12 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

12 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

12 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி
12 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

12 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

  • தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
  • வடமொழியில் எழுதப்பட்ட “கத்திய சிந்தாமணி” என்னும் நூலின் தழுவல் இந்நூல் என்பர்.
  • சமனசமயக் காப்பியம் இது.
  • இதனை திருத்தக்கத் தேவர் இயற்றியுள்ளார்.
  • திருத்தக்கத்தேவரை, “தமிழ்க் கவிஞர்களுள் அரசன்” என்று வீரமாமுனிவர் கூறுகிறார்.
  • ஜி.யு.போப் = சீவகசிந்தாமணி செந்தமிழ்க் காப்பியங்களுள் சிறந்தது மட்டுமன்று, உலக மகாகாவியங்களில் ஒன்றாகும்
  • இந்நூல் 13 இலம்பகங்களை கொண்டுள்ளது. நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரை உள்ளது.
  • 3145 பாடல்கள் கொண்டது.
  • காப்பிய இலக்கணம் முழுவதும் பொருந்தும் நூல் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்களை கொண்டது)

சீவக சிந்தாமணி காப்பியச் சுருக்கம்

  • ஏமாங்கத நாட்டின் தலைநகர் = இராசமாபுரம்
  • அந்நாட்டு மன்னன் = சச்சந்தன். அரசி = விசயை
  • அமைச்சர் கட்டியங்காரன் அரசனைக் கொன்று ஆட்சியை பிடித்தான்.
  • மயில்பொறி மீது ஏறி விசயை தப்பித்து, இராசமாபுரம் சுடுகாட்டில் சீவகனை பெற்றெடுத்தாள்.
  • சீவகன் பிறந்த பொழுது, அவனை “சிந்தாமணியே” என்று விசயை கூறினாள். அக்குழந்தை தும்மிய பொழுது “சீவ” என்னும் ஒலி ஏற்பட்டது.
  • அதனால் அவனுக்கு சீவகன் எனப்பெயரிடப்பட்டது.
  • கந்துகடன் என்னும் வணிகன், சீவகனை எடுத்து வளர்த்தார்.
  • அச்சணந்தி என்பவர் சீவகனின் ஆசிரியர்.
  • சீவகன் வளர்ந்து கட்டியங்காரனை வீழ்த்தி தன் நாட்டை பிடிக்கிறான்.
  • காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கோமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய 8 பெண்களை சீவகன் மணந்ததால், இந்நூலினை “மணநூல்” என்றும் அழைக்கப்படுகிறது.

சீவக சிந்தாமணி காப்பியச் சிறப்புகள்

  • காப்பியங்களில் நாட்டுவளம், நகர்வளம் பாடுவதில் புதிய மரபை ஏற்படுத்திக் கொடுத்த காப்பியம் சீவக சிந்தாமணி.
  • இயற்கை காட்சிகள், அவை பற்றிய வருணனை, போர்முறைகள், தமிழர் தம் பழக்க வழக்கங்கள், உவமை நயங்கள், அரசியல் சூழ்ச்சிகள், சமணக் கொள்கை விளக்கங்கள் பற்றி பேசுகிறது இக்காப்பியம்.

 

 

Leave a Reply