தமிழில் முதன் முதல்

தமிழில் முதன் முதல்

தமிழில் முதன் முதல்
தமிழில் முதன் முதல்

தமிழில் முதன் முதல்

  • தமிழின் முதல் நாவல் = பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை)
  • ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்ற தீர்ப்புகளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து “சித்தாந்த சங்கிரகம்” என்ற நூலாக வெளியிட்டவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய “பெண்கல்வி” என்னும் நூலே பெண்களின் முன்னேற்றத்திற்காக எழுதப்பட்ட முதல் தனி நூல் ஆகும்.
  • தமிழகத்தில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் பள்ளி = மாயவரத்தில், மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களால் திறக்கபட்ட பள்ளியே.
  • “தமிழ்” என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் = தொல்காப்பியம்
  • தமிழில் குடும்பம் என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ள நூல் = திருக்குறள் (1௦29 வது குறள்)
  • “உழவர்” என்ற சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல் = நற்றிணை
  • திருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.
  • தமிழ் மொழியை முதன் முதலில் உயர்தனிச் செம்மொழி என்று கூறியவர் = பரிதிமாற் கலைஞர்
  • ஐம்பெரும்காப்பியங்கள் என்ற சொற்றொடரை முதலில் பயன்படுத்தியவர் = நன்னூலுக்கு உறை எழுதிய மயிலைநாதர்
  • ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா)
  • “பஞ்சகாப்பியம்” என்ற சொற்றொடர் முதலில் பயன்படுத்தப்பட்ட நூல் = தமிழ்விடுதூது
  • தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஆறுமுகநாவலர்
  • முதன் முதல் புத்தக வடிவம் பெற்ற சங்க இலக்கியம், ஆறுமுக நாவலர் அவர்கள் 1851 இல் பதிப்பித்த திருமுருகாற்றுப்படை ஆகும்.
  • பரிமேலழகரின் திருக்குறள் உரையை முதன் முதலில் பதிப்பித்தவர் = ஆறுமுக நாவலர்
  • இலக்கண வழு இல்லாத தூய்மையான எளிய நடையை முதன்முதலில் கையாண்டவர் = ஆறுமுக நாவலர்
  • தமிழில் முதன்முதலில் டாக்டர் (மதிப்பில்) பட்டம் பெற்றவர் = உ.வே.சா
  • தமிழில் புதுக்கவிதை பற்றிய முதல் ஆய்வு நூல் = யாப்பும் கவிதையும் (எழுதியவர் சி.மணி)
  • தமிழில் முதன் முதலாக சிந்துவெளி நாகரிகம் பற்றி நூல் எழுதியவர் = மா. இராசமாணிக்கனார். இவரின் நூல் = மொஹஞ்சதரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம்
  • முதன் முதலில் தமிழில் சங்க காலம் தொடங்கி, பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ச்சி நோக்கில் எழுதியவர் = மா. இராசமாணிக்கனார்
  • மானிடவியல், சமூகவியல் அறிவுடன் தமிழர் பண்பாட்டு வரலாற்றை முதன் முறையாக ஆய்வு செய்தவர் = மயிலை சீனி வேங்கடசாமி
  • தமிழருடைய கலை, பணபாடு. சமயம் ஆகிய துறைகளில் கருத்து வடிவங்களுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அத்துறையில் முதன் முதலாக ஆராய்ச்சி செய்தவர் = மயிலை சீனி வேங்கடசாமி
  • மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் படைத்த “தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்” என்னும் நூலே கவின்கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார்
  • தமிழில் விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
  • தமிழில் இயற்றப்பட்ட முதல் தருக்க நூல் = நீலகேசி
  • வடஇந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு தமிழ்ச் சாயலோடு படைக்கப்பெற்ற முதல் தமிழ்க் காப்பியம் = பெருங்கதை (ஆசிரியர் = கொங்குவேளிர்). இந்நூலிற்கு கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்ற பெயரும் உண்டு)
  • தமிழில் சமூக சீர்திருத்த புதினங்களுக்கு தொடக்க புள்ளியாக அமைந்த புதினம் = அ.மாதவையா எழுதிய “முத்து மீனாட்சி” என்னும் புதினம் ஆகும்
  • தமிழில் முற்போக்குப் புதினங்களை முதலில் தந்தவர் = தொ.மு.சி.ரகுநாதன்.
  • தமிழில் வட்டாரப் புதினம் எழுதும் வழக்கை முதலில் தோற்றுவித்தவர் = ஆர். சண்முக சுந்தரம்.
