12 ஆம் வகுப்பு சிவபெருமான்
12 ஆம் வகுப்பு சிவபெருமான்
- சிவபெருமான் பற்றிய பாடல், சுந்தரர் தேவாரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
சுந்தரர் ஆசிரியர் குறிப்பு
- சுந்தரர் தேவாரம் பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
- சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் பிறந்தவர்.
- பெற்றோர் = சடையனார், இசை ஞானியார்.
- சுந்தரரின் இயற்பெயர் = நம்பிஆரூரர்
- இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்.
- சிவபெருமான் இவரைத் தம் தோழராகத் கொண்டமையால் “தம்பிரான் தோழர்” என அழைக்கப்பட்டார்.
- இவர் எழுதிய திருதொண்டதொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சுந்தரர் சிறப்பு
- “இறைவனை வழிபடு பொருளாக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பொருளாகவும் கொண்டு வாழ்ந்து காட்டியவர் சுந்தரர்” என்று கூறியவர் = தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
சொற்பொருள்
- கனக மால்வரை = பெரிய பொன்மலை
- காமகோபன் = காமனைக் காய்ந்தவன்
- ஆவணம் = அடிமையோலை
இலக்கணக்குறிப்பு
- கண்ணுதல் = இலக்கணப் போலி
- பழ ஆவணம் = பண்புத்தொகை
- சொற்பதம் = ஒருபொருட் பன்மொழி