ஒருமை:
- ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிக்கும்.
- ஒருமையில் தொடரும் ஒரு தொடரின் முடிவு ஒருமையில் தான் முடிய வேண்டும்.
- உயர்திணையில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை.
- அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை.
எ.கா: மலர் விரிந்தது. – இதில் ‘மலர்’ என்பது ஒருமை.
அறுவகைப் பெயர்கள்:
- பொருள்: மலர், மலர்கள்
- இடம்: மலை, மலைகள்
- காலம்: நொடி, நொடிகள்
- சினை: விரல், விரல்கள்
- குணம்: அழகு, அழகு
- தொழில்: செலவு, செலவுகள்
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:
- மான் துள்ளிக் குதித்தது.
- சிறுத்தை வேகமாக ஒடியது.
- அம்மா கடைத் தெருவிலிருந்து வந்தார்.
- திருத்தேர் இன்று நிலைக்கு வராது.
- ஒவ்வொரு கருத்தும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகும்.
- மாணவி தேர்வு எழுதினாள்.
- கந்தன் நாளைக்கு சென்னைக்கு புறப்படுவார்.
- மரம் சாய்ந்தது.
- தம்பு வருகிறான்.
- ஆடு வயலில் மேய்ந்தது.
- தென்றல் மெல்ல வீசியது.
பன்மை:
- பன்மை என்பது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைக் குறிக்கும்.
- பன்மையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவானது பன்மையில் தான் முடிய வேண்டும்.
- உயர்நிணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை.
- அஃறிணையில் ‘கள்’ என்னும் விகுதி பெற்று வரும் சொற்கள் பன்மை.
- கள்-விகுதி பெறாமல் வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு.
- இதனைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்பர்.
எ.கா: மலர்கள் விரிந்தன. – இதில் ‘மலர்கள்’ என்பது பன்மை
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:
- கருத்துகள் எல்லாம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியன.
- பூனைகள் இங்கு வாரா.
- மான்கள் துள்ளிப் பாய்ந்தன.
- பழங்கள் எல்லாம் அழுகிப் போயின.
- மரங்கள் சாய்ந்தன.
- கருவிகள் பழுதடைந்தன.
- தீய பண்புகள் வாழ்வைக் கெடுத்தன.
- திருக்குறள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள கடைமைகளைக் காட்டுகின்றன.