11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்

  • தமிழ் நாடக வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பலர்.
  • அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் = சங்கரதாசு சுவாமிகள், பாலாமணி அம்மாள், பம்மல் சம்பந்தனார், ஆர்.எஸ். மனோகர், மதுரகவி பாஸ்கரதாஸ் ஆவர்.

சங்கரதாசு சுவாமிகள்

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
  • தமிழ் நாடக மரபைப் பின் பற்றியும் கால மாற்றங்களுக்கேற்ப நாடகம் படைத்தவர் = சங்கரதாசு சுவாமிகள்.
  • இசையை முதன்மைப்படுத்திக் கூத்து மரபுகளை உள் வாங் கி நாடகங்களைப் படைத்தவர் = சங்கரதாசு சுவாமிகள்.
  • பழங்கதைகளில் குறைவான நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு பாத்திரங்களின் தர்க்கத்திற்கு இடமளித்து நாடகங்களை உருவாக்கினார்.
  • சிறுவர்களைக் கொண்ட ‘பாய்ஸ் கம்பெனி’ என்ற பாலர் நாடகக்குழுவை இவர் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
  • சிறுவர்களைக் கொண்டு “பாய்ஸ் கம்பெனி” என்ற பாலர் நாடகக்குழுவை உருவாக்கியவர் = சங்கரதாசு சுவாமிகள்
  • “தமிழ் நாடகத் தலைமையாசிரியர்” என அழைக்கப்படுபவர் = சங்கரதாசு சுவாமிகள்
  • “தமிழ் நாடகத் தலைமையாசிரியர்” என்ற நூலினை எழுதியவர் = டி.கே.சண்முகம்
  • ஆட்டம், இசை, சிறிதளவு வசனம் என்று இருந்த தெருக்கூத்து நாடகங்களின் அமைப்பைக் குறைத்து, கற்பனைச் சிறப்பும் சந்தநயம் மிக்கதுமான பாடல்களை இவர் படைத்தார்.
  • நடிகர்கள் விருப்பம்போல் வசனங்களைப் பேசிவந்த நிலையை மாற்றி வரையறுத்த நாடகப் பிரதிகளை உருவாக்கினார்.
  • பழந்தமிழ் இலக்கிய வரிகளையும் உரையாடலில் பயன்படுத்தினார்.
  • இவரது நாடகங்களிலும் பாடல்களின் ஆதிக்கம் இருந்தது.
  • இவர் பல புராண நாடகங்களையும், வரலாற்று நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.
  • இசையை, கருநாடக இசைக் கூறுகளை முதன்மைப்படுத்தி நாடகங்கள் நிகழ்ந்தன.
  • இவர்காலத்தில் படிப்படியாக நகரங்களை நோக்கி நாடகங்கள் நகர்ந்தன.

மதுரகவி பாஸ்கரதாஸ்

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
  • சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் இந்திய அளவில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர், தமிழ் நாடகக் கலைஞர் மதுரகவி பாஸ்கரதாஸ்.
  • ஆங்கிலேய அரசின் அடக்குமுறையை எதிர்த்தார்.
  • நாடு முழுவதும் விடுதலை அரசியல் வீறுகொண்ட காலகட்டத்தில் தேசிய விடுதலை இயக்கத்தின் மீதும் காந்தியடிகளின் அகிம்சைவழிப் போராட்டங்களின் மீதும் பற்றுக்கொண்ட இவர், தம் நாடகங்களில் பாடல்களின்வழி விடுதலைக்கருத்துகளைப் பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்த்தார்.
  • ஆங்கிலேய அரசின் அடக்குமுறைச் சட்டங்கள் நாடகங்களைக் கட்டுப்படுத்திய போது தேசிய விடுதலைக் கருத்துகளை நுட்பமாக இணைத்து நாடகப் பாடல்களை இயற்றிக் கவி புனைவதில், புதிய முறையை உருவாக்கினார்.
  • பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட நிகழ்வு, காந்தியடிகள் பங்கேற்ற வட்டமேசை மாநாடு, பஞ்சாப் படுகொலை ஆகிய நிகழ்வுகளைக் கொண்டு இவர் இயற்றிய நாடகப் பாடல்கள் ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டன.
  • திரைப்படங்கள் அல்லாத அக்கால கட்டத்தில் மதுரகவியின் நாடகப்பாடல்களைப் புகழ்பெற்ற ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் (His Master’s Voice) இசைத்தட்டு நிறுவனம் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவேற்றி உலகம் முழுவதும் கொண்டு சென்றது.
  • புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான கே.பி. சுந்தராம்பாள், கிட்டப்பா, எம். எஸ். சுப்புலட்சுமி போன்றோரும் இவரின் நாடகங்களில் பாடி நடித்துள்ளனர்.

