11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

  • ஆதிகாலத்தில் மனிதன் தனது அனுபவத்தை அல்லது நடந்த நிகழ்வை அடுத்தவரிடம் விவரித்த பொழுது கதை சொல்லுதல் என்ற கலை துவங்கியது.
  • தொடக்கத்தில் தமிழ் மரபில் கதைகள் வாய் வழியாகவே சொல்லப்பட்டன.

தொல்காப்பியத்தில் உரைநடை மரபு

  • தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தமிழின் உரைநடை மரபை உணர்த்தும் அடிகள் அமைந்துள்ளன.

பொருள் மரபில்லாப் பொய்ம்மொழியானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்

  • தொல்காப்பிய உரையாசிரியர் அவர்கள், “பொருள் மரபில்லாப் பொய்ம்மொழியானும்” என்பதற்கு “கற்பனை கலந்த புனைவு மொழி” என்றும், “பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்” என்பதற்கு “உண்மை கலந்த வேடிக்கை பேச்சு” என்றும் பொருள் கூறியுள்ளார்.
  • “காக்காய் பார்லிமென்ட்” என்ற சிறுகதையை எழுதியவர் = பாரதியார்
  • “ஆறில் ஒரு பங்கு” என்ற சிறுகதை நூலினை எழுதியவர் = பாரதியார்.

சிறுகதை என்றால் என்ன

  • சிறுகதை என்பது ஒரு சம்பவம், ஒரு மனநிலை, ஒரு சிக்கல் என ஒரு பொருள் பற்றி மட்டுமே எழுதுவது.
  • எந்த நோக்கத்திற்காக கதை எழுதப்படுகிறதோ, அதை நோக்கியே கதையின் அணைத்து கூறுகளும் செல்லும் ஓர்மை கொண்டது.
  • வாசகன் ஊகிக்க முடியாத திருப்பம் கதையின் இறுதியில் அமைய வேண்டும்.

தமிழின் முதல் சிறுகதை

  • தமிழின் முதல் சிறுகதை = குளத்தங்கரை அரசமரம்
  • தமிழில் சிறுகதைக்காண வடிவ அமைப்புடன் வந்த முதல் சிறுகதை = குளத்தங்கரை அரசமரம்
  • குளத்தங்கரை அரசமரம் என்னும் சிறுகதையின் ஆசிரியர் = வ.வே.சு. ஐயர் எனப்படும் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணியம் ஐயர் ஆவார்.

ஐந்து தலைமுறை சிறுகதை படைப்பாளர்கள்

  • அ.மாதவையா அவர்களின் சிறுகதைகளும் தொடக்கக்கால சிறுகதைகளாக அறியப்படுகின்றன.
  • தமிழ்ச் சிறுகதை படைபாளர்களை 5 தலைமுறைகளாக பிரிப்பர்.

முதல் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள்

11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
  • தமிழ் நவீன இலக்கியத்தை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர் என்ற பெருமையை பெற்றவர் = புதுமைப்பித்தன் ஆவார்.
  • தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள் = புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, மௌனி, கு.ப.இராஜகோபாலன், பி.எஸ்.இராமையா, சிதம்பர சுப்பிரமணியன் ஆவர்.
  • இவர் அனைவரும் சிறுகதைகளை “மணிக்கொடி இதழில்” எழுதினர்.
  • இக்காலத்தை மணிக்கொடி காலம் என்றும் கூறுவர்.

இரண்டாம் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள்

11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

  • இரண்டாம் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள் = லா.ச.ராமாமிர்தம், க.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முகசுந்தரம்
  • இக்காலத்தில் சமரசம் இல்லா சமூக விமர்சனக் கதைகள் உருவாகின.
  • பெண் எழுத்தாளர்கள் = குமுதினி, டி.பி. ராஜலெட்சுமி, கி. சரஸ்வதியம்மாள்

