11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து
11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து
- தொடங்கும் செயல் இனிதே நிறைவுற இறைவனை வாழ்த்தும் மரபின்படி, இறைவாழ்த்து பாடப்படுகிறது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தாயுமானவர் ஆசிரியர் குறிப்பு
- தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் 1452 பாடல்கள் உள்ளன.
- இவர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெசவல்லி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார்.
- திருச்சியில் உள்ள தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் எனப் பெயரிடப்பட்டது.
- கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார்.
- அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார்.
- விஜயரங்க சொக்கநாதர் ஆட்சியிலும், அவர் மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணிபுரிந்தார்.
- இவரின் மனைவி மட்டுவார்குழலி.
- தாயுமானவரின் குரு = திருமூலர் மரபில் வந்த மௌனகுரு.
- இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்.
- காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.
தமிழ்மொழியின் உபநிடதம்
- தாயுமானவர் பாடல்கள் “தமிழ் மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படுகிறது.
சொற்பொருள்
- ஆரமிர்தே = அரிய அமிழ்தே
- பூரணமாய் = முழுமையாய்
- புனிதம் = தூய்மை
- விழுப்பொருள் = மேலானப்பொருள்
இலக்கணக்குறிப்பு
- பழச்சுவை = ஆறாம் வேற்றுமைத் தொகை
- தரும் பொருளே = செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
- காலமும் தேசமும் = எண்ணும்மை
- உயிர்த்திரள் = ஆறாம் வேற்றுமைத் தொகை
- விழுப்பொருள் = உரிச்சொற்றொடர்