11TH TAMIL உலகச் சிறுகதை ஆசிரியர்கள்

11TH TAMIL உலகச் சிறுகதை ஆசிரியர்கள்
- உலக அளவில் சிறுகதையின் வடிவக் கூறுகளைக் கொண்ட கதைகள் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்தாலும், 19ஆம் நூற்றாண்டில்தான் முழுவீச்சில் வெளிப்படத் தொடங்கின.
- அமெரிக்க எழுத்தாளர்களான எட்கர் ஆலன்போ, ஓ ஹென்றி, நதானியல் ஹாதர்ன், வாசிங்டன் இர்விங் போன்றோர் சிறுகதையின் முழுமையான வடிவச் சிறப்போடு அமைந்த சிறுகதைகளைத் தந்தனர்.
- குறிப்பாக ஓ ஹென்றியின் கதைகளில் வரும் கடைசித் திருப்பம் இன்றுவரை உலகப்புகழ் பெற்று விளங்குகின்றது.
- பிரெஞ்சு எழுத்தாளர்களான போம்பெவல், மாப்பஸான், மெரிமீ, பால்சால்க் போன்றோர் சிறுகதையின் தொடக்ககால நிலையில் அதன் அனைத்துச் சாத்தியங்களோடும் படைத்துக் காட்டியவர்கள்.
- குறிப்பாக, இன்றளவும் மாப்பஸான் கதைகள் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன.
- தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான புதுமைப்பித்தன் “தமிழகத்தின் மாப்பஸான்” என்று அழைக்கப்படுவது, மாப்பஸான் கதைகளின் வீச்சினைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
- ரஷ்ய எழுத்தாளர்களான ஆண்டன் செகாவ், துர்கனேவ், கோகல் ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதைகளை எழுதியவர்கள்.
- செகாவ் சிறுகதை வடிவத்தை மிகச்சிறந்த கலைவடிவமாக்கியவர்.
- இவர் தம் சிறுகதைகள் நகைச்சுவையும் அங்கதமும் கலந்தவை.
- “ரஷ்ய சிறுகதையின் தந்தை” எனப் போற்றப்படும் கோகலின் ‘மேலங்கி என்னும் சிறுகதை எண்ணற்ற எழுத்தாளர்களை உருவாக்கிய கதை எனலாம்.
தமிழ் சிறுகதைகள்
| ஆசிரியர் | சிறுகதைகள் |
| ஆர். சூடாமணி (உளவியல் எழுத்தாளர்) | இறுக மூடிய கதவுகள் |
| ஜெயகாந்தன் | பூ உதிரும், ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள்?, சுந்தர காண்டம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் |
| கந்தர்வன் | சாசனம் |
| சுந்தர ராமசாமி | பிரசாதம் |
| கி. இராஜநாராயணன் | நிலைநிறுத்தல் |
| சார்வாகன் | யானையின் சாவு |
| சோ. தர்மன் | நசுக்கம் |
| கே. பாலமுருகன் | பேபி குட்டி |
| தாமரைச்செல்வி | பசி |
| சத்யஜித்ரே | அஷமஞ்சா பாபுவின் நாய் |
| எஸ். ராமகிருஷ்ணன் | ரப்பர் பந்து |
| வண்ணதாசன் | ஒரு சிறு இசை |
சாகித்திய அகாதமி பரிசு பெற்ற சிறுகதைகள்
| வ.எண் | ஆண்டு | சிறுகதை | ஆசிரியர் |
| 1 | 1970 | அன்பளிப்பு | கு. அழகிரிசாமி |
| 2 | 1979 | சக்தி வைத்தியம் | தி. ஜானகிராமன் |
| 3 | 1987 | முதலில் இரவு வரும் | ஆதவன் சுந்தரம் |
| 4 | 1996 | அப்பாவின் சிநேகிதர் | அசோகமித்திரன் |
| 5 | 2008 | மின்சாரப்பூ | மேலாண்மை பொன்னுசாமி |
| 6 | 2010 | சூடிய பூ சூடற்க | நாஞ்சில் நாடன் |
| 7 | 2016 | ஒரு சிறு இசை | வண்ணதாசன் |