12 ஆம் வகுப்பு சிறப்புத்தமிழ் பெரியபுராணம்
12 ஆம் வகுப்பு சிறப்புத்தமிழ் பெரியபுராணம்
- பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியும் சில நெகிழ்ச்சிகளை உள்வாங்கியும் இயற்றப்பெற்ற சைவக் காப்பியமாகும்.
- சுந்தரர் எழுதிய ‘திருத்தொண்டத்தொகை’, நம்பியாண்டார் நம்பி எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ ஆகிய நூல்களை முதல் நூலாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டது.
- இது 63 அடியார் பெருமக்களை மையமாகக் கொண்டு திகழ்கின்றது.
- இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது.
- இது சைவத்திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
- இந்நூலின் ஆசிரியர் சேக்கிழார். இவரின் இயற்பெயர் அருண்மொழித் தேவர்.
- ஆண், பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் “தேசிய இலக்கியம்” என்று சான்றோர்கள் பாராட்டுவர்.
பெரியபுராணச் காப்பியச் சுருக்கம்
- சுந்தரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு இந்நூல் அமைகின்றது.
- சுந்தரரின் சிறப்பு, சைவ அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருள்திறம், அடியார்களின் வரலாறு, அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறி, இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம், அடியார்கள் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற தன்மை ஆகியன இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார் இந்நூலிற்குத் திருத்தொண்டர் மாக்கதை எனப் பெயரிட்டார்.
- செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற, காலப் போக்கில் இந்நூல் பெரியபுராணம் என்று வழங்கப்பட்டது.