தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கணநூல் = தொல்காப்பியம்.
இதன் ஆசிரியர் தொல்காப்பியர்.
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது.
ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்களாக மொத்தம் இருபத்தேழு இயல்கள் உள்ளன.
தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.
அவர்களுள் பழமையான உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர் ஆகியோர் ஆவர்.
நச்சினார்க்கினியரின் சிறப்புப்பாயிர உரைவிளக்கத்தில் உள்ள பாடல் பாடமாக இடம் பெற்றுள்ளது.
தொகாப்பிய நூல் பதிப்பு
தொல்காப்பியம் முதன் முதலில் 1847 ஆம் ஆண்டு மகாலிங்கையரவர் என்பவரால், நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் எழுத்ததிகாரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
தமிழில் அச்சிடப்பட்ட முதல் இலக்கண நூல் = நன்னூல் (1835)
தொல்காப்பியம் முழுவதையும் முதன் முதலில் அச்சடித்து வெளியிட்டவர் = சாமுவேல்பிள்ளை ஆவார். இவர் 1858 ஆம் ஆண்டு இதனை வெளியிட்டார்.