பம்மல் சம்பந்தனார்

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
  • “தமிழ் நாடகத்தந்தை” என அழைக்கப்பட்டவர் = பம்மல் சம்பந்தனார்.
  • நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியதன் மூலம் தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றியவர் = பம்மல் சம்பந்தனார்.
  • புராண, வரலாற்று நாடகங்களுடன் மக்களின் வாழ்க்கையை ஒட்டிய கதைகளைக் கொண்ட, இயல்பான பேச்சு மொழியில் அமைந்த சமூக நாடகங்களையும் இவர் நடத்தினார்.
  • பாடல்கள் மிகுந்திருந்த தமிழ் நாடகங்களில் உரையாடல்களை முதன்மைப் படுத்தினார்.
  • நாடகங்களில் பாடல்களை முதன்மைப் படுத்தியவர் = சங்கரதாசு சுவாமிகள்
  • நாடகங்களில் உரையாடல்களை முதன்மைப் படுத்தியவர் = பம்மல் சம்பந்தனார்.
  • அரிச்சந்திரன் கதையை “சந்திரஹரி” என்று பொய் மட்டுமே பேசுகிற ஒருவனைப் பற்றிய கதையாக மாற்றியதன் மூலம் ‘எதிர்க்கதை நாடகம்’ என்னும் புதிய வகையையும் இவர் உருவாக்கினார்.
  • “எதிர்க்கதை நாடகம்” என்ற புதிய வகை நாடகத்தை உருவாக்கியவர் = பம்மல் சம்பந்தனார்.
  • மொழிபெயர்ப்பு நாடகங்களையும் இவர் படைத்துள்ளார்.
  • இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிக்கும் முறையைக் கொண்டுவந்தார்.
  • 1801இல் இவரால் ஏற்படுத்தப்பட்ட சுகுண விலாச சபை, தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகக் குழுவாகும்.
  • தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகக் குழு = பம்மல் சம்பந்தனாரின் “சுகுணா விலாச சபை” ஆகும்.
  • இவர் எழுதிய 94 நாடகங்களும் அச்சு நூல்களாக வெளிவந்துள்ளன.
  • அவற்றுள் மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம், உத்தமபத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன.
  • பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகம் தொடர்பான நூல்கள் = நாடகத்தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள்.
  • ‘இந்திய நாடக மேடை’ என்ற இதழை வெளியிட்டவர் = பம்மல் சம்பந்தனார்.

