11TH TAMIL இதழ்களின் அமைப்புமுறை

11TH TAMIL இதழ்களின் அமைப்புமுறை

11TH TAMIL இதழ்களின் அமைப்புமுறை

  • உலகின் பல்வேறு இடங்களில் நாள் தோறும் நடைபெறும் நிகழ்வுகளை மக்களுக்குக் கொண்டு செல்ல உதவும் கருவிகளே ஊடகங்கள்.
  • மக்களாட்சியின் நான்காவது தூண் = ஊடகம்

ஊடகங்களின் வகைகள்

  • ஊடகங்களை அச்சு, காட்சி, கேட்பு, இணையவழி ஊடகங்கள் என வகைப்படுத்தலாம்.
  • செய்திப் பதிவுகளையும் படங்களையும் உள்ளடக்கிய இதழ்களே அச்சு ஊடகங்கள்.
  • நிகழ்வுகளைக் காணொளிகளாக ஒளிபரப்பும் தொலைக்காட்சி, காட்சி ஊடகம்.
  • நிகழ்வுகளை உரை வடிவங்களாக ஒலிபரப்பும் வானொலி, கேட்பு ஊடகம்.
  • இன்றைய அறிவியல் வளர்ச்சியினால் அச்சு, காட்சி, கேட்பு ஆகிய ஊடகப்பதிவுகளை இணையவழி ஊடகம் ஒருங்கிணைக்கிறது.

இதழ்களின் வகைகள்

  • நாள் தோறும் வெளியாகும் செய்தித்தாள்களை நாளிதழ்கள் எனவும் காலமுறைப்படி வெளியாகும் இதழ்களைப் பருவ இதழ்கள் எனவும் வகைப்படுத்தலாம்.
  • பருவ இதழ்கள் வாரம், வாரமிருமுறை, மாதம், மாதமிருமுறை, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனக் கால இடைவெளியை வரையறுத்துக்கொண்டு வெளிவருகின்றன.

திரு.வி.க. வின் தமிழுணர்வு

11TH TAMIL இதழ்களின் அமைப்புமுறை
11TH TAMIL இதழ்களின் அமைப்புமுறை
  1. ‘தேசப்பிதா காந்திஜி’ யை முதன்முதலில் காந்தியடிகள் என்று குறிப்பிட்டு இதழ்களில் திரு.வி.க எழுதினார். சிலப்பதிகாரத்தில் வரும் கௌந்தியடிகளைப் படிக்கும்போது காந்தியை, காந்தியடிகள் என்று குறிப்பிட வேண்டுமென்று தோன்றியதாகத் தமது நவசக்தி இதழில் எழுதியுள்ளார்.
  2. அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றே அவர் எழுதினார்.
  3. ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் அவர் உருவாக்கினார்.
  4. சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பி.வி. நரசிம்மன் என்பவர் முதன்முதலில் தமிழில் பேசியதை எந்த இதழும் வெளியிடாத நிலையில் தமது தேசபக்தன் இதழில் வெளியிட்டார்.

இதழியல் – சில முதன்மைகள்

  1. இந்திய இதழியலின் தந்தை = ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி
  2. இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் = பெங்கால் கெஜட் (1780) (கல்கத்தா ஜெனரல் அட்வைசர்)
  3. தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் = மதராஸ் மெயில் (1868)
  4. தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் = சுதேசமித்திரன் (1882)

Leave a Reply