12 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து
12 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து
- “நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் நூலில் கவிஞரின் பாடல்கள் பல தொகுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
- ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ என்னும் நூலில் தெய்வத் திருமலர், தமிழ்த் தேன்மலர், காந்தி மலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ்மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவை மலர் என்னும் தலைப்புகளில் கவிஞரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
- கவிஞர் சத்தியாகிரகத் தொண்டர்கள் பாடுவதற்கென இயற்றிய சில பாடல்கள் “என்னுடைய நாடு” என்னும் தலைப்பில் தேசிய மலரில் இடம் பெற்றுள்ளன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நாமக்கல் கவிஞர் ஆசிரியர் குறிப்பு
- நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் = இராமலிங்கனார்
- பெற்றோர் = வெங்கடராமன், அம்மணியம்மாள்
- இவற் முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் சிறந்தவர்.
- சிறந்த விடுதலைப் போராட்ட வீரர்.
- இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தார்.
- தமிழக அரசு இவரை சட்ட மேலவை உறுபினராக நியமித்தது.
- நடுவண் அரசு இவருக்கு “பத்மபூஷன்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
அருஞ்சொற்பொருள்
- தினந்தினம் = நாள்தோறும்
- சொந்தமில்லாதவர் = இந்நாட்டிற்கு உரிமையில்லாதவர்
- வந்தவர் = வேற்று நாட்டிலிருந்து வந்தவர்
- தூங்கிக் கிடந்தது = விழிப்புணர்ச்சியற்றிருந்தது
- மாள = சாக (இல்லாது போக)
- வாடின = தளர்ந்த; சோர்வுற்ற
- ஓடின = மறைந்தன
- எண்ணத்தைக் கூடு = எண்ணத்தைக் கொள்
இலக்கணக்குறிப்பு
- தினந்தினம் – அடுக்குத்தொடர்
- வந்தவர் – வினையாலணையும் பெயர்
- போனவர் – வினையாலணையும் பெயர்
- இல்லாதவர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
- யாரையும் – முற்றும்மை