பாலாமணி அம்மையார்

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
  • பாலாமணி அம்மையார் முதன் முதலாக முழுவதும் பெண்களே பங்கேற்ற ‘பாலாமணி அம்மாள் நாடகக் குழு’ வினைத் தொடங்கி நடத்தியவர்.
  • தமிழகத்தில் முதன் முதலில் முழுவதும் பெண்கள் மட்டுமே பங்கேற்ற நாடகக் குழு = பாலாமணி அம்மாள் நாடகக் குழு
  • இவரின் குழுவில் எழுபது பெண்கள் இருந்தனர்.
  • “நாடக அரசி” என சிறப்பிக்கப்பட்டவர் = பாலாமணி அம்மாள்
  • ‘நாடக அரசி’ எனச் சிறப்பிக்கப்பட்ட இவரது நாடகங்கள், சமுதாய சீர்திருத்தங்களையே உள்ளடக்கங்களாகக் கொண்டிருந்தன.
  • நாடக மேடையில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.
  • பாலாமணி அம்மையார் குறித்து, அவ்வை சண்முகம் “எனது நாடக வாழ்க்கை ” என்ற நூலில் கீழ்க்காணுமாறு எழுதியுள்ளார்.
  • “கும்பகோணத்தில் இரவு ஒன்பதரை மணிக்கு நாடகம் ஆரம்பமாகும். இதற்காகப் பார்வையாளர்களை ஏற்றிக்கொண்டு மாயவரத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு ஒரு ரயில் கும்பகோணத்திற்கு வரும். அதேபோல எட்டரை மணிக்குத் திருச்சியிலிருந்து ஒரு ரயில் வரும். அந்த ரயில்கள், கும்பகோணத்தில் நின்று விட்டு, இரவு மூன்று மணிக்கு மீண்டும் புறப்பட்டு, மாயவரத்துக்கும், திருச்சிக்கும் போய்விடும். பாலாமணி நாடகங்களைப் பார்க்க ரசிகர்களுக்காக ஆங்கில அரசு இத்தகைய சிறப்புத் தொடர்வண்டி விட்டது. அத்தொடர்வண்டியை, “பாலாமணி ஸ்பெஷல் என்று அழைத்தனர்.”

ஆர் எஸ் மனோகர்

11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
11TH TAMIL நாடகவியல் ஆளுமைகள்
  • “நாடகக் காவலர்” என அழைக்கப்படுபவர் = ஆர்.எஸ்.மனோகர் ஆவார்.
  • கல்லூரி நாடகத்தில் ‘மனோகர் கதாபாத்திரத்தில் நடித்ததால், அதையே தன் பெயராக மாற்றிக் கொண்டவர்.
  • இவரின் இயற்பெயர் ‘ராமசாமி சுப்பிரமணியன்’ ஆகும்.
  • பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
  • ஆனாலும், நாடகத்தின் மீதான காதலால் ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ நாடக நிறுவனத்தை 1954இல் தொடங்கினார்.
  • ‘இன்ப நாள்’, ‘உலகம் சிரிக்கிறது’ ஆகிய சமூக நாடகங்களை அரங்கேற்றினார்.
  • பின்னர் பிரம்மாண்ட இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றினார்.
  • ராவணன், சூரபத்மன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களைக் கொண்ட நாடகங்களைப் படைத்தார்.
  • சிறப்பான மேடை அமைப்பும், தந்திரக் காட்சிகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
  • இவரின் ‘இலங்கேஸ்வரன்’ நாடகம் வியக்கத்தக்க அளவில் தயாராகியிருந்தது.
  • இலங்கையில் இந்த நாடகத்தைத் தொடர்ந்து 21 நாள்கள் தொடர்ந்து நடத்துவதற்கான வாய்ப்பு தேடி வந்தது.
  • நாடகத்தைப் பார்த்து வியந்த மக்கள், இவருக்கு ‘இலங்கேஸ்வரன்’ என்ற பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர்.
  • இவரது நாடகங்களில் பன்முறை மேடையேறிய நாடகம் இது.
  • ‘சாணக்கிய சபதம்’, ‘சூரபத்மன்’, ‘சிசுபாலன், ‘இந்திரஜித்’, ‘நரகாசுரன்’, ‘சுக்ராச்சாரியார்’ உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை.
  • சொன்ன நேரத்துக்கு நாடகம் தொடங்கிவிடவேண்டும்; அனைத்தும் துல்லியமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.
  • ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாள்கள் ஒத்திகை பார்ப்பவர்.
  • இவர் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நாடகங்களும் ஆசிரியர்களும்

ஆசிரியர்கள்

அவர்களின் நாடகங்கள்
பம்மல் சம்பந்தனார்

மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம், உத்தமபத்தினி = நாடகங்கள்

நாடகத்தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் = நாடகம் தொடர்பான நூல்கள்.

அவ்வை சண்முகம்

எனது நாடக வாழ்க்கை

ஆர்.எஸ்.மனோகர்

இன்ப நாள், உலகம் சிரிக்கிறது,  சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், நரகாசுரன், சுக்ராச்சாரியார்

ஜெயந்தன்

ஒரு ரூபாய் (ஒற்றை நடிகர் நாடகம்)

Leave a Reply