10 ஆம் வகுப்பு சொல்
10 ஆம் வகுப்பு சொல்
- ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
- சொல்லின் பொருள் தரும் பிரச் சொற்கள் = பதம், கிளவி, மொழி.
பதம் எத்தனை வகைப்படும்
- பதம் இரண்டு வகைப்படும். அவை,
- பகுபதம் (பகுக்க இயலும் பதம்)
- பகாப்பதம் (பகுக்க இயலாப் பதம்)
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மொழி எத்தனை வகைப்படும்
- மொழி மூன்று வகைப்படும். அவை,
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
கிளவி என்றால் என்ன
- இரட்டைக்கிளவி (இரட்டைச்சொல்)
- ஓரெழுத்து சொற்கள் = பூ, கை, தா, வா
- சொற்கள் = இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகள் சேர்த்து உருவாக்குவது.
மூவகை மொழிகள் யாவை
- மொழி மூன்று வகைப்படும். அவை,
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
தனிமொழி என்றால் என்ன
- ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி.
- எ.கா = வா, கண், செய்தான்.
தொடர்மொழி என்றால் என்ன
- இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சொற்கள் தொடர்ந்துவந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி.
- எ.கா = படம் பார்த்தான்.
- எ.கா = பசுவும் கன்றும் தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருக்கின்றன.
பொது மொழி என்றால் என்ன
- ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்துநின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது, பொதுமொழி.
- எ.கா = அந்தமான்.
- ‘அந்தமான்” என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த + மான் எனப் பிரிந்து நின்று, அந்த மான் (விலங்கு) என வேறுபொருளையும் தருகின்றது.
- எ.கா = பலகை, வைகை, தாமரை, வேங்கை
வினைச்சொல் என்றால் என்ன
- எ.கா = இராமன் வந்தான், கண்ணன் நடந்தான்.
- இத்தொடர்களில் இராமன், கண்ணன் என்பன பெயர்ச்சொற்கள்.
- அவையே எழுவாய்களாகவும் உள்ளன.
- வந்தான், நடந்தான் ஆகிய சொற்கள் வருவதும், நடப்பதும் ஆகிய செயல்களைக் குறிப்பதால், இவை வினைச்சொற்கள்.
- இவையே பயனிலைகளாகவும் ( முடிக்கும் சொற்களாகவும் ) உள்ளன.
- இவ்வாறு, எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள்.
வினைமுற்று என்றால் என்ன
- எ.கா = அருளரசு வந்தான். வளவன் நடந்தான்.
- இத்தொடர்களில் வந்தான், நடந்தான் என்னும் வினைச்சொற்களின் பொருள் முற்றுப்பெற்று வந்துள்ளன.
- இவ்வாறு, தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர்.
- இது முற்றுவினை எனவும் வழங்கப்படும்.
- ‘வந்தான், நடந்தான்’ என்னும் வினைமுற்றுகள் ‘ஆன்’ என்னும் விகுதி பெற்றுள்ளதால், உயர்திணையையும், ஆண்பாலையும், ஒருமை என்ற எண்ணையும், படர்க்கை இடத்தையும், உணர்த்துகின்றன. ‘த்’ என்ற இடைநிலை வந்துள்ளதால் ( நட + த் (ந்) + த் + ஆன்); (வா (வ) + த் (ந்) + த் + ஆன்) இஃது இறந்த காலத்தையும் உணர்த்துகிறது.
- வினைமுற்று எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும்; முக்காலங்களில் ஒன்றை உணர்த்தும்; திணை, பால், எண், இடங்களைக் காட்டும்.
வினைமுற்று எத்தனை வகைப்படும்
- வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை,
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன
- செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று.
- எ.கா = உழுதான்.
- செய்பவன் = உழவன்
- கருவி = கலப்பை
- நிலம் = வயல்
- செயல் = உழுதல்
- காலம் = இறந்தகாலம்
- செய்பொருள் = நெல்
குறிப்பு வினைமுற்று என்றால் என்ன
- பொருள்முதல் ஆறனையும் அடிப்படையாகக்கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.
- அவன் பொன்னன் = பொன்னை உடையவன் = பொருள்
- அவன் விழுப்புரத்தான் = விழுப்புரத்தில் வாழ்பவன் = இடம்
- அவன் சித்திரையான் = சித்திரையில் பிறந்தவன் = காலம்
- அவன் கண்ணன் = கண்களை உடையவன் = சினை
- அவன் நல்லன் = நல்ல இயல்புகளை உடையவன் = குணம்
- அவன் உழவன் = உழுதலைச் செய்பவன் = தொழில்
- அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த ‘பொன்னன்’ என்பதே குறிப்பு வினை ஆகும்.
- பொன்னை உடையவனாய் இருந்தான், இருக்கின்றான், இருப்பான் எனப் பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்துகிறது.
எச்சம் என்றால் என்ன
- எ.கா = கயல்விழி படித்தாள். கோதை சென்றாள்.
- இத்தொடர்களில் படித்தாள், சென்றாள் என்பன வினைமுற்றுகள்.
- இவ்வினைமுற்றுகள் சில இடங்களில் ‘ஆள்’ என்னும் விகுதி குறைந்து படித்த, சென்ற எனவும், படித்து, சென்று எனவும் வரும்.
- இச்சொற்கள் பொருளில் முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள்;
- ஆதலால், எச்சம் எனப்படும்; அல்லது வினைமுற்றின் (ஆள்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும்.
பெயரெச்சம் என்றால் என்ன
- எ.கா = படித்த கயல்விழி. சென்ற கோதை.
