10 ஆம் வகுப்பு கம்பராமாயணம்

10 ஆம் வகுப்பு கம்பராமாயணம்
- வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
- கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.
- கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
- கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
6.3x
- காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
- இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்கு கதி” என்பர்.
- குகப்படலம் அயோத்தியா காண்டத்தில் ஏழாவது படலம் ஆகும். இதனை கங்கைப் படலம் எனவும் கூறுவர்.

கம்பர் ஆசிரியர் குறிப்பு
- கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார்.
- இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
- கம்பரின் தந்தையர் ஆதித்தன்.
- கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
- இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
- காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
- தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
- கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
- சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
- கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
- “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

சொற்பொருள்
- ஆயகாலை – அந்த நேரத்தில்
- அம்பி – படகு
- நாயகன் – தலைவன்
- நாமம் – பெயர்
- கல் – மலை
- திரள் – திரட்சி
- துடி – பறை
- அல் – இருள்
- சிருங்கிபேரம் – கங்கைகரையோர நகரம்
- திரை – அலை
- மருங்கு – பக்கம்
- நாவாய் – படகு
- நெடியவன் – இராமன்
- இறை – தலைவன்
- பண்ணவன் – இலக்குவன்
- பரிவு – இரக்கம்
- குஞ்சி – தலைமுடி
- மேனி – உடல்
- மாதவர் – முனிவர்
- முறுவல் – புன்னகை
- விளம்பல் – கூறுதல்
- கார்குலாம் – மேகக்கூட்டம்
- பார்குலாம் – உலகம் முழுவதும்
- குரிசில் – தலைவன்
- இருத்தி – இருப்பாயாக
- நயனம் – கண்கள்
- இந்து – நிலவு
- நுதல் – நெற்றி
- கடிது – விரைவாக
- முரிதிரை – மடங்கிவிழும் அலை
- அமலன் – குற்றமற்றவன்
- இளவல் – தம்பி
இலக்கணக்குறிப்பு
- போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- கல்திரள்தோள் – உவமைத்தொகை
- நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
- இருந்தவள்ளல் – பெயரெச்சம்
- வந்துஎய்தினான் – வினையெச்சம்
- கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- குறுகி, சேவிக்க – வினையெச்சம்
- கழல் – தானியாகுபெயர்
- அழைத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
- வருக – வியங்கோள் வினைமுற்று
- பணிந்து, வளைத்து, புதைத்து – வினையெச்சம்
- இருத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
- தேனும் மீனும் – எண்ணும்மை
- மாதவர் – உரிச்சொற்றொடர்
- அமைந்த காதல் – பெயரெச்சம்
- தழீஇய – சொல்லிசை அளபெடை
- கார்குலாம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- உணர்த்துவான் – வினையாலணையும் பெயர்
- தீராக் காதலன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- மலர்ந்த கண்ணன் – பெயரெச்சம்
- இனிய நண்ப – குறிப்புப் பெயரெச்சம்
- நெடுநாவாய் – பண்புத்தொகை
- தாமரை நயனம் – உவமைத்தொகை
- நனிகடிது – உரிச்சொற்றொடர்
- நெடுநீர் – பண்புத்தொகை
- என்னுயிர் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- நன்னுதல் – பண்புத்தொகை
- நின்கேள் – நான்காம் வேற்றுமைத்தொகை
தொல்காப்பிய நெறி நின்ற கம்பர்
- “வடசொல் கிளவி வடஎழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = தொல்காப்பியம்.
- வடசொல்லைப் பயன்படுத்தும்போது வடஎழுத்தை நீக்கித் தமிழ்ப்படுத்தவேண்டும் என்னும் தொல்காப்பிய இலக்கணப்படி ராமன், ஹனுமன், லஷ்மணன், விபீஷணன் என்னும் பெயர்களை இராமன், அனுமன், இலக்குவன், வீடணன் என நெறிப்படுத்திய தமிழ் வேந்தர் கம்பரே! வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்தவர் இவரே.

திருக்குறளும் கம்பராமாயணமும்
- “உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் = கால்டுவெல்.
- கடவுள் வாழ்த்து
- திருக்குறள்
- ஏலாதி
- உயர்தனிச் செம்மொழி
- பரிதிமாற் கலைஞர்
- எழுத்து
- சொற்றொடர் வகைகள்
- சிலப்பதிகாரம்
- தமிழ் வளர்ச்சி
- பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
- சொல்
- தொகைச்சொல்