10TH TAMIL முல்லைப்பாட்டு
10TH TAMIL முல்லைப்பாட்டு
- வலம்புரிச் சங்கு பொறித்த கைகளை உடையவன் = திருமால்.
- திருமாலுக்கு நீர் வார்த்துக் கொடுத்தவன் = மாவலி மன்னன்.
அருஞ்சொற்பொருள்
- நனந்தலை உலகம் = அகன்ற உலகம்
- நேமி = சக்கரம்
- கோடு = மலை
- கொடுஞ்செலவு = விரைவாகச் செல்லுதல்
- நறுவீ = நறுமணமுடைய மலர்கள்
- தூஉய் = தூவி
- விரிச்சி = நற்சொல்
- சுவல் = தோள்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இலக்கணக்குறிப்பு
- மூதூர் = பண்புத்தொகை
- உறுதுயர் = வினைத்தொகை
- கைதொழுது = மூன்றாம் வேற்றுமைத் தொகை
- தடக்கை = உரிச்சொல் தொடர்
விரிச்சி என்றால் என்ன
- “விரிச்சி” என்பதன் பொருள் = நற்சொல்
- ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்;
- அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.
முல்லை நிலத்தின் முதல் கரு உரிப்பொருள்கள்
முதற்பொருள் |
நிலம் |
முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்) | |
பொழுது |
பெரும் பொழுது |
கார்காலம், ஆவணி, புரட்டாசி |
|
சிறுபொழுது |
மாலை |
கருப்பொருள் |
நீர் | குறுஞ்சுனை நீர், காட்டாறு |
மரம் |
கொன்றை, காயா, குருந்தம் |
|
பூ |
முல்லை, பிடவம், தோன்றிப்பூ |
உரிப்பொருள் |
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்) |
முல்லைப்பாட்டு
- முல்லைப் பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
- முல்லைப் பாட்டு 103 அடிகளைக் கொண்டது.
- முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
- முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது.
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது.
- இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.