11TH TAMIL புறநானூறு

11TH TAMIL புறநானூறு

11TH TAMIL புறநானூறு
11TH TAMIL புறநானூறு

11TH TAMIL புறநானூறு

  • தமிழரின் வாழ்வியல் கருவூலமான புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் பேசுகிறது.
  • பிறர்க்கென வாழ்வதே பிறவிப்பயன் என்ற கருத்தினை விளக்கும் இப்பாடல், தனக்கென வாழா மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது.

பொதுவியல் திணை என்றால் என்ன

  • வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும் தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும்.

பொருண்மொழிக்காஞ்சித் துறை என்றால் என்ன

  • மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண்மொழிக்காஞ்சித் துறையாகும்.

அருஞ்சொற்பொருள்

  • தமியர் – தனித்தவர்
  • முனிதல் – வெறுத்தல்
  • துஞ்சல் – சோம்பல்
  • அயர்வு – சோர்வு
  • மாட்சி – பெருமை
  • நோன்மை – வலிமை
  • தாள் – முயற்சி.

இலக்கணக்குறிப்பு

  • அம்ம = அசைநிலை
  • உண்டல், துஞ்சல் = தொழிற்பெயர்கள்
  • முயலா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்து எழுதுக

  • இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
  • புகழெனின் = புகழ் + எனின்

முக்கிய அடிகள்

  • உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும்
  • பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்
  • தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

புறநானூறு நூல் குறிப்பு

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

  • பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர்.
  • ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர்.
  • கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமையால் இவர், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார்.
  • இவரது பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம் பெற்றுள்ளன.

பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட்

11TH TAMIL புறநானூறு
11TH TAMIL புறநானூறு
  • பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் (GEORGE : L. HART) என்பவரால் புறநானூறு, “The Four: Hundred Songs of War and Wisdom: An: Anthology of Poems from Classical Tamil, the Purananuru” என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஜி.யு.போப்

புறநானூறு முதன் முதலில் பதிப்பித்தவர்

11TH TAMIL புறநானூறு
11TH TAMIL புறநானூறு

Leave a Reply