  • 1946 ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலாக “அமைதி” என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகம், பாரதிதாசனால் எழுதப்பட்டது. இது 16 காட்சிகளை கொண்டது (தமிழின் முதல் மௌன நாடகம்)
  • தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்கள் வெளியிட்டவர். தமிழ் பத்திரிகை உலகில் முதன் முதலில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர். முதன்முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் ஆண்டு மாதம் குறித்தவர் = பாரதியார்
  • இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
  • கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் = பாரதியார்
  • தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக் கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் = பாரதி.
  • தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறித்தவர் = பாரதி.
  • தமிழ் இதழ்களில் முதன் முதலில் தமிழிலே தலைப்பு (மகுடமிடல்) இட்டவர் = பாரதி.
  • “புரட்சி, பொதுவுடைமை” என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் = பாரதியார்
  • முதன் முதலில் தமிழ்க்கவிதைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்வர் = பாரதியார்.
  • தமிழில் புதுமையான வடிவத்தில் அமைந்த முதல் வசன கவிதை நூல் = பாரதியாரின் “காட்சி”.
  • ஹைக்கூ கவிதை வடிவத்தினைத் முதன் முதலில்தமிழுக்கு அறிமுகம் செய்தவர் = பாரதியார்.
  • 1916 – அக்டோபர், 16 ல் “சுதேசமித்திரன்” இதழில் “ஜப்பானிய கவிதை “எனும் இரண்டு பக்க அளவிலான சிறு கட்டுரையை முதன் முதலில் மகாகவி பாரதியார் தமிழில் வெளியிட்டதுதான் தமிழ் ஹைக்கூ பற்றிய முதல் அறிமுகம்.
  • தமிழில் வெளிவந்த முதல் ஹைக்கூ நூல் = 1984 ஆகஸ்ட்டில் ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் “புள்ளிப் பூக்கள்” எனும் தனது ஹைக்கூ நூலை வெளியிட்டார்.
  • தமிழ் மொழியில் வெளி வந்த முதல் ஹைக்கூ கவிதை இதழ் = கரந்தடி
  • முதன் முதலில் மொழிபெயர்ப்பு இன்றி நேரடி தமிழில் ஹைக்கூ கவிதையை எழுதியவர் = கவிக்கோ அப்துல் ரகுமான். அவர் எழுதிய 5 ஹைக்கூ கவிதை “பால்வீதி” நூலில் இடம் பெற்றது.
  • சென்ரியு கவிதைகளை தமிழில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவர் = ஈரோடு தமிழன்பன் ஆவார்.
  • தமிழில் வெளிவந்த முதல் சென்ரியு கவிதை நூல் = ஈரோடு தமிழன்பன் அவர்களின் “ஒரு வண்டி சென்ரியு” (2001) என்னும் கவிதை நூல் ஆகும்.
  • தமிழில் லிமெரிக் கவிதை வடிவத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் = ஈழத்து கவிஞர் மகாகவி
  • தமிழில் முதன் முதலில் லிமெரைக்கூ கவிதையை எழுதியவர் = ஈரோடு தமிழன்பன்.
  • தமிழின் முதல் லிமரைக்கூ கவிதை நூல் = ஈரோடு தமிழன்பனின் ”சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” நூலாகும்.
  • தமிழில் அதிக அளவில் கவிதைத் தொகுதிகளை – 60க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் – 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்ட முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • ‘உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்… வால்ட் விட்மன்! ‘(1998) எனும் கவிதைத் தொகுதிமூலம் புதுக்கவிதையில் முதல் பயண இலக்கியம் படைத்த முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • 2000இல் எழுதி 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற வணக்கம், வள்ளுவ! என்னும் கவிதைத் தொகுதிவழிப் புதுக்கவிதையிலான முதல் திறனாய்வு நூலை எழுதிய முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • ஒரு வண்டி சென்ரியு (2001) எனும் கவிதைத் தொகுதிவழி ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான சென்ரியுவைத் தமிழில் அறிமுகப்படுத்திய முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான ஹைக்கூவைத் தமிழில் பிரபலப்படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வாயிலாகத் தமிழில் படைத்த முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • 