11TH TAMIL இதழ்களின் அமைப்புமுறை
11TH TAMIL இதழ்களின் அமைப்புமுறை
- உலகின் பல்வேறு இடங்களில் நாள் தோறும் நடைபெறும் நிகழ்வுகளை மக்களுக்குக் கொண்டு செல்ல உதவும் கருவிகளே ஊடகங்கள்.
- மக்களாட்சியின் நான்காவது தூண் = ஊடகம்
ஊடகங்களின் வகைகள்
- ஊடகங்களை அச்சு, காட்சி, கேட்பு, இணையவழி ஊடகங்கள் என வகைப்படுத்தலாம்.
- செய்திப் பதிவுகளையும் படங்களையும் உள்ளடக்கிய இதழ்களே அச்சு ஊடகங்கள்.
- நிகழ்வுகளைக் காணொளிகளாக ஒளிபரப்பும் தொலைக்காட்சி, காட்சி ஊடகம்.
- நிகழ்வுகளை உரை வடிவங்களாக ஒலிபரப்பும் வானொலி, கேட்பு ஊடகம்.
- இன்றைய அறிவியல் வளர்ச்சியினால் அச்சு, காட்சி, கேட்பு ஆகிய ஊடகப்பதிவுகளை இணையவழி ஊடகம் ஒருங்கிணைக்கிறது.
இதழ்களின் வகைகள்
- நாள் தோறும் வெளியாகும் செய்தித்தாள்களை நாளிதழ்கள் எனவும் காலமுறைப்படி வெளியாகும் இதழ்களைப் பருவ இதழ்கள் எனவும் வகைப்படுத்தலாம்.
- பருவ இதழ்கள் வாரம், வாரமிருமுறை, மாதம், மாதமிருமுறை, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனக் கால இடைவெளியை வரையறுத்துக்கொண்டு வெளிவருகின்றன.
திரு.வி.க. வின் தமிழுணர்வு
- ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் திரு.வி.க எழுதினார். சிலப்பதிகாரத்தில் வரும் கௌந்தியடிகளைப் படிக்கும்போது காந்தியை, காந்தியடிகள் என்று குறிப்பிட வேண்டுமென்று தோன்றியதாகத் தமது நவசக்தி இதழில் எழுதியுள்ளார்.
- அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றே அவர் எழுதினார்.
- ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் அவர் உருவாக்கினார்.
- சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பி.வி. நரசிம்மன் என்பவர் முதன்முதலில் தமிழில் பேசியதை எந்த இதழும் வெளியிடாத நிலையில் தமது தேசபக்தன் இதழில் வெளியிட்டார்.
இதழியல் – சில முதன்மைகள்
- இந்திய இதழியலின் தந்தை = ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி
- இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் = பெங்கால் கெஜட் (1780) (கல்கத்தா ஜெனரல் அட்வைசர்)
- தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் = மதராஸ் மெயில் (1868)
- தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் = சுதேசமித்திரன் (1882)