11TH TAMIL இலக்கண வரலாறு
11TH TAMIL இலக்கண வரலாறு
- ஒரு மொழிக்கு ஒழுங்கையும் சீர்மையையும் தருவது = இலக்கணம்.
- ஒரு மொழியின் கண் எனப்படுவது = இலக்கணம்.
இலக்கண நூல்களின் தோற்றம்
- தொல்காப்பிய பாயிரத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி |
- தொல்காப்பியத்தில் “என்ப, என்மனார் புலவர், மொழிப, மொழிமனார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொல்காப்பியத்திற்கு முன்னரே இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதனை காட்டுகிறது.
- இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணம் தோன்றியது.
இலக்கண நூல்களின் வளர்ச்சி
- தமிழில் இலக்கண நூல்கள் செய்யுள் வடிவத்தையும், உரைநடை வடிவத்தையும் கொண்டுள்ளன.
- பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் வடிவில் அமைந்த இலக்கண நூலாகும்.
- தொல்காப்பியத்தை பின்பற்றி பல இலக்கண நூல்கள் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டன.
- தொல்காப்பிய எழுத்து, சொல் ஆகிய அதிகாரங்களை அடிப்படையாக கொண்டு உருவான இலக்கண நூல்கள் = நன்னூல், நேமிநாதம்
- தொல்காப்பிய சொல் அதிகாரத்தை மட்டும் கொண்டு உருவான இலக்கண நூல்கள் = பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து
- தொல்காப்பிய அகத்திணையியல் கொண்டு உருவான இலக்கண நூல்கள் = இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள்
- தொல்காப்பிய புறத்திணையியல் கொண்டு உருவான இலக்கண நாள்கள் = புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு படலம்.
- தொல்காப்பிய செய்யுளியல் சார்ந்து உருவான இலக்கண நூல்கள் = யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை
- தொல்காப்பிய உவமவியல் சார்ந்து உருவான இலக்கண நூல்கள் = தண்டியலங்காரம், மாறனலங்காரம்.
- உரைநடை வடிவில் இலக்கண நூல்கள் உருவான காலம் = 19 ஆம் நூற்றாண்டு
- உரைநடை வடிவில் அமைந்த இலக்கண நூல்கள் = இலக்கணச் சுருக்கம், இலக்கணச் சுருக்க வினாவிடை