10TH TAMIL இரட்டுற மொழிதல்
10TH TAMIL இரட்டுற மொழிதல்
- விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது.
- இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது.
- தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.
- “தமிழ், ஆழிக்கு இணை” (தமிழுக்கு கடலுக்கு இணை” என கருதி பாடியவர் = சந்தக்கவிமணி தமிழழகனார்.
அருஞ்சொற்பொருள்
- துய்ப்பது – கற்பது, தருதல்
- மேவலால் – பொருந்துதலால், பெறுதலால்
தமிழும் கடலும் (ஆழி) இணை
பாடல் |
தமிழுக்கு | கடலுக்கு (ஆழி) |
முத்தமிழ் | இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் |
முத்தினைஅமிழ்ந்து எடுத்தல் |
முச்சங்கம் |
முதல், இடை,கடை ஆகிய முச்சங்கம் | மூன்று வகையான சங்குகள் தருதல் = வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் |
மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) | ஐம்பெரும் காப்பியங்கள் |
மிகுதியான வணிகக் கப்பல்கள் |
சங்கத்தவர் காக்க |
சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை |
நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல் |
மூன்று வகை சங்குகள் யாவை
- மூன்று வகை சங்குகள் = வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம்.
இரட்டுற மொழிதல் என்றால் என்ன
- ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்.
- இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர்.
- செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சந்தக்கவிமணி தமிழழகனார்
- புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது.
- இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார்.
- சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
- இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
- சந்தக்கவிமணி தமிழழகனார் இயற்பெயர் = சண்முகசுந்தரம்.
- சந்தக்கவிமணி தமிழழகனார் படைத்த சிற்றிலக்கிய நூல்கள் = 12.