6TH HISTORY வரலாறு என்றால் என்ன

6TH HISTORY வரலாறு என்றால் என்ன

6TH HISTORY வரலாறு என்றால் என்ன

6TH HISTORY வரலாறு என்றால் என்ன

  • வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு.
  • வரலாற்றின் காலம் ஆண்டுகளில் கணக்கிடப்படுகிறது. இது கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.
    • கி.மு (பொ.ஆ.மு) = கிறித்து பிறப்பதற்கு முன் (பொது ஆண்டின் முன்)
    • கி.பி. (பொ.ஆ) = கிறித்து பிறந்த பின் (பொது ஆண்டு)

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

6.3x

download1

கிரேக்கச் சொல் இஸ்டோரியா

  • வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான “இஸ்டோரியா” (ISTORIA) என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.
  • “இஸ்டோரியா” என்ற சொல்லின் பொருள் = விசாரிப்பதன் மூலம் கற்றல்.

இந்தியாவில் அகழ்வாய்வு செய்யபப்ட்ட சில முக்கிய இடங்கள்

  • இந்தியாவில் காணப்படும் பழைய கற்கால இடங்கள் = பிம்பேட்கா, ஹன்சாகி பள்ளத்தாக்கு, அத்திரம்பாக்கம்.
  • இந்தியாவில் காணப்படும் புதிய கற்கால இடங்கள் = புர்ஜஹோம், மெஹர்கர், கோல்டிவா, மாகரா, சிரண்ட், டயோஜலி ஹேடிங், பிரம்மகிரி, பையனப்பள்ளி
  • இந்தியாவில் காணப்படும் வெண்கலக் கால இடங்கள் = லோத்தல்,
  • இந்தியாவில் கானபப்டும் இரும்புக் கால இடங்கள் = ஹல்லூர், ஆதிச்சநல்லூர்.
6TH HISTORY வரலாறு என்றால் என்ன
6TH HISTORY வரலாறு என்றால் என்ன

நாணயவியல் என்றால் என்ன

  • நாணயங்கள் பற்றிய படிப்பு “நாணயவியல்” என்று அழைக்கப்படுகிறது.

கல்வெட்டியல் என்றால் என்ன

  • பழங்கால கல்வெட்டுகளில் உள்ள எழுத்துப் பொறிப்புகளை

வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றால் என்ன

  • வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.

வரலாற்றுத் தொடக்க காலம் என்றால் என்ன

  • வரலாற்றுத் தொடக்க காலம் (PROTO HISTORY) என்பது, “வரலாற்றுக்கும், வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம்” ஆகும்.
6TH HISTORY வரலாறு என்றால் என்ன
6TH HISTORY வரலாறு என்றால் என்ன

நாய்களை பழக்கப்படுத்துதல்

  • பழங்கால மனிதர்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும் வேட்டைக்காகவும் நாய்களைப் பழக்கப்படுத்தினார்கள்.
  • மனிதன் முதன் முதலில் பழக்கப்படுத்திய விலங்கு = நாய்.

வலிமைமிக்க பேரரசர் அசோகர்

  • பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்ற அரசர் அசோகர் ஆவார்.
  • இவரது ஆட்சியில் தான் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது.
  • கலிங்கப் போருக்குப் பின் பல உயிர்கள் மடிவதைக் கண்டு வருந்தி, போர் தொடுப்பதைக் கைவிட்டார்.
  • அதற்குப் பிறகு புத்த சமயத்தைத் தழுவி, அமைதியையும் அறத்தையும் பரப்புவதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.
  • வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் அசோகர்தான்.
  • உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவரும் அசோகரே ஆவார்.
  • நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூணில் உள்ள முத்திரையிலிருந்தே பெறப்பட்டது.
  • ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்களான வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்கள் வரலாற்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்த வரலாற்றுச் சான்றுகள்தான் மாமன்னர் அசோகரின் சிறப்புகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்தன.
  • சார்லஸ் ஆலன் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்துத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.
  • அந்த நூலின் பெயர் The Search for the India’s Lost Emperor’.
  • அசோகரின் பெருமையை நமக்கு எடுத்துச் சொல்பவன் = சாஞ்சி ஸ்தூபி, சாரநாத் கற்றூண்.
6TH HISTORY வரலாறு என்றால் என்ன
6TH HISTORY வரலாறு என்றால் என்ன

புத்தக வினா

  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை = வேட்டையாடுதல்.
  2. கூற்று = பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
      • காரணம் = குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.
        • விடை = கூற்றும் சரி, கூற்றுக்கான காரணமும் சரி.
  1. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் அகழாய்வுகள் மூலமாகத் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
    • விடை = அருங்காட்சியங்கள்.
  2. தவறான இணையை கண்டுபிடி:
    • பூனைகள் – முதலில் பழக்கப்பட்ட விலங்கு
    • சரியான விடை = மனிதன் முதன் முதலில் பழக்கப்பட்ட விலங்கு = நாய்.
  3. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் = குகைகள்
  4. வரலாற்றின் தந்தை = ஹெரோடோடஸ்
  5. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு = நாய்.
  6. கல்வெட்டுகள் ________________ ஆதாரங்கள் ஆகும் = தொல்பொருள்.
  7. அசோகச் சக்கரத்தில் ________ ஆரக்கால்கள் உள்ளன = 24.

 

 

 

Leave a Reply