- படித்த, சென்ற என்னும் முற்றுப்பெறாத எச்சவினைகள் கயல்விழி, கோதை எனப் பெயரைக்கொண்டு முடிந்ததால் அவை பெயரெச்சங்கள் எனப்படும்.
- அஃதாவது, ஓர் எச்சவினை ( வந்த, நடந்த ) பெயரைக்கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும்.
காலவகையால் பெயரெச்சம் எத்தனை வகைப்படும்
- காலவகையால் பெயரெச்சம் மூன்று வகைப்படும். அவை,
- இறந்தகாலப் பெயரெச்சம் = படித்த கயல்விழி, சென்ற கோதை
- நிகழ்காலப் பெயரெச்சம் = படிக்கின்ற கயல்விழி, செல்கின்ற கோதை
- எதிர்காலப் பெயரெச்சம் = படிக்கும் கயல்விழி, செல்லும் கோதை
பெயரெச்சம் எத்தனை வகைப்படும்
- பெயரெச்சம் இரண்டு வகைப்படும். அவை,
- தெரிநிலைப் பெயரெச்சம்
- குறிப்பு பெயரெச்சம்
தெரிநிலைப் பெயரெச்சம் என்றால் என்ன
- எ.கா = வந்த பையனைப் பார்த்துக் கண்ணன் நின்றான்.
- இத்தொடரில் வந்த என்பது பையன் என்னும் பெயரைக்கொண்டு முடிவதால், பெயரெச்சம் எனப்படும். செய்த, செய்கின்ற, செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் உரிய பெயரெச்ச வாய்பாடுகள்.
- இவை முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டிச் செய்பவன் முதலான ஆறும் எஞ்சி நிற்கும்.
- இவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.
- எ.கா = உண்ட இளங்கோவன்.
- செய்பவன் = இளங்கோவன்
- கருவி = கலம்
- நிலம் = வீடு
- செயல் = உண்ணுதல்
- காலம் = இறந்த காலம்
- செய்பொருள் = சோறு
- உண்கின்ற இளங்கோவன், உண்ணும் இளங்கோவன் என நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் பெயரெச்சங்களையும் மேற்கண்டவாறே பொருத்திக் காணலாம்.
- உடன்பாடு = (எ-டு) உண்ட இளங்கோவன்
- எதிர்மறை = உண்ணாத இளங்கோவன்
குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன
- காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடியும் எச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
- எ.கா = நல்ல பையன்
- இத்தொடரில் நல்ல என்னும் சொல் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிந்துள்ளது.
- இது காலத்தைக் ( இன்று நல்ல பையன், நேற்று நல்ல பையன், நாளை நல்ல பையன் ) குறிப்பால் உணர்த்தும்.
வினையெச்சம் என்றால் என்ன
- முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.
- எ.கா = படித்து வந்தான், பாடக் கேட்டான், ஓடிச் சென்றான், போய்ப் பார்த்தான்.
- அஃதாவது, ஓர் எச்சவினை, வினையைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும்.
காலவகையால் வினையெச்சம் எத்தனை வகைப்படும்
- காலவகையால் வினையெச்சம் மூன்று வகைப்படும். அவை,
- இறந்தகால வினையெச்சம் = படித்து வந்தான், ஓடிச் சென்றான்
- நிகழ்கால வினையெச்சம் = படித்துவருகின்றான், ஓடிச் செல்கின்றான்
- எதிர்கால வினையெச்சம் = படித்து வருவான், ஓடிச் செல்வான்.
- இவ்வினையெச்சமும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.
- பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா.
- வினையெச்சத்தில் எச்சங்கள் மாறா.
- மேலே காட்டியதுபோல அவை முக்கால வினைமுற்றுகளையும் பெற்றுவரும்.
தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன
- எ.கா = படித்துத் தேறினான். படிக்கச் செல்கின்றான்.
- இத்தொடர்களில் படித்து, படிக்க என்னும் சொற்கள் எச்ச வினையாய் நின்று காலத்தைக் காட்டித் தேறினான், செல்கின்றான் ஆகிய வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன.
- இவ்வாறு காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன
- எ.கா = மெல்லப் பேசினான். கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்.
- இவ்விரு தொடர்களிலும் உள்ள மெல்ல, இன்றி என்னும் எச்ச வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளன.
- ஆகையால், இவை குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
முற்றெச்சம் என்றால் என்ன
- எ.கா = மைதிலி வந்தனள் பாடினள். முருகன் படித்தனன் தேறினன்.
- இத்தொடர்களில், வந்தனள், படித்தனன் என்னும் வினைமுற்றுகள் வந்து, படித்து என்னும் வினையெச்சப் பொருள்களில் நின்று, வேறு வினைமுற்றுகளைக் கொண்டு முடிந்துள்ளன.
- இவ்வாறு ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப்பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவதே முற்றெச்சம் எனப்படும்.
- கடவுள் வாழ்த்து
- திருக்குறள்
- ஏலாதி
- உயர்தனிச் செம்மொழி
- பரிதிமாற் கலைஞர்
- எழுத்து
- சொற்றொடர் வகைகள்
- சிலப்பதிகாரம்
- தமிழ் வளர்ச்சி
- பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
- 10 ஆம் வகுப்பு சொல்
- 10 ஆம் வகுப்பு சொல்
- 10 ஆம் வகுப்பு சொல்
- 10 ஆம் வகுப்பு சொல்
- 10 ஆம் வகுப்பு சொல்