12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
- மாலைக்கால வருணனை பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ளது.
- மாயச் சூதினுக்கு மனம் இணங்கிய பாண்டவர்கள், அத்தினாபுரிக்குப் பயணம் புறப்படுகிறார்கள்.
- பயணத்தினிடையே மாலைக்காலத்தில் ஓரிடத்தில் தங்குகிறார்கள்.
- அப்பொழுது அந்திவானத்தின் அழகுக் காட்சிகளை எல்லாம் அர்ச்சுனன் பாஞ்சாலியிடம் கூறுகிறான்.
- வானத்தைக் கடலாகவும்
- மேகக் கூட்டங்களை நீரோடையாகவும் தங்கத் தீவுகளாகவும், பொய்கையாகவும், தோணியாகவும், திமிங்கலங்களாகவும் உருவகித்துக் கூறுகிறார் பாரதியார்.
- மாலைக்கால வருணனை பாஞ்சாலி சபதத்தின் “அழைப்புச் சருக்கத்தில்” உள்ளது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாஞ்சாலி சபதம் நூல் குறிப்பு
- வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரதக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்துள்ளார்.
- ‘பாஞ்சாலி நம் பாரதத்தாய்
- துரியோதனக் கூட்டம் நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்
- பாண்டவர்கள் – அன்றைய பாரத மக்கள் என்று, படிப்பவர் எண்ணுமாறு பாஞ்சாலிசபதம் பாடப்பெற்றுள்ளது.
- பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை = ஐந்து.
பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள்
- பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை = ஐந்து.
- அழைப்புச் சருக்கம்
- சூதாட்டச் சருக்கம்
- அடிமைச் சருக்கம்
- துகிலுரிதற்சருக்கம்
- சபதச் சருக்கம்
பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் முன்னுரை
- பாரதியார் பாஞ்சாலி சபதத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- எளியபதங்கள், எளியநடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன்,
- நமது தாய்மொழிக்குப் புத்துயிர் தருவோனாகின்றான்.
- ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்குபொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்துதல் வேண்டும்.
- காரியம் மிகப்பெரிது, எனது திறமை சிறிது.
- ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன்.
- பிறருக்கு ஆதர்சமாக அன்று; வழிகாட்டியாக!”
பாரதியார் ஆசிரியர் குறிப்பு
- “நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்” என்று பாடியவர் = மகாகவி பாரதியார்.
- பாரதியார் 1882 ஆம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள் 11ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்து எட்டயபுரத்தில் பிறந்தார்.
- இவர் பெற்றோர் சின்னச்சாமி ஐயர்; இலக்குமி அம்மாள்.
- பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.
- இளமையிலேயே பாப்புனையும் ஆற்றல் பெற்றிருந்தமையால், கலைமகள் என்னும் பொருள் தரும் ‘பாரதி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்.
- இளமையிலேய கலைமகள் என்னும் பொருள் தரும்,”பாரதி” என்னும் பட்டதை பெற்றார்.
- ‘தமிழ் நாட்டில் தமிழ்ப்புலவர் ஒருவன் இல்லையெனும் வசை நீங்க’ வந்து தோன்றியவர் பாரதியார்.
- அவர், பாட்டுத் திறத்தாலே இந்த வையகத்தைப் பாலித்திடச் செய்தவர்.
- பண்டிதர்களின் கரடுமுரடான நடையில் தேங்கிக் கிடந்த தமிழைப் பலரும் படித்தறியும் வகையில், எளிய, இனிய பாக்களாக வடித்து உலவவிட்டவர் பாரதியார்.
- இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இவர்.
- இவரின் முப்பெரும் படைப்புகள் = கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு.
- முப்பெரும் பாடல்களையும், நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் சமுதாயச் சீர்த்திருத்த உணர்வும் உணர்வும் ஊட்டுகின்ற நூற்றுக்கணக்கான பாடல்களையும் பாடியதோடு அமையாது ஞானரதம், தராசு முதலான உரைநடை இலக்கியங்களையும் படைத்துத் தமிழன்னைக்கு வளஞ்சேர்ந்தவர் ஆவார்.
- தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு, அரபு முதலான பலமொழிகளில் புலமை பெற்றிருந்த இந்த மாக்கவி “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்” எனப் பாடித் தமிழ்மொழியின் பெருமையை உலகறியச் செய்தவர். ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்தொழுது படித்திடடி பாப்பா’ எனப் பாப்பாவுக்கு கூறுவதுபோல் பலருக்கும் கூறித் தமிழ்ப்பற்றை வளர்த்த மாபெருங் கவிஞராவார்.
தமிழ்ப் பாவலர் பாரதியார்
- இவர் ‘தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ எனவும் ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ எனவும் தமிழ்மொழி பரவிட விழைந்த தமிழ்ப் பாவலர் ஆவார்.
விடுதலைக் கவிஞர் பாரதியார்
- ஆன்மீக விடுதலை, பெண்விடுதலை, சமுதாய விடுதலை, முதலான விடுதலைகளை உள்ளடக்கிய நாட்டுவிடுதலையை விழைந்த விடுதலைக் கவிஞர் ஆவார்.
சொற்பொருள்
- பரிதி – சூரியன்
- வண்ணம் – அழகு
- முகில் – மேகம்
- பொய்கை – நீர்நிலை
- இருட்கடல் – நீலக்கடல்
- களஞ்சியம் – தொகுப்பு
இலக்கணக்குறிப்பு
- படர்முகில் – வினைத்தொகை
- செழும்பொன் – பண்புத்தொகை
- தங்கத்தீவு – உருவகம்
- பொற்கரை – உருவகம்
- சுடரொளி – வினைத்தொகை
- 12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
- 12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
- 12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
- 12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை