10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்
10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

  • சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோப்பு; இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டம்; இக்கால இலக்கியம் நம் பூங்கா.

நவீன கால இலக்கியங்கள்

  • சங்கப் பாடல்களுக்கு பின், தமிழ் இலக்கியம் அறஇலக்கியமாகி, காப்பியங்களாகி, சிற்றிலக்கியங்களாகி, சந்தக் கவிதைகளாகி, புதுக்கவிதைகளாகி, இப்பொழுது நவீன கவிதை வடிவங்களில் வந்து நிற்கிறது.
  • உரைநடையோ அளவற்ற வளர்ச்சி அடைந்துள்ளது.
  • உணர்சிகளைக் காட்ட உவமை கொண்ட மொழிநடையே ஏற்ற கருவி ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நா பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்

  • “திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப்போல் வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்” என்று குறிஞ்சிமலர் என்னும் நூலில் நா.பார்த்தசாரதி “உவமை”யைப் பயன்படுத்தியுள்ளார்.
  • “குறிஞ்சிமலர்” என்ற நூலின் ஆசிரியர் = நா. பார்த்தசாரதி.

உவமை, உருவகம்

  • தண்டியலங்காரம்” என்னும் இலக்கண நூலை எழுதிய “தண்டி”, உருவகத்தைப் பற்றி ‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்’ என்று கூறியுள்ளார்.
  • ‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்’ என்று கூறியவர் = தண்டியலங்காரம் நூலின் ஆசிரியர் தண்டி.
  • தற்போதைய நவீன இலக்கியங்களில் உவமையை விட உருவகமே உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றிபெறுகின்றது.
  • 10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

அறிஞர் அண்ணா

  • அறிஞர் அண்ணா அவர்களின் உரைநடைக்கு சான்று = “களம்புகத் துடித்து நின்ற உனக்கு. வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது. உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று”.

இணை ஒப்பு என்றால் என்ன

  • உவம உருபு மறைந்து வந்தால், அதற்கு எடுத்துக்காட்டு உவமை அணி என்று பெயர்.
  • உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் “இணை ஒப்பு” (analogy) என்பர்.
  • எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதனை “இணை ஒப்பு” என்பர்.

வ.ராமசாமியின் `மழையும் புயலும்’

  • “மழையும் புயலும்” என்ற நூலின் ஆசிரியர் = வ.ராமசாமி
  • “ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள். ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது, புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை” என்று எழுத்தாளர் வ.ராமசாமி `மழையும் புயலும்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கணை என்றால் என்ன

  • அஃறிணைப் பொருள்களையும் உயர்திணைப் பொருள்களாக கற்பனை செய்தல் = இலக்கணை.
  • உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்தல்.
  • தொல்காப்பியர், “ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்’ (செய்யுளியல், 192) என்று எழுதும் திறத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
  • 10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்

  • தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் கூறுதல் = “சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும், ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல், என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா ?” என்னும். அரசு கண்ணிற்படும். ‘யான் விழுதின்றி வானுற ஓங்கிநிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண்’ என்னும். ‘வேம்பு, என் நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன் வா’ என்னும். அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்”

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை

  • சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை கூறுவதாவது = “தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் நறுமணங் கமழும்! கோலமாமயில் தோகை விரித்தாடும்; தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும்; இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்திறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும்பொழுது சிதறும் நீர்த் திவலைகள் பாலாவிபோற் பரந்தெழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும்”.

மு. வரதராசனார்

  • சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்தவர் = மு.வரதராசனார்.
  • மு.வரதராசனார் அவர்கள், வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள்பல வேண்டும். அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும். காசும் காகித நோட்டும் வேண்டும், இன்னும் பல வேண்டும். இவற்றை ஆளும் அறிவும் வேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.
  • “நாட்டுப்பற்று” என்ற கட்டுரையை எழுதியவர் = மு.வரதராசனார்.
  • 10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

முரண்படு மெய்ம்மை என்றால் என்ன

  • படிப்பவருக்கு முரண்படுவதுபோல இருக்கும்; உண்மையில் முரண்படாத – மெய்ம்மையைச் சொல்லுவது ‘முரண்படு மெய்ம்மை’ (paradox) எனப்படும்.
  • எ.கா:
    • “இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்படவேண்டும்?”

சொல் முரண் என்றால் என்ன

  • முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுவது, “சொல் முரண்” (Oxymoron) என்பர்.
  • எ.கா:
    • கலப்பிலாத பொய்

எதிரிணை இசைவு என்றால் என்ன

  • சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து எழுதுவது = “எதிரிணை இசைவு” (Antithesis) என்பர்.
  • எ.கா;
    • தோழர் ப.ஜீவானந்தம் எழுதியது = “குடிசைகள் ஒரு பக்கம்: கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்: மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!”
    • 10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

உணர்ச்சி பெருவெள்ளம் என்றால் என்ன

  • விடைதரவேண்டிய தேவை இல்லாமல் கேள்வியிலேயே பதில் இருப்பதைப் போல எழுதுதல் ஆகும்.
  • இது உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு உதவக்கூடியது.
  • பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா பேசியது = “”அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?… எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் – என்று கூறுகிறேன்.”

உச்சநிலை என்றால என்ன

  • சொல்லையோ கருத்தையோ அடுத்தடுத்து வைக்கும் முறையிலே உள்ள சிறப்புதான் = “உச்சநிலை” (climax) என்பர்.
  • எ.கா;
    • பாரதி கூறுதல் = “”இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை. இந்தியாதான் என் இளமையின் மெத்தை: என் யௌவனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி”

எழில்முதல்வன் ஆசிரியர் குறிப்பு

  • எழில்முதல்வன் அவர்களின் இயற்பெயர் = மா.இராமலிங்கம்.
  • இவர் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர்.
  • குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்தவர்.
  • மரபுக் கவிதை, புதுக்கவிதை படைப்பதிலும் வல்லவர்.
  • எழில்முதல்வன் எழுதிய நூல்கள் = இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய், புதிய உரைநடை.
  • சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழில்முதல்வனின் நூல் = புதிய உரைநடை.
  • 10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்

முதல் தமிழ்க் கணினி

10TH TAMIL உரைநடையின் அணிகலன்கள்
முதல் தமிழ்க் கணினி
  • முதல் தமிழ்க் கணினி = திருவள்ளுவர்.
  • தமிழ் மறையான திருக்குறளைத் தந்த “திருவள்ளுவர்” பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது.
  • இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது.
  • இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது.
  • சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் “திருவள்ளுவரே”!

திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை

  • “வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிலப்பதிகாரம், காடுகான் காதை
  • “சிறுமலை” என்ற ஊர் = தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை.

Leave a Reply