மூன்றாம் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள்

11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்

  • தமிழ் சிறுகதைகள் உச்சம் தொட்ட தலைமுறை = மூன்றாம் தலைமுறை ஆகும்.
  • சிறுகதைகளில் எளிய மனிதர்களின் பண்புநலன்களை நுட்பமாகப் பதிவு செய்தவர் = கு.அழகிரிசாமி
  • சிறுகதைகளில் கவித்துவமான சொற்சித்திரங்களைப் படைத்தவர் = நகுலன்
  • சிறுகதைகளில் மனித உறவுகளையும் மனச்சலனங்களையும் சித்திரித்தவர் = தி. ஜானகிராமன்
  • சிறுகதைகளில் சிறந்த வடிவ ஓர்மையுடன் எழுதியவர் = சுந்தர ராமசாமி
  • சிறுகதைகளில் பெருநகர நடுத்தர வாழ்வை எழுதியவர் = அசோகமித்திரன்.
  • சிறுகதைகளில் வலியும் அவமானமும் நிறைந்த வாழ்வியலைப் பதிவுசெய்தவர் = ஜி.நாகராஜன்
  • சிறுகதைகளில் தம் கிராமியப் பின்புலத்தைக் களமாக்கிக் கொண்டு வட்டார மொழியில் கதைசொன்னவர் = கி.ராஜநாராயணன்
  • சிறுகதைகளில் பெருநகர வாழ்வியலைப் பெரிதும் எழுதியவர் = இந்திரா பார்த்தசாரதி
  • சிறுகதைகளில் கற்பனை தவிர்த்த இயல்புவாதப் படைப்புகளைத் தந்தவர் = நீல.பத்மநாபன்
  • சிறுகதைகளில் குழந்தை உளவியலைக் கதைகளாக்கியவர் = சார்வாகன்
  • சிறுகதைகளில் குறியீட்டுத் தன்மையுடன் எழுதியவர் = ந.முத்துசாமி
  • சிறுகதைகளில் வறுமையைச் சித்திரித்தவர் = ஆ. மாதவன்
  • சிறுகதைகளில் நாஞ்சில் நாட்டு (குமரி மாவட்டம்) மக்களின் வாழ்வை எழுத்தில் பதிவு செய்தவர் = மா.அரங்கநாதன்
  • சிறுகதைகளில் ஒரு பார்வையாளனாக வாழ்வை நேரடியாகப் பதிவு செய்தவர் = கரிச்சான்குஞ்சு
  • சிறுகதைகளில் எளிய மனிதர்களின் மனவோட்டங்களை எழுதியவர் = சா. கந்தசாமி
  • சிறுகதைகளில் முற்போக்கு எழுத்துகளால் மக்களுடன் நேரடியாக விவாதித்து, தம் கூர்மையான படைப்புகளால் பெரும்புகழ் பெற்றவர் = ஜெயகாந்தன்.
  • மூன்றாம் தலைமுறை பெண் எழுத்தாளர்கள் = ஆர். சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், கோமகள், லட்சுமி, அநுத்தம்மா.

நான்காம் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள்

11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
11TH TAMIL தமிழ்ச்சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
  • இத்தலைமுறை எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் மென்மையான மொழியில் வாழ்வின் நுட்பமான தருணங்களை எழுதினர்.
  • இத்தலைமுறை எழுத்தாளர்கள் = வண்ணநிலவன், வண்ணதாசன், விட்டல்ராவ், பூமணி, நாஞ்சில்நாடன், ஆதவன், பிரபஞ்சன், திலீப்குமார், ஜெயந்தன், தஞ்சை பிரகாஷ், தோப்பில் முகமது மீரான், ராஜேந்திர சோழன், சூர்யகாந்தன், சி.ஆர். ரவீந்திரன், சி.எம்.முத்து, கந்தர்வன், ச. தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ் கோடி ராமசாமி, வேல. ராமமூர்த்தி, சோலை சுந்தரபெருமாள், தேனி சீருடையான்
  • சிறுகதைகளில் மிகநவீனமான புனைவு நடையைக் கொண்டவர் = சுஜாதா.
  • நான்காம் தலைமுறை பெண் எழுத்தாளர்கள் = அம்பை, திலகவதி, வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி

ஐந்தாம் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள்

  • ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்கள் = எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பவா செல்லத்துரை, கோணங்கி, பெருமாள் முருகன், மு. சுயம்புலிங்கம், கோபிகிருஷ்ணன், இரா. முருகன், சுப்ரபாரதிமணியன், யூமாவாசுகி, சு.வேணுகோபாலன், கண்மணி குணசேகரன், சிவகாமி, பாமா, சோ. தர்மன், இமையம், அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா.

 

 

Leave a Reply