7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- “பிகிநிதயா” என்பது எந்த சமய நூல் ஆகும் = பௌத்த சமயம்.
- கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் 62 வகைப்பட்ட தத்துவ, சமயப்பள்ளிகள் இருந்ததாக கூறும் நூல் = “பிகிநிதயா” என்னும் பௌத்த நூல்.
- கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் எத்தனை வகைப்பட்ட தத்துவ, சமயப்பள்ளிகள் இருந்ததாக “பிகிநிதயா” என்னும் பௌத்த நூல் கூறுகிறது = 62 தத்துவ, சமயப்பள்ளிகள்.
- இடைக்காலத்தின் பிற்பகுதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருந்த சமயம் = ஆசீவகம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சமணம் குறிப்புகள்
- மகாவீரரின் அறிவுரைகள் பல் ஆண்டுகளாக வாய்மொழியாகவே மக்களுக்கு சொல்லப்பட்டு வந்தது.
- மகாவீரர் இயற்கை எய்திய (நிர்வாணா நிலை) சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகே சம அறிஞர்கள் பாடலிபுத்திரத்தில் ஒன்று கூடி, தங்கள் சமயத்தின் போதனைகள், விதிகளை தொகுக்க முயற்சி மேற்கொண்டனர்.
- முதல் சமணப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற இடம் = பாடலிபுத்திரம்.
- சமணப்பேரவை முதன் முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்? = பாடலிப்புத்திரம்.
- முதல் சமணப் பேரவைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
- இரண்டாவது சமணப் பேரவைக் கூட்டம் நடைபெற்ற இடம் = வல்லபி.
- இரண்டாவது சமணக் கூட்டத்தின் முடிவின் படை, சமண இலக்கியங்கள தொகுக்கப்பட்டன.
சமணத்தின் ஐந்து பெரும் உண்மைகள்
- அகிம்சை = எந்த உயிரினத்தையும் துன்புறுத்த கூடாது
- சத்யா = உண்மை
- அசௌர்யா = திருடாமை
- பிரம்மச்சரியா = திருமணம் செய்து கொள்ளாமை
- அபரிக்கிரகா = பணம், பொருள், சொத்து மீது ஆசை கொள்ளாமை
சமணப் பிரிவுகள்
- சமண சமயத்தின் இரு பிரிவுகள் யாவை = திகம்பரர், சுவேதாம்பரர்.
- எப்பொழுது சமண சமயத்தில் இரு பிரிவுகள் உருவாகின = கி.பி. முதலாம் நூற்றாண்டில்.
- எந்த நூலை திகம்பரர், சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினரும் தங்களின் அடிப்படை நூலாக ஏற்றுக் கொண்டனர் = ஆகம சூத்திரங்கள்.
சமண இலக்கியங்கள்
- சமண இலக்கியங்கள் பொதுவாக இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
- ஆகம சூத்திரங்கள்
- ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்
ஆகம சூத்திரங்கள்
- எந்த மொழியில் சமண சமயத்தின் புனித நூலான “ஆகம சூத்திரங்கள்” எழுதப்பட்டுள்ளது = அர்த்த-மகதி பிராகிருத மொழி.
- மகாவீரரின் நேரடி போதனைகள் என்னாவரு தொகுக்கப்பட்டுள்ளன = ஆகம சூத்திரங்கள் நூலாக.
- ஆகம சூத்திரங்களில் உள்ள நூல்களின் எண்ணிக்கை = 12.
- மகாவீரரின் நேரடி சீடர்களால் தொகுக்கப்பட்டவை = ஆகம சூத்திரங்கள்.
- ஆகம சூத்திரங்கள் 12 நூல்களில் 12 வது ஆகம சூத்திர நூல் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்
- ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் என்பது = ஆகம சூத்திரங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள் போன்றவை ஆகும்.
- சமண சமையத்தில் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் மொத்தம் எத்தனை = 84.
- 41 சூத்திரங்கள்
- 11 அங்கங்கள் (சுவேதாம்பரர்களால் பின்பற்றப்படும் நூல்கள்)
- 12 உப அங்கங்கள் (நெறிமுறைக் குறிப்பேடுகள்)
- 5 சேடாக்கள் (துறவிகளுக்கான நடத்தை விதிகள்)
- 5 மூலங்கள் (சமணத்தின் அடிப்படை கோட்ப்பாடுகள்)
- பத்திரபாகுவின் “கல்பசூத்திரம் போன்ற 8 நூல்கள்
- 12 உரைகள்
- ஒரு மாபெரும் உரை (மகா பாஷ்யா)
- 41 சூத்திரங்கள்
- சமண சமையத்தின் தாக்கம் பெருமளவில் இருப்பதாக நம்பப்படும் நூல் = பஞ்சதந்திரம்.
