மொழிவளம் காட்டும் இலக்கிய வளங்கள்

மொழிவளம் காட்டும் இலக்கிய வளங்கள்

மொழிவளம் காட்டும் இலக்கிய வளங்கள்
மொழிவளம் காட்டும் இலக்கிய வளங்கள்

மொழிவளம் காட்டும் இலக்கிய வளங்கள்

  • தமிழின் முதல் இலக்கணநூல் தொல்காப்பியம் = 3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்கள்.
  • தமிழரின் வாழ்வியலிலக்கணமான வள்ளுவம் = 3 பால்கள், 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள்.
  • சிலப்பதிகாரம் = 3 காண்டம், 30 காதைகள், 5001 வரிகள்.
  • மணிமேகலை = 30 காதைகள், 4755 வரிகள்
  • சீவகசிந்தாமணி = 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்
  • பெரியபுராணம் = 2 காண்டம், 13 சருக்கங்கள், 4286 பாடல்கள்.
  • கம்பராமாயணம் = 6 காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்கள்.
  • நல்லாப்பிள்ளை பாரதம் = 18 பருவங்கள், 11000 பாடல்கள்
  • கந்தபுரணம் = ஆறுகாண்டம், 135 படலம், 10345 பாடல்கள்.
  • திருவிளையாடற் புராணம் = மூன்றுகாண்டம், 3363 பாடல்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • தேம்பாவணி = 3 காண்டம், 36 படலங்கள், 3615 பாடல்கள்.
  • சீறாப்புராணம் = 3 காண்டம் 92 படலங்கள், 5027 பாடல்கள்.
  • இரட்சணிய யாத்திரிகம் = 5 பருவங்கள், 47 படலங்கள், 3776 பாடல்கள்.
  • இராவணகாவியம் = 5 காண்டம் 57 படலங்கள், 3100 விருத்தங்கள்.
  • ஏசு காவியம் = ஐந்துபாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்களும் 2346 அகவலடிகளும் கொண்டது.
  • தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியவனாக உள்ளதையே தமிழின் தனிச் சிறப்பு எனக் கொண்டாடுகிறோம்.
  • தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி.
  • உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப் பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே.
  • சைவம் பன்னிருதிருமுறையையும் வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கி வருகின்றன.
  • இது நெடுங்காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.
  • தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை, திருப்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவ சமயக்கீர்த்தனைகள், இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்த்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ் மொழிகள் உலகில் வேறு எம் மொழியிலும் இல்லை.
  • தமிழ் மொழியிலே நிறைவாக உள்ளன என்பதையே தமிழின் தனிச்சிறப்பு எனக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றோம்.

 

 

Leave a Reply