11 ஆம் வகுப்பு எந்நாளோ

11 ஆம் வகுப்பு எந்நாளோ

11 ஆம் வகுப்பு எந்நாளோ
11 ஆம் வகுப்பு எந்நாளோ

11 ஆம் வகுப்பு எந்நாளோ

  • பழமையின் பெருமையை அடித்தளமாகவும் துறைதோறும் முகிழ்க்கும் புதிய களங்களைப் பாடுபொருளாகவும் கொண்டு எழுந்தவைதாம் மறுமலர்ச்சியிலக்கியங்களாகும்.
  • இவற்றைச் சுவைபுதிது பொருள்புதிது அழியாதசோதிமிக்க நவகவிதை எனலாம்.
  • இவை மானிடத்தின் விழுப்பொருள்களையும் அவலங்களையும் புதிய நோக்குடன் பார்க்கும்; புத்தம் புதிய கலைகளைத் திசைதோறும் தேர்ந்து செந்தமிழுக்குச் சேர்க்கும்.
  • புதிய அணுகுமுறைகள், புத்தம் புதிய கற்பனைகள், படிமநோக்கு இவற்றையுடைய இற்றைநாட்பாவலர்களால் தமிழ் இலக்கியம் புதிய செழிப்பினைப்பெறும் என்று நம்பலாம்.
  • இப்பாவலர்கள் நமது மரபென்னும் மண்ணுக்குள் வேரூன்றியவர்கள்; புதுமையென்னும் விண்ணுக்குக் கிளை நீட்டுபவர்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு

  • “பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அத்தனையும் படைப்பாய் இந்நாள்! தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே” என்று பாடியவர் = பாவேந்தர் பாரதிதாசன்.
  • “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் அழைக்கப்படுபவர் = பாரதிதாசன்.
  • பாரதியார் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாகச் சுப்புரத்தினம் என்ற பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர்.
  • பாரதிதாசன் பிறந்த தினம் = 29-04-1891
  • பெற்றோர் = கனகசபை – இலக்குமியம்மாள்
  • பிறந்த ஊர் = புதுச்சேரி
  • இளமையிலேயே பிரெஞ்சு மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறந்த புலமை பெற்றவர்.
  • தமிழ் மொழியிடத்தும் தமிழ் மக்களிடத்தும் ஆராத அன்பு பூண்டவர்.
  • தமிழ் நாட்டின் இரசூல் கம்சதோவ் என்று பாராட்டப் பெறுபவர், (இரசூல் கம்சதோவ் உருசிய நாட்டின் மாக்கவிஞர்).
  • ‘உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே’ என்றும் “இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்” என்று தமிழர்க்காகவும் எழுதியவர்.
  • குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, இருண்டவீடு, தமிழச்சியின் கத்தி, சேரதாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு ஆகிய காப்பியங்களையும் இறவாப் புகழ் பெற்ற எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர்.
  • இவரியற்றிய பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்றது.
  • “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற இவரின் தமிழ்வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ளது.
  • தமிழக அரசு பாரதிதாசன் பல்கலைக் கழகம் நிறுவி இவர் புகழைப் போற்றியுள்ளது.
  • குயில் என்ற இலக்கிய இதழை நடத்திவந்த இந்தப் புதுவைக் குயில் 21-4-1964 அன்று இயற்கை யெய்தியது.

 

சொற்பொருள்

  • பராக்கிரமம் = வீரம்
  • உன்னதம் = உயர்வு
  • இமமலை = இமயமலை
  • கீர்த்தி = புகழ்
  • நிகர்த்த = போன்ற
  • சமானத்தர் = ஒத்தஉரிமை உடையவர்
  • பண் = பாடல்
  • புதுக்கும் நாள் = புதியதாக அமைக்கும் நாள்
  • சொக்கும் நாள் = மகிழ்ச்சியால் மயங்கும் நாள்

இலக்கணக்குறிப்பு

  • இயம்பக் கேட்டிடல் = செயவென் வாய்பாட்டு
  • வினையெச்சம்
  • அருந்தமிழ் = பண்புத்தொகை
  • புதுக்குநாள், பருகுநாள், பாயு நாள் = வினைத்தொகைகள்
  • பகர்வார் = வினையாலணையும் பெயர்
  • தண்கடல் = பண்புத்தொகை.

Leave a Reply