12 ஆம் வகுப்பு நற்றிணை
12 ஆம் வகுப்பு நற்றிணை
- நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது நற்றிணை.
- நானூறு பாடல்கள் உள்ளன.
- அடி எல்லை = 9 முதல் 12.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நற்றிணை நூல் குறிப்பு
- அவை அகப்பொருள்பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
- அகப்பொருள்பற்றிய பாடல்கள் கொண்ட நூலாக இருந்தாலும் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ள நூல் = நற்றிணை.
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
- நற்றிணையை தொகுத்தவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
- 11TH TAMIL நற்றிணை
வரைவு கடாதல் என்றால் என்ன
- பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான்.
- அப்பொழுது தோழி தலைவனை நோக்கி, “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்” என வரைவு (மணஞ்செய்துகொள்வது) தோன்றக் கூறுவது வரைவு கடாதலாகும்.
நக்கண்ணையார் ஆசிரியர் குறிப்பு
- நக்கண்ணையார் பெண்பாற் புலவர் ஆவார்.
- இவர் “பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணை” என் கூறப்படுபவர்.
- உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான்.
- அவன் தன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வாழ்ந்து வந்தான்.
- அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பவனை போரில் வெற்றி கொண்டான்.
- அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83,84,85 ஆம் பாடல்கள் மூலம் அறியலாம்.
அருஞ்சொற்பொருள்
- இறவு = இறாமீன்
- இறவுப்பறம் = இறாமீனின் புறம்
- முதல் = (தாழையின்) அடி
- பிணர் = சருச்சரை (சொர சொரப்பு)
- தடவு = பெருமை
- சுறவு = சுறாமீன்
- சுறவுக்கோடு = சுறாமீனின் முகத்தில் நீண்டுள்ள கொம்பு போன்ற முள்
- களிறு = ஆண்யானை
- மருப்பு = தந்தம்
- உழை = பெண்மான்
- விழவுக்களம் = விழா நிகழுமிடம்
- உரவு = வலிமை
- உரவு நீர் = வலிமையுடைய கடல் நீர்
- சேர்ப்ப = நெய்தல் நிலத் தலைவனே
- இனமணி = மணிகளின் தொகுதி
- இயக்க = செலுத்த
- செலீஇய = செல்லும் பொருட்டு
- சின்னாள் = சிலநாள்
- சென்மே = செல்வாயாக.
இலக்கணக்குறிப்பு
- இறவுப்புறம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- களிற்று மருப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
- முள்ளிலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க்க தொகை
- நன்மான், நெடுந்தேர் – பண்புத்தொகை
- செலீஇய – சொல்லிசை அளபெடை
- 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 11 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 11 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 9 ஆம் வகுப்பு தமிழ்
- 8 ஆம் வகுப்பு தமிழ்
- 7 ஆம் வகுப்பு தமிழ்
- 6 ஆம் வகுப்பு தமிழ்
- 12 ஆம் வகுப்பு நற்றிணை
- 12 ஆம் வகுப்பு நற்றிணை
- 12 ஆம் வகுப்பு நற்றிணை