12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் கம்பராமாயணம்

  • தமிழில் தொடர்ச்சியாகச் செல்வாக்கு பெற்று விளங்கும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கம்பராமாயணம்.
  • இது கம்பரால் இயற்றப்பட்டது.
  • வடமொழியில் வான்மீகி இயற்றிய இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல்.
  • வழி நூலாயினும் கம்பர் தமக்கே உரிய நடையில் கருப்பொருள் சிதையாமல் இயற்றியுள்ளார்.
  • கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் இராமாவதாரம்.
  • இராமனின் வரலாற்றைக் கூறும் நூலாதலின் இராமாயணம் எனப்பட்டது.
  • இதன் காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு.
  • கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப்பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.
  • கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உள்ளடக்கியது.
  • இக்காப்பியத்தின் ஏழாவது காண்டமாக விளங்கும் உத்தர காண்டத்தை எழுதியவர் கம்பரின் சமகாலத்தவராகிய ஒட்டக்கூத்தர்.
  • இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்குக் கதி” (கம்பராமாயணம், திருக்குறள்) என்று திருமணம் செல்வ கேசவராயர் கூறியுள்ளார்.

காப்பியச் சுருக்கம்

  • அயோத்தி நகரத்து அரசனான தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்கன் ஆகிய நான்கு பிள்ளைகள் பிறப்பதும், இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் முடிப்பதும் பால காண்டத்தில் கூறப்படுகிறது.
  • கைகேயி கேட்ட இரண்டு வரங்களால் இராமன் காடடைவது அயோத்தியா காண்டத்திலும், இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது ஆரணிய காண்டத்திலும், சீதையைத் தேடிச் செல்லும் இராமன் வாலியைக் கொன்று சுக்ரீவன், அனுமன் நட்பைப் பெறுவது கிட்கிந்தா காண்டத்திலும், இராமனைப் பிரிந்த சீதையின் நிலை, அனுமனின் ஆற்றல் ஆகியன சுந்தர காண்டத்திலும் இராவணனை அழித்து சீதையை மீட்பது யுத்த காண்டத்திலும் விளக்கப்படுகின்றன.
  • கம்பராமாயணம் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply