11TH TAMIL உலகச் சிறுகதை ஆசிரியர்கள்
11TH TAMIL உலகச் சிறுகதை ஆசிரியர்கள்
- உலக அளவில் சிறுகதையின் வடிவக் கூறுகளைக் கொண்ட கதைகள் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்தாலும், 19ஆம் நூற்றாண்டில்தான் முழுவீச்சில் வெளிப்படத் தொடங்கின.
- அமெரிக்க எழுத்தாளர்களான எட்கர் ஆலன்போ, ஓ ஹென்றி, நதானியல் ஹாதர்ன், வாசிங்டன் இர்விங் போன்றோர் சிறுகதையின் முழுமையான வடிவச் சிறப்போடு அமைந்த சிறுகதைகளைத் தந்தனர்.
- குறிப்பாக ஓ ஹென்றியின் கதைகளில் வரும் கடைசித் திருப்பம் இன்றுவரை உலகப்புகழ் பெற்று விளங்குகின்றது.
- பிரெஞ்சு எழுத்தாளர்களான போம்பெவல், மாப்பஸான், மெரிமீ, பால்சால்க் போன்றோர் சிறுகதையின் தொடக்ககால நிலையில் அதன் அனைத்துச் சாத்தியங்களோடும் படைத்துக் காட்டியவர்கள்.
- குறிப்பாக, இன்றளவும் மாப்பஸான் கதைகள் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன.
- தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான புதுமைப்பித்தன் “தமிழகத்தின் மாப்பஸான்” என்று அழைக்கப்படுவது, மாப்பஸான் கதைகளின் வீச்சினைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
- ரஷ்ய எழுத்தாளர்களான ஆண்டன் செகாவ், துர்கனேவ், கோகல் ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதைகளை எழுதியவர்கள்.
- செகாவ் சிறுகதை வடிவத்தை மிகச்சிறந்த கலைவடிவமாக்கியவர்.
- இவர் தம் சிறுகதைகள் நகைச்சுவையும் அங்கதமும் கலந்தவை.
- “ரஷ்ய சிறுகதையின் தந்தை” எனப் போற்றப்படும் கோகலின் ‘மேலங்கி என்னும் சிறுகதை எண்ணற்ற எழுத்தாளர்களை உருவாக்கிய கதை எனலாம்.
தமிழ் சிறுகதைகள்
ஆசிரியர் |
சிறுகதைகள் |
ஆர். சூடாமணி (உளவியல் எழுத்தாளர்) |
இறுக மூடிய கதவுகள் |
ஜெயகாந்தன் |
பூ உதிரும், ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள்?, சுந்தர காண்டம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் |
கந்தர்வன் |
சாசனம் |
சுந்தர ராமசாமி |
பிரசாதம் |
கி. இராஜநாராயணன் |
நிலைநிறுத்தல் |
சார்வாகன் |
யானையின் சாவு |
சோ. தர்மன் |
நசுக்கம் |
கே. பாலமுருகன் |
பேபி குட்டி |
தாமரைச்செல்வி |
பசி |
சத்யஜித்ரே |
அஷமஞ்சா பாபுவின் நாய் |
எஸ். ராமகிருஷ்ணன் |
ரப்பர் பந்து |
வண்ணதாசன் |
ஒரு சிறு இசை |
சாகித்திய அகாதமி பரிசு பெற்ற சிறுகதைகள்
வ.எண் |
ஆண்டு | சிறுகதை | ஆசிரியர் |
1 | 1970 | அன்பளிப்பு |
கு. அழகிரிசாமி |
2 |
1979 | சக்தி வைத்தியம் | தி. ஜானகிராமன் |
3 | 1987 | முதலில் இரவு வரும் |
ஆதவன் சுந்தரம் |
4 |
1996 | அப்பாவின் சிநேகிதர் | அசோகமித்திரன் |
5 | 2008 | மின்சாரப்பூ |
மேலாண்மை பொன்னுசாமி |
6 |
2010 | சூடிய பூ சூடற்க | நாஞ்சில் நாடன் |
7 |
2016 | ஒரு சிறு இசை |
வண்ணதாசன் |