- சமண சமயத்தின் 11 அங்கங்கள் நூல்களை பின்பற்றுவோர் = சுவேதாம்பரர்கள்.
கல்பசூத்திரம்
- “கல்பசூத்திரம்” எனும் நூலின் ஆசிரியர் = பத்ரபாகு.
- சமண சமையத்தின் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் = பத்ரபாகுவின் கல்பசூத்திரம்.
- “ஜைனசரிதா” என்பது = கல்பசூத்திரம் நூலின் முதல் பகுதி.
- சமண சமயத்தை நிறுவியவர் = ரிஷபதேவர்.
- சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் = ரிஷபதேவர்.
- சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் = பார்சவநாதர்.
- சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் (24வது தீர்த்தங்கரர்) = மகாவீரர்.
- “கல்பசூத்திரம்” நூலில் யாருடைய வரலாறு இடம்பெற்றுள்ளது = 23வது தீர்த்தங்கரர் “பார்சவநாதர்” மற்றும் கடைசி தீர்த்தங்கரர் (24வது தீர்த்தங்கரர்) “மகாவீரர்” ஆகியோரின் வரலாறு இடம்பெற்றுள்ளது.
- “கல்பசூத்ரா” நூலின் ஆசிரியர் = பத்ரபாகு.
- பத்ரபாகு எந்த மௌரிய அரசரோடு தென்னிந்தியாவின் மைசூர் நகருக்கு புலம்பெயர்ந்தார் = சந்திரகுப்த மௌரியர்.
- எந்த வருடம் பத்ரபாகு மற்றும் சந்திரகுப்த மௌரியர் தென்னிந்தியாவின் மைசூர் நகருக்கு புலம் பெயர்ந்தனர் = ஏறத்தாழ கி.மு. 296.
தீர்த்தங்கரர்கள் என்றால் என்ன
- நிர்வாண நிலையை அடைந்து அதன் பின்னர் இவ்வுலகிற்கும் அடுத்த உலகத்திற்கும் இடையே பாதை அமைப்பவரே “தீர்த்தங்கரர்கள்” ஆவர்.
தமிழ் மொழியில் சமண நூல்கள்
- திருத்தக்கத்தேவர் இயற்றிய “சீவக சிந்தாமணி”.
- சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்ட “நாலடியார்”.
தமிழ்நாட்டில் சமணம்
- சமணர்கள் கர்நாடகாவில் இருந்து எந்த வழியாக தமிழகம் வந்தனர் = கொங்குப் பகுதி – காவேரி கழிமுகப்பகுதி – புதுக்கோட்டைப் பகுதி – பாண்டிய நாட்டுப் பகுதி.
- தமிழர்கள் சமண மதத்தின் எப்பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தனர் = திகம்பரர்.
- தமிழகத்தின் சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள் = களப்பிரர்கள்.
சித்தன்னவாசல் குகைக்கோவில்
- சித்தன்னவாசல் எங்கு உள்ளது = புதுக்கோட்டை மாவட்டம்.
- சித்தன்னவாசல் குகைக்கோவில் நிலத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது = 70 மீட்டர் உயரத்தில்.
- சித்தன்னவாசல் குகைக் கோவிலில் இயற்கையாக அமைந்த குகை எவ்வாறு அழைக்கப்படுகிறது = ஏழடிப்பட்டம்.
- ஏழடிப்பட்டம் என்றால் என்ன = சித்தன்னவாசலில் இயற்கையாக அமைந்த குகை.
- சித்தன்னவாசலில் உள்ளவை = ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கை குகை மற்றும் ஒரு குடைவரைக் கோவில்.
- சித்தன்னவாசல் குகையில் எத்தனை சமணப் படுக்கைகள் உள்ளன = 17.
- அளவில் பெரிய கல் படுக்கையில் என்ன கல்வெட்டு உள்ளது = கி.மு இரண்டாம் நூற்றாண்டை தமிழ்-பிராமிக் கல்வெட்டு.
- கல்வெட்டுகளில் யாரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன = சமணத் துறவிகளின் பெயர்கள்.
