10TH TAMIL முல்லைப்பாட்டு

10TH TAMIL முல்லைப்பாட்டு

10TH TAMIL முல்லைப்பாட்டு

10TH TAMIL முல்லைப்பாட்டு

  • வலம்புரிச் சங்கு பொறித்த கைகளை உடையவன் = திருமால்.
  • திருமாலுக்கு நீர் வார்த்துக் கொடுத்தவன் = மாவலி மன்னன்.

அருஞ்சொற்பொருள்

  • நனந்தலை உலகம் = அகன்ற உலகம்
  • நேமி = சக்கரம்
  • கோடு = மலை
  • கொடுஞ்செலவு = விரைவாகச் செல்லுதல்
  • நறுவீ = நறுமணமுடைய மலர்கள்
  • தூஉய் = தூவி
  • விரிச்சி = நற்சொல்
  • சுவல் = தோள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

இலக்கணக்குறிப்பு

  • மூதூர் = பண்புத்தொகை
  • உறுதுயர் = வினைத்தொகை
  • கைதொழுது = மூன்றாம் வேற்றுமைத் தொகை
  • தடக்கை = உரிச்சொல் தொடர்

விரிச்சி என்றால் என்ன

  • “விரிச்சி” என்பதன் பொருள் = நற்சொல்
  • ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்;
  • அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

முல்லை நிலத்தின் முதல் கரு உரிப்பொருள்கள்

 

 

முதற்பொருள்

நிலம்

முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்)
 

பொழுது

பெரும் பொழுது

கார்காலம், ஆவணி, புரட்டாசி

சிறுபொழுது

மாலை

 

கருப்பொருள்

நீர் குறுஞ்சுனை நீர், காட்டாறு

மரம்

கொன்றை, காயா, குருந்தம்

பூ

முல்லை, பிடவம், தோன்றிப்பூ

உரிப்பொருள்

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)

முல்லைப்பாட்டு

  • முல்லைப் பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • முல்லைப் பாட்டு 103 அடிகளைக் கொண்டது.
  • முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது.
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது.
  • இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.

 

 

 

Leave a Reply