2009இல் நிகழ்ந்த ஈழப்போரில் கொத்துக்கொத்தாய்த் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அந்த இனப் படுகொலையைக் கண்டித்துத் தமிழகத்தில் பலரும் எழுத முன்வராத நிலையில் நெஞ்சுரத்துடன் என் அருமை ஈழமே! (2009) என்னும் கவிதைத் தொகுதியைத் துணிச்சலாய் எழுதி வெளியிட்ட முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • 2012இல் வெளிவந்த கஜல் பிறைகள் வாயிலாகப் பாடதக்க கஜல் கவிதைத் தொகுதியைப் படைத்த முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தால் இரண்டு முறை தேசியக் கருத்தரங்கு நடத்தப்படப் பொருண்மைக்களமாக விளங்கிய கவிதைகளைப் படைத்த முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • ஒரு கூடைப் பழமொன்ரியூ (2014) வழியாகப் பழமொழியையும் சென்ரியூவையும் இணைத்துப் பழமொன்ரியு எனும் கவிதை வடிவத்தை முதன்முதல் உருவாக்கி அறிமுகப் படுத்திய முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • பாப்லோ நெருதா எழுதிய Book of Questions என்னும் வினாக்களாலான கவிதைத் தொகுதியை முன்மாதிரியாகக் கொண்டு கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகள் இரண்டு இயற்றிய முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன். பிறப்பால் ஆங்கிலேயராகவும், வாழிடத்தால் சீனராகவும் வாழும் முறையால் தமிழராகவும் வாழ்ந்துவருபவரும் – இங்கிலாந்தில் பிறந்து ஹாங்காங்கில் வாழ்ந்துவருபவருமான பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் இவ்விரு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Poems of Questions என்னும் பெயரில் ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். இப்படி ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் இக்காலக் கவிதை ஆங்கிலத்தில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் அவர். இதே நூலுக்குப் பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் அவர்களும் லொரைன் போக் (Loraine Bock) என்னும் ஸ்பானியப் பெண்மணியும் இணைந்து Poemas de Preguntas என்னும் மகுடம் தாங்கிய ஸ்பானிய மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இக்காலத் தமிழ்க் கவிதை ஸ்பானிய மொழியில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் = ஈரோடு தமிழன்பன்.
  • 2017 நவம்பர் 8இல் அமெரிக்காவில் டல்லாஸ் நகரிலுள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன் முயற்சியால் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் கவிதைத் திருவிழா நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் கவிதைத் திருவிழா மட்டுமன்றி இப்படியொரு திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் = ஈரோடு தமிழன்பனே ஆவார்.
  • 2019 செப்டம்பர் 28இல் வட அமெரிக்க வானொலியில் தமிழன்பன் பிறந்தநாள் வானலையில் அமெரிக்கத் தமிழர்கள் பலர் தமிழன்பன் கவிதை வாசிப்பு நிகழ்த்திக் கொண்டாடினர். இப்படியொரு பிறந்தநாள் திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் = ஈரோடு தமிழன்பனே ஆவார்.
தமிழில் முதன் முதல்
தமிழில் முதன் முதல்
  • முதன் முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் = சுரதா
  • சீர்திருத்தக் கருத்துக்களைத் முதன் முதலில் திரைப்படத்தில் புகுத்தியவர் = உடுமலை நாராயணக்கவி
  • தமிழ் நாட்டுப்புறப் பாடலை முதன் முதலில் மு.அருணாசலம் அவர்கள் 1943 – ல் “காற்றில் மிதந்த கவிதை” என்ற பெயரில் வெளியிட்டார்.
  • “கதரின் வெற்றி” நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
  • பிறமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்த முதல் அறிஞர் = ந.மு.வேங்கடசாமி நாட்டார்
  • மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர் = ந.மு.வேங்கடசாமி நாட்டார்
  • இந்தியாவிலிலேயே முதன் முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கியவர் = திரு.வி.க
