ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்

ஒருமை:

  • ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிக்கும்.
  • ஒருமையில் தொடரும் ஒரு தொடரின் முடிவு ஒருமையில் தான் முடிய வேண்டும்.
  • உயர்திணையில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை.
  • அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை.

எ.கா: மலர் விரிந்தது. – இதில் ‘மலர்’ என்பது ஒருமை.

 

அறுவகைப் பெயர்கள்:

  • பொருள்: மலர்,  மலர்கள்
  • இடம்:  மலை, மலைகள்
  • காலம்: நொடி, நொடிகள்
  • சினை: விரல், விரல்கள்
  • குணம்: அழகு, அழகு
  • தொழில்:  செலவு, செலவுகள்

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

  • மான் துள்ளிக் குதித்தது.
  • சிறுத்தை வேகமாக ஒடியது.
  • அம்மா கடைத் தெருவிலிருந்து வந்தார்.
  • திருத்தேர் இன்று நிலைக்கு வராது.
  • ஒவ்வொரு கருத்தும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகும்.
  • மாணவி தேர்வு எழுதினாள்.
  • கந்தன் நாளைக்கு சென்னைக்கு புறப்படுவார்.
  • மரம் சாய்ந்தது.
  • தம்பு வருகிறான்.
  • ஆடு வயலில் மேய்ந்தது.
  • தென்றல் மெல்ல வீசியது.

பன்மை:

  • பன்மை என்பது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைக் குறிக்கும்.
  • பன்மையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவானது பன்மையில் தான் முடிய வேண்டும்.
  • உயர்நிணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை.
  • அஃறிணையில் ‘கள்’ என்னும் விகுதி பெற்று வரும் சொற்கள் பன்மை.
  • கள்-விகுதி பெறாமல் வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு.
  • இதனைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்பர்.

எ.கா: மலர்கள் விரிந்தன. – இதில் ‘மலர்கள்’ என்பது பன்மை

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

  • கருத்துகள் எல்லாம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியன.
  • பூனைகள் இங்கு வாரா.
  • மான்கள் துள்ளிப் பாய்ந்தன.
  • பழங்கள் எல்லாம் அழுகிப் போயின.
  • மரங்கள் சாய்ந்தன.
  • கருவிகள் பழுதடைந்தன.
  • தீய பண்புகள் வாழ்வைக் கெடுத்தன.
  • திருக்குறள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள கடைமைகளைக் காட்டுகின்றன.

Leave a Reply