10 ஆம் வகுப்பு பொது

10 ஆம் வகுப்பு பொது

10 ஆம் வகுப்பு பொது
10 ஆம் வகுப்பு பொது

10 ஆம் வகுப்பு பொது

  • எழுத்திலக்கணம், சொல் இலக்கணம் ஆகிய இரண்டிலும் கூறப்படாத பொதுவான செய்திகள் சொல்லப்படுவதால், இது “பொது” என அழைக்கப்படுகிறது.

வெளிப்படை என்றால் என்ன

  • வெளிப்படையாக தன்பொருளை உணர்த்தும் சொல் வெளிப்படை எனப்படும்.
  • எ.கா:
    • உலகிலேயே பண்பாட்டில் தமிழ்நாடுதான் தலைசிறந்து விளங்குகின்றது.
  • இத்தொடரில் வந்துள்ள “தமிழ்நாடு” என்னும் சொல் வெளிப்படையாக இடத்தைக் குறித்து வந்துள்ளது.

குறிப்பு என்றால் என்ன

  • ஒரு தொடர் முன்னும் பின்னும் வருகின்ற சொற்கள் உணர்த்தும் குறிப்பால் ஒரு பொருளைத் தருவது குறிப்பு எனப்படும்.
  • எ.கா:
    • பூப்பந்து விளையாட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது.
  • இத்தொடரில் “தமிழ்நாடு” என்பது “ஆகுபெயராய்” நின்று குறிப்பால் தமிழ்நாடு விளையாட்டு வீரர்களைக் குறிக்கிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

குறிப்புச்சொற்கள் என்றால் என்ன

  • ஒன்றொழி பொதுச்சொல், விகாரச்சொல், தகுதிவழக்குச்சொல், ஆகுபெயர், அன்மொழித்தொகை, வினைக்குறிப்புச் சொல், முதற்குறிப்புச் சொல், தொகைக் குறிப்புச் சொல் போன்றவை குறிப்பால் பொருள் தரும் சொற்கள் ஆகும்.

ஒன்றொழி பொதுச்சொல் என்றால் என்ன

  • உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டிலும் பொதுவான சொற்கள் உண்டு.
  • ஒரு சொல், தொடரில் முன்னும் பின்னும் வரும் சொற்களின் தொடர்பாலும், குறிப்பாலும் ஒரு பாலை நீக்கி, மற்றொருபாலைச் சுட்டும்.
  • அதற்கு, ஒன்றொழி பொதுச்சொல் என்பது பெயர்.

உயர்திணை ஒன்றொழி பொதுச்சொல் என்றால் என்ன

  • எ.கா;
    • வீட்டின்முன் ஐவர் கோலமிட்டனர்.
    • நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர்.
  • முதல் தொடரில் வந்துள்ள ஐவர் என்னும் பொதுச்சொல் கோலமிட்டனர் என்னும் குறிப்பால் ஆண்பாலை நீக்கிப் பெண்பாலை உணர்த்தி நின்றது.
  • இரண்டாம் தொடரிலுள்ள ஐவர் என்னும் பொதுச் சொல், போர்க்களம் என்னும் சொல்லின் குறிப்பால் பெண்பாலை விடுத்து, ஆண்பாலை மட்டும் உணர்த்தி நின்றது.
10 ஆம் வகுப்பு பொது
10 ஆம் வகுப்பு பொது

அஃறிணையில் ஒன்றொழி பொதுச்சொல் என்றால் என்ன

  • எ.கா:
    • இம்மாடு வயலில் உழுகிறது.
    • இம்மாடு பால் கறக்கிறது.
  • முதல் தொடரில் வந்துள்ள ‘மாடு’ என்னும் பொதுச் சொல் உழுகிறது என்னும் வினைக்குறிப்பால் காளைமாட்டையும், இரண்டாவது தொடரில் வரும் ‘மாடு’ என்னும் பொதுச்சொல் கறக்கிறது என்னும் வினைக்குறிப்பால், பசுமாட்டையும் குறிப்பிடுகின்றது.
  • இவ்வாறு, ஒரு பொதுச்சொல் முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஆண்பாலையோ பெண்பாலையோ உணர்த்தி வருவது ஒன்றொழி பொதுச்சொல் எனப்படும்.

இனங்குறித்தல் என்றால் என்ன

  • எ.கா:
    • கதிர்வேல் வெற்றிலை தின்றான்.
  • இத்தொடர், கதிர்வேல் வெற்றிலை மட்டுமா தின்றான். வெற்றிலையோடு அதற்கு இனமான பாக்கு, சுண்ணாம்பு முதலானவற்றையும் சேர்த்துத் தின்றான் எனப் பொருள்படுகிறது.
  • இவ்வாறு ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும்.

அடுக்குத்தொடர் என்றால் என்ன

  • அசைநிலைக்கும், விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளில் இசையை நிறைவு செய்வதற்கும் இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
  • எ.கா = அன்றே அன்றே, போ போ, எறி எறி

இரட்டைக்கிளவி என்றால் என்ன

  • இரட்டித்து நின்று பொருள் உணர்த்தும் சொற்கள் இரட்டித்தே வரும்; பிரித்தால் பொருள் தராது; இதனை இரட்டைக்கிளவி என்பர்.
  • (கிளவி சொல்) இரட்டைக் கிளவி = இரண்டு சொல்.
  • எ.கா;
    • படபடவெனப் பேசினாள்.
    • கலா, கலகலவெனச் சிரித்தாள்

அடுக்குத்தொடருக்கும் இரட்டைக்கிளவிக்கும் உள்ள வேறுபாடு

அடுக்குத்தொடர்

இரட்டைக்கிளவி

சொற்கள் தனித்தனியே நிற்கும்

சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும்
பிரித்தால் பொருள் தரும்

பிரித்தால் பொருள் தராது

இரண்டு, மூன்று, நான்கு முறை அடுக்கி வரும்

இரட்டித்தே வரும்
விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி

இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்

 

Leave a Reply