  • 11.1955-ல் தனது தமிழரசு கழகக் செயற் குழுக் கூட்டத்தில் முதன்முதலில் ம.பொ.சி தான், “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறோம். தமிழ்நாடு என்று பெயரிடப் பட வேண்டும்” என்று தீர்மானத்தை நிறை வேற்றினார்.
  • பொங்கல் திருநாளை தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன் முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி.
  • 1900இல் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, சென்னை அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர்.
  • தென்னிந்தியாவின் முதல் ‘டூரிங் டாக்கீஸ்’ = 1905இல் திருச்சியில் சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் ‘எடிசன் சினிமாட்டோ கிராப்’ என்ற திரைப்படம் காட்டும் நிறுவனம் ஆகும்.
  • 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் ‘கெயிட்டி’ திரையரங்கு கட்டப்பட்டது. இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு இதுவே.
  • இந்தியாவில் காட்டப்பட்ட முதல் கதைப்படம் = ‘ஏசுவின் வாழ்க்கை’
  • தாதாசாகேப் பால்கே தயாரித்து வெளியிட்ட ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்னும் மௌனப்படமே இந்தியர் ஒருவர் தயாரித்து வெளியிட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும்.
  • நடராஜர் என்பவர் கீழ்ப்பாக்கத்தில், ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவி, 1916இல் ‘கீசகவதம்’ என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.
  • இந்தியாவின் முதல் பேசும்படம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட ‘ஆலம் ஆரா’. இப்படம் 1931 இல் அர்தேஷிர் இரானி என்பவரால் இயக்கித் தயாரிக்கப்பட்டது.
  • 1931 ஆம் ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கிய முதல் முழுநீளத் தமிழ்ப் படமான ‘காளிதாஸ்’ வெளிவந்தது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்.
  • காப்பியங்களில் நாட்டுவளம், நகர்வளம் பாடுவதில் புதிய மரபை ஏற்படுத்திக் கொடுத்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
  • முதல் குறவஞ்சி நூல் = திருக்குற்றால குறவஞ்சி (எழுதியவர் = திரிகூடராசப்பக் கவிராயர்)
  • தமிழின் முதல் இசைபாடல் நூல் = பரிபாடல்
  • கதை தலைவியின் பெயரால் அமைந்த முதல் காப்பியம் = மணிமேகலை
  • தொல்காப்பியர் கூறிய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் = மணிமேகலை
தமிழில் முதன் முதல்
தமிழில் முதன் முதல்
  • சமய விவாவதங்கள் குறித்து முதன்முதல் கதைவடிவில் பேசும் தமிழ்நூல் = மணிமேகலை
  • உ.வே.சா பதிபித்த முதல் காப்பியம் = சீவக சிந்தாமணி
  • தமிழின் முதல் கள ஆய்வு நூல் = பெரியபுராணம்
  • சைவ சிந்தாந்தம் என்ற தொடர் முதன் முதலில் இடம் பெற்ற நூல் = திருமூலரின் திருமந்திரம்
  • ஒரு பொருளைப் பல பாடலில் பாடும் பதிக மரபை முதன் முதலாக தொடங்கி வைத்தவர் = காரைக்கால் அம்மையார்
  • கட்டளைக் கலித்துறை என்னும் புதிய வகை யாப்பை முதன் முதலில் பயன்படுத்தியவர் = காரைக்கால் அம்மையார்
  • தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர் = சென்னிகுளம் அண்ணாமலையார் (காவடிச்சிந்தின் தந்தை)
  • கி.பி. (பொ.ஆ.) 1706ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன் முதலாகக் கல்விப் பணியில் ஈடுபட்டது.
  • தரங்கம்பாடியில் முதன்முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை அச்ச்சடிதவர்கள் = டச்சுக்காரர்கள்
  • இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி தமிழே ஆகும்.
  • தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் = மனோன்மணீயம்.
  • தொல்காப்பியம் முதன் முதலில் 1847 ஆம் ஆண்டு மகாலிங்கையரவர் என்பவரால், நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் எழுத்ததிகாரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.
  • தமிழில் அச்சிடப்பட்ட முதல் இலக்கண நூல் = நன்னூல் (1835)
  • தொல்காப்பியம் முழுவதையும் முதன் முதலில் அச்சடித்து வெளியிட்டவர் = சாமுவேல்பிள்ளை ஆவார். இவர் 1858 ஆம் ஆண்டு இதனை வெளியிட்டார்.

 

 

Leave a Reply