12 ஆம் வகுப்பு நற்றிணை

12 ஆம் வகுப்பு நற்றிணை

12 ஆம் வகுப்பு நற்றிணை
12 ஆம் வகுப்பு நற்றிணை

12 ஆம் வகுப்பு நற்றிணை

  • நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது நற்றிணை.
  • நானூறு பாடல்கள் உள்ளன.
  • அடி எல்லை = 9 முதல் 12.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

நற்றிணை நூல் குறிப்பு

  • அவை அகப்பொருள்பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
  • அகப்பொருள்பற்றிய பாடல்கள் கொண்ட நூலாக இருந்தாலும் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ள நூல் = நற்றிணை.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • நற்றிணையை தொகுத்தவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
  • 11TH TAMIL நற்றிணை

வரைவு கடாதல் என்றால் என்ன

  • பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான்.
  • அப்பொழுது தோழி தலைவனை நோக்கி, “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்” என வரைவு (மணஞ்செய்துகொள்வது) தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.

நக்கண்ணையார் ஆசிரியர் குறிப்பு

  • நக்கண்ணையார் பெண்பாற் புலவர் ஆவார்.
  • இவர் “பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணை” என் கூறப்படுபவர்.
  • உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான்.
  • அவன் தன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வாழ்ந்து வந்தான்.
  • அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பவனை போரில் வெற்றி கொண்டான்.
  • அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83,84,85 ஆம் பாடல்கள் மூலம் அறியலாம்.

அருஞ்சொற்பொருள்

  • இறவு = இறாமீன்
  • இறவுப்பறம் = இறாமீனின் புறம்
  • முதல் = (தாழையின்) அடி
  • பிணர் = சருச்சரை (சொர சொரப்பு)
  • தடவு = பெருமை
  • சுறவு = சுறாமீன்
  • சுறவுக்கோடு = சுறாமீனின் முகத்தில் நீண்டுள்ள கொம்பு போன்ற முள்
  • களிறு = ஆண்யானை
  • மருப்பு = தந்தம்
  • உழை = பெண்மான்
  • விழவுக்களம் = விழா நிகழுமிடம்
  • உரவு = வலிமை
  • உரவு நீர் = வலிமையுடைய கடல் நீர்
  • சேர்ப்ப = நெய்தல் நிலத் தலைவனே
  • இனமணி = மணிகளின் தொகுதி
  • இயக்க = செலுத்த
  • செலீஇய = செல்லும் பொருட்டு
  • சின்னாள் = சிலநாள்
  • சென்மே = செல்வாயாக.

இலக்கணக்குறிப்பு

  • இறவுப்புறம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • களிற்று மருப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • முள்ளிலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க்க தொகை
  • நன்மான், நெடுந்தேர் – பண்புத்தொகை
  • செலீஇய – சொல்லிசை அளபெடை

 

 

 

 

Leave a Reply