11 TH TAMIL நன்னூல்

11 TH TAMIL நன்னூல்

11 TH TAMIL நன்னூல்
11 TH TAMIL நன்னூல்

11 TH TAMIL நன்னூல்

  • நூலைப் புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது.
  • தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இத்தகைய அமைப்பினை காணலாம்.

பாயிரம் என்றால் என்ன

  • நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றப் பேசுவது பாயிரமாகும்.
  • “ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே”

பாயிரத்தின் வேறு பெயர்கள்

11 TH TAMIL நன்னூல்
11 TH TAMIL நன்னூல்
  • பாயிரதிற்கு உரிய ஏழு பெயர்கள்,
      1. முகவுரை =  நூலுக்கு முன் சொல்லப்படுவது
      2. பதிகம் =  ஐந்து பொதுவும், 11 சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது.
      3. அணிந்துரை
      4. புனைந்துரை =  நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது
      5. நூன்முகம் =  நூலுக்கு முகம்போல முற்பட்டிருப்பது
      6. புறவுரை =  நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புரத்திலே சொல்வது
      7. தந்துரை =  நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து சொல்வது.

பாயிரத்தின் வகைகள்

11 TH TAMIL நன்னூல்
11 TH TAMIL நன்னூல்
  • பாயிரம் இரண்டு வகைப்படும். அவை,
      1. பொதுப்பாயிரம்
      2. சிறப்புப் பாயிரம்

நன்னூல் பொதுப்பாயிரம்

11 TH TAMIL நன்னூல்
11 TH TAMIL நன்னூல்
  • பொதுப்பாயிரத்தில் கூறப்படும் செய்திகள் = 5
  • நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.

சிறப்புப்பாயிரம் இலக்கணம்

11 TH TAMIL நன்னூல்
11 TH TAMIL நன்னூல்
  • சிறப்புப்பாயிரத்தில் கூறப்படும் செய்திகள் = 8
  • நன்னூல் கூறும் எட்டுச் செய்திகளையும் செம்மையாக தெரிவிப்பது சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும். அவை,
      1. நூலாசிரியர் பெயர்
      2. நூல் பின்பற்றிய வழி
      3. நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு
      4. நூலின் பெயர்
      5. தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு
      6. நூலில் குறிப்பிடப்படும் கருத்து
      7. நூலைக் கேட்போர் (மாணவர்)
      8. நூலை கற்பதனால் பெறுகின்ற பயன்
  • சிலர் மேலே கூறப்பட்டுள்ள எட்டு செய்திகளுடன் கூடுதலாக மூன்று செய்திகளையும் சேர்த்து இலக்கணம் கூறுவார். அவை,
      1. நூல் இயற்றப்பட்ட காலம்
      2. நூல் அரங்கேற்றப்பட்ட அவைக்களம்
      3. நூல் இயற்றப்பட்டதற்கான காரணம்
11 TH TAMIL நன்னூல்
11 TH TAMIL நன்னூல்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே

  • ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரன் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்ப்படாது.

11 TH TAMIL நன்னூல்

அணிந்துரை என்றால் என்ன

11 TH TAMIL நன்னூல்

  • மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்களைக் கொண்ட மகளிர்க்கு அணிகலன்களும் எழிலைத் தரும்.
  • அவை பொன்று எல்லாவகை நூல்களுக்கும் முன்னர் அழகு தருவதற்காக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர்.

நன்னூல் நூல் குறிப்பு

  • நன்னூல், தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழி நூல் ஆகும்.
  • இது பொ.ஆ. 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.

நன்னூல் நூல் அமைப்பு

  • இரண்டு அதிகாரங்களை கொண்டுள்ளது.
      1. எழுத்து அதிகாரம்
      2. சொல் அதிகாரம்
  • எழுத்து அதிகாரம் 5 பகுதிகளை கொண்டுள்ளது.
      1. எழுத்தியல்
      2. பதவியல்
      3. உயிரீற்றுப் புணரியல்
      4. மெய்யீற்றுப் புணரியல்
      5. உருபு புணரியல்
  • சொல் அதிகாரம் 5 பகுதிகளை கொண்டுள்ளது.
      1. பெயரியல்
      2. வினையியல்
      3. பொதுவியல்
      4. இடையியல்
      5. உரியியல்

நன்னூல் ஆசிரியர் குறிப்பு

  • நன்னூல் எழுதிய ஆசிரியர் = பவணந்தி முனிவர்
  • சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக் கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் எனப் பாயிரம் குறிப்பிடுகிறது.
  • ஈரோடு மாவட்டம், மேட்டுப்புத்தூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரான சந்திரப்பிரபாவின் கோவில் உள்ளது.
  • இங்கே பவணந்தி முனிவரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது.

அருஞ்சொற்பொருள்

  • பால் – வகை
  • இயல்பு – இலக்கணம்
  • மாடம் – மாளிகை
  • அமை – மூங்கில்

இலக்கணக்குறிப்பு

  • காட்டல், கோடல் = தொழிற்பெயர்கள்
  • ஐந்தும் = முற்றும்மை
  • கேட்போர் = வினையாலணையும் பெயர்
  • மாநகர் = உரிச்சொற்றொடர்

 

 

 

 

 

Leave a Reply