மறுமலர்ச்சிப் பாடல்கள்

மறுமலர்ச்சிப் பாடல்கள்

மறுமலர்ச்சிப் பாடல்கள்

மறுமலர்ச்சிப் பாடல்கள்

  • பழமையை ஆராய்ச்சி இன்றி ஏற்றுக் கொள்வதும் புதுமையை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதும் நம்மிடையே படிந்து கிடக்கும் பண்பாகும்.
  • மரபின் மிகையான அழுத்தத்திலிருந்து நம்மால் எளிதில் விடுபடமுடியாமையே இதற்கான காரணமாகும்.
  • மரபின் பெயரால் காலத்திற்கு ஒவ்வாத மதிப்பீடுகளையும் நாம்தொடர்ந்து போற்றிக் கொண்டே வந்திருக்கிறோம்.
  • இத்தகைய போக்குகளை நம் இலக்கியங்களிலும் காண்கிறோம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • ஆனால் காலத்திற்கேற்ப இலக்கியத்தின் மீதான பார்வையும் போக்கும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.
  • அங்ஙனம் மாறி வருவதை நம்மால் புறந்தள்ள இயலாது.
  • “பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமையிருந்த நிலை – கிளியே பாமரர் ஏதறிவார்.” என்று பாடிய பாரதியிலிருந்து இலக்கிய மறுமலர்ச்சி தொடங்குகிறது எனலாம்.
  • மறுமலர்ச்சிப் பாவலர்கள் கண்மூடித்தனமாக மரபைத் தாண்டிச் செல்லுபவர்களுமல்லர்.
  • அப்படியே பழமையில் அழுந்துபவர்களும் அல்லர்.
  • அவர்கள் பார்வை புதிது;
  • பாடு பொருளும் புதிது;
  • நடை புதிது;
  • இலக்கிய நாட்டமும் உத்திகளும் புதியன.
  • அவர்தம் இலக்கியங்களில் செவ்வியல் மரபுகள் மீறப்படுவதும் சமூக அவலங்களைத் தோலுரிப்பதும் நிகழும்.
  • மானுடம்பாடும் நெறியே மறுமலர்ச்சிப் பாடல்களின் உயிர் நாடி எனலாம்.

 

Leave a Reply