப்பொருள் இலக்கணம்

அகப்பொருள் என்றால் என்ன

  • அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும்.

பொருள் இலக்கணம்

அகத்திணை எத்தனை வகைப்படும்

  • அகத்திணை ஏழு வகைப்படும். அவை,
    1. குறுஞ்சி
    2. முல்லை
    3. மருதம்
    4. நெய்தல்
    5. பாலை
    6. கைக்கிளை
    7. பெருந்திணை

அன்பின் ஐந்திணை யாவை

  • அன்பின் ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

 

 

அகப்பொருள் பொருள்கள்

  • அகப்பொருள் போன்ருள்கள் = மூன்று. அவை,
    1. முதற்பொருள்
    2. கருப்பொருள்
    3. உரிப்பொருள்

முதற்பொருள் என்றால் என்ன

  • அகவொழுக்கம் நிகழ்தற்குக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

ஐவகை நிலங்கள்

  • குறிஞ்சி = மலையும் மலைசார்ந்த இடமும்
  • முல்லை = காடும் காடு சார்ந்த இடமும்
  • மருதம் = வயலும் வயல்சார்ந்த இடமும்
  • நெய்தல் = கடலும் கடல்சார்ந்த இடமும்
  • பாலை = மணலும் மணல்சார்ந்த இடமும்.

பொழுது எத்தனை வகைப்படும்

  • பொழுது இரண்டு வகைப்படும். அவை,
    1. பெரும்பொழுது
    2. சிறுபொழுது.

பெரும்பொழுது என்றால் என்ன

  • ஒரு ஆண்டின் ஆறு பெரும் கூறுகளை பெரும்பொழுது என்பர். அவை,
    1. கார்காலம் = ஆவணி, புரட்டாசி
    2. குளிர்காலம் = ஐப்பசி, கார்த்திகை
    3. முன்பனிக்காலம் = மார்கழி, தை
    4. பின்பனிக்காலம் = மாசி, பங்குனி
    5. இளவேனிற்காலம் = சித்திரை, வைகாசி
    6. முதுவேனிற்காலம் = ஆனி, ஆடி

சிறுபொழுது என்றால் என்ன

  • ஒரு நாளின் ஆறு கூறுகளை சிறுபொழுது என்பர். அவை,
    1. காலை = காலை 6 மணிமுதல் 10 மணிவரை
    2. நண்பகல் = காலை 10 மணிமுதல் 2 மணிவரை
    3. ஏற்பாடு = பிற்பகல் 2 மணிமுதல் 6 மணிவரை
    4. மாலை = மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை
    5. யாமம் = இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை
    6. வைகறை = இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை.

எற்பாடு என்றால் என்ன

  • எற்பாடு = எல் + பாடு.
  • எல் = ஞாயிறு.
  • பாடு = மறையும் நேரம்.

திணையும் பொழுதும்

திணைபெரும்பொழுதுசிறுபொழுது
குறிஞ்சிகுளிர்காலம், முன்பனிக்காலம்யாமம்
முல்லைகார்காலம்மாலை
மருதம்ஆறு பெரும்பொழுதுகள்வைகறை
நெய்தல்ஆறு பெரும்பொழுதுகள்எற்பாடு
பாலைஇளவேனில், முதுவேனில், பின்பனிநண்பகல்

கருப்பொருள் என்றால் என்ன

  • அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு முதலியன பொருள்கள் கருப்பொருள் எனப்படும்.

பொருள் இலக்கணம்

 

அன்பின் ஐந்திணை

அன்பின் ஐந்திணை

கருப்பொருள்குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை
தெய்வம்முருகன்திருமால்இந்திரன்வருணன்கொற்றவை
மக்கள்வெற்பன், குறவர், குறத்தியர்தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்ஊரன், உழவர், உழத்தியர்சேர்ப்பன், பரதன், பரத்தியர்எயினர், எயிற்றியர்
உணவுமலைநெல், தினைவரகு, சாமைசெந்நெல், வெண்ணெல்மீன், உப்புக்குப் பெற்ற பொருள்சூறையாடலால் வரும் பொருள்
விலங்குபுலி, கரடி, சிங்கம்முயல், மான், புலிஎருமை, நீர்நாய்முதலை, சுறாவலியிழந்த யானை
பூகுறிஞ்சி, காந்தள்முல்லை, தோன்றிசெங்கழுநீர், தாமரைதாழை, நெய்தல்குரவம், பாதிரி
மரம்அகில், வேங்கைகொன்றை, காயாகாஞ்சி, மருதம்புன்னை, ஞாழல்இலுப்பை, பாலை
பறவைகிளி, மயில்காட்டுக்கோழி, மயில்நாரை, நீர்க்கோழி, அன்னம்கடற்காகம்புறா, பருந்து
ஊர்சிறுகுடிபாடி, சேரிபேரூர், மூதூர்பட்டினம், பாக்கம்குறும்பு
நீர்அருவிநீர், சுனை நீர்காட்டாறுமனைக்கிணறு, பொய்கைமணற்கிணறு, உவர்க்கழிவற்றிய சுனை, கிணறு
பறைதொண்டகம்ஏறுகோட்பறைமணமுழா, நெல்லரிகிணைமீன்கோட்பறைதுடி
கருப்பொருள்குறிஞ்சிமுல்லைமருத யாழ்விளரி யாழ்பாலை யாழ்
தெய்வம்முருகன்திருமால்மருதப்பண்செவ்வழிப்பண்பஞ்சுரப்பண்
தொழில்தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்நெல்லரிதல், களை பறித்தல்மீன்பிடித்தல், உப்பு விளைத்தல்வழிப்பறி, நிரை கவர்தல்

Leave a Reply