செய்திகளை மக்களுக்கு அறிமுகம் செய்யும் முறையை கொண்டு வந்தவர் = ஜூலியஸ் சீசர்
ஜூலியஸ் சீசர் அவர்கள், “தினசரி செய்தி” (Acta Diurna) என்ற பெயரில் கற்பலகைகள் மற்றும் செப்புத் தகடுகளில் அரசுச் செய்திகளை எழுதி பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார்.
“இதழியலின் தந்தை” எனப்படுபவர் = ஜூலியஸ் சீசர்.
இந்தியாவின் இதழ்களின் முன்னோடி எனப்படுபவர் = மன்னர் அசோகர் (அவரின் கல்வெட்டு முறை)
காகிதத்தை கண்டுபிடித்தவர்கள் = சீனர்கள்
முதன்முதலில் அச்சுப்பொறியை கண்டுபிடித்தவர் = ஜெர்மனியை சேர்ந்த ஜோகன்னஸ் கூடன்பர்க்.
இந்தியாவில் இதழ்கள்
11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்
இந்திய இதழியலின் தந்தை = ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி
இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் = பெங்கால் கெஜட் (1780) (கல்கத்தா ஜெனரல் அட்வைசர்)
இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆங்கில வார இதழ் = ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் துவக்கிய “மெட்ராஸ் கூரியர்” (Madras Courier)
தமிழ் இதழ்கள்
தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் = மதராஸ் மெயில் (1868)
தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் = சுதேசமித்திரன் (1882)
தமிழில் வெளிவந்த முதல் வார இதழ் = பெர்சிவல் பாதிரியாரின் “தினவர்த்தமானி”
கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்தில் துவங்கப்பட்ட மாத இதழ் = ஜனவிநோதினி.
11TH TAMIL சமுதாய முன்னேற்றத்தில் இதழ்கள்
விடுதலை போராட்டத்தில் தமிழ் இதழ்கள்
1882 இல் “சுதேசமித்திரன்” வார இதழை துவங்கியவர் = ஜி.சுப்பிரமணியம்.
சுதேசமித்திரன் இதழ் 1889 இல் நாளிதழாக மாறியது.
1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் பாரதியார் துணை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
1907 இல் பாரதியார் துவங்கிய தமிழ் மாத இதழ் = இந்தியா
1907 இல் பாரதியார் துவங்கிய ஆங்கில மாத இதழ் = பால பாரதம்
1917 இல் திரு.வி.க துவக்கிய நாளிதழ் = தேசபக்தன்
சுதேசமித்திரனுக்கு பிறகு தமிழ்நாட்டில் விடுதலை வேட்கையின் வித்தாய் விளங்கிய நாளிதழ் = தேசபக்தன் (திரு.வி.க)
விடுதலை போரில் தேசிய இதழ்கள்
திலகர் ஆரமபித்த நாளிதழ் = கேசரி
அரவிந்தர் நடத்திய இதழ் = வந்தே மாதரம்
சுவாமி விவேகானந்தர் நடத்திய இதழ் = சகோதரர்.
காந்தி நடத்திய இதழ் = இந்தியன் ஒபினியன் (தென் ஆப்ரிக்காவில் நடத்தியது)
காந்தி நடத்திய இதழ் = யங் இந்தியா, ஹரிஜன், நவஜீவன் (இந்தியாவில் நடத்திய இதழ்)
பெண்ணுரிமைக்காக போராடிய இராஜா இராம் மோகன்ராய் நடத்திய இதழ் = சம்பத் கௌமுதி
பாரதியார்
தமிழ் இலக்கியத்தின் பல்வேறுதுறைகளில் புதுமைகளைத் தொடங்கி வைத்த பாரதியார், இதழியலிலும் புத்தெழுச்சியை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
ஆங்கிலத்தில் ‘கார்ட்டூன்’ (கார்ட்டூன்) என்று அழைக்கப்படும் கருத்துப்படங்களை தமிழில் கருத்துப்படம், விகடசித்திரம், வேடிக்கைசித்திரம், கேலிச்சித்திரம், விளக்கப்படம், கூடார்த்த படம் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
கருத்துப்படங்களை பாரதியார் “விகடச்சித்திரம்” என்று கூறுகிறார்.
1850 ஆம் ஆண்டு முதல் தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ (Delhi Sketch Book), என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.
தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை வெளியிட்டது பாரதி நடத்திய ‘இந்தியா’ (1907) இதழே ஆகும்.
கருத்துப்பட வடிவத்தினை இவ்வளவு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் காட்டியவர் பாரதியே.
கருத்துப்படங்களுக்காகவே ‘இந்தியா’ இதழினை அனைவரும் விரும்பிப் படித்தனர்.
பாரதியின் கருத்துப்படங்களைப் பற்றிப் பாரதிதாசன் எழுதும்போது, அந்தச் சித்திரம்தான் முதலில் என்னை அவர்தம் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம்தான் என்னை இன்னாரென்று எனக்குக் கூறிற்று” என்று கூறுவதிலிருந்து, பாரதியின் கருத்துப்படத்திற்குக் கிடைத்த வெற்றியினை நாம் அறியலாம்.
பெரியார்
பெரியார் 02.05.1925 அன்று “குடியரசு” என்ற வார இதழை துவக்கினார்.
1935 இல் நீதிக்கட்சியினரால் துவக்கப்பட்ட “விடுதலை” என்ற இதழ், பின்னாளில் பெரியாரின் கைக்கு வந்தது.
பெரியார் நடத்திய இதழ்கள் = விடுதலை, குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)
தமிழில் எழுத்து சீர்திருத்தம் மேற்கொண்டவர் பெரியார்.