- சித்தன்னவாசல் குடைவரைக் கோவில் என்னவாறு அழைக்கப்படுகிறது = அறிவர் கோவில்.
- குகைக் கோவிலின் முகப்பில் உள்ள தூண்களின் எண்ணிக்கை = நான்கு.
- சித்தன்னவாசல் குகைக்கோவில் எந்த காலத்தில் கட்டப்பட்டது = கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர்கள் காலத்தில்.
- சித்தன்னவாசல் குகைக்கோவிலில் உள்ள மண்டபம் = அர்த்த மண்டபம்.
- சித்தன்னவாசல் குகைக் கோவிலில் உள்ளவை,
- முன்பகுதி = அர்த்த மண்டபம்
- பின்பகுதி = கருவறை (கர்ப்பகிரகம்).
- மண்டபத்தில் உள்ளவை,
- இடது பக்க சுவர்களில் = தீர்த்தங்கர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன
- வலது பக்க சுவர்களில் = சமண ஆச்சாரியார்களின் புடைப்புச் சிற்பங்கள்
சித்தன்னவாசல் ஓவியங்கள்
- சித்தன்னவாசல் குகை சுவர் ஓவியங்கள், அஜந்தா குகை சுவர் ஓவியங்களோடு ஒப்புமை கொண்டுள்ளன.
- சித்தன்னவாசல் குகை சுவர் ஓவியங்கள், இந்திய அரசின் “தொல்லியல் துறை” சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
- எந்த ஆண்டு இந்திய தொல்லியல் துறை, சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களை தங்கள் பாதுகாப்பில் கீழ் கொண்டு வந்தது = 1958.
காஞ்சியில் சமணம்
- திருப்பருத்திக் குன்றம் உள்ள இடம் = காஞ்சிபுரம்.
- சமண சமயம் செழித்தோங்கிய காலம் = பல்லவர் காலம்.
- காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப்பயணி = யுவான் சுவாங்.
- பல்லவ மன்னன் “மகேந்திரவர்மன்” தொடக்கத்தில் சமண சமயத்தை தழுவி இருந்தார்.
- காஞ்சியில் எத்தனை சமணக் கோவில்கள் உள்ளன = இரண்டு. அவை,
- திருப்பருத்திக் குன்றம் “திரிலோக்கியநாத ஜைனசுவாமி” கோவில்.
- சந்திரபிரபா கோவில்.
- இவ்விரு கோவில்களும் பல்லவர் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
திருப்பருத்திக் குன்றம் திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில்
- எந்த ஆற்றின் கரையில் திருப்பருத்திக் குன்றம் திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் அமைந்துள்ளது = பாலாறு.
- “புஷ்பசேனா” எனும் சமண முனிவரின் சீடர் = இருகப்பா.
- விஜயநகர ஆட்சியின் பொழுது புஷ்பசேனா எனும் சமண துறவியின் சீடரான “இருகப்பா” என்பவரும், விஜயநகர அரசரான இரண்டாம் ஹரிஹர ராயரின் அமைச்சரும் சேர்ந்து இக்கோவிலில் “சங்கீத மண்டபத்தை” கட்டினர்.
- திருப்பருத்திக் குன்றம் திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவிலில், “சங்கீத மண்டபம்” கட்டப்பட்ட ஆண்டு = 1387.
- கோவிலில் வரையப்பட்ட ஓவியங்கள் அழிந்து விட்டன.
- திருபருத்திக் குன்றம் ஜைன கோவிலின் இரண்டாவது கருவறை எவ்வாறு அழைக்கப்படுகிறது = திரிகூட பஸ்தி.
- “திரிகூட பஸ்தி” என்றால் என்ன = திருபருத்திக் குன்றம் ஜைன கோவிலின் இரண்டாவது கருவறை திரிகூடா பஸ்தி என்று அழைக்கப்படுகிறது.
- இந்த இரண்டாவது கருவறையில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.
சந்திரபிரபா கோவில்
- சந்திரபிரபா எனும் தீர்த்தங்கரருக்கு அர்பணிக்கப்பட்ட கோவில் இது.
- சந்திரபிரபா கோவில் உள்ள இடம் = திருபருத்திக் குன்றம், காஞ்சிபுரம்.
தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள சமணர்களின் எண்ணிக்கை = 83,359 ஆகும்.
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள சமணர்களின் எண்ணிக்கை = 0.12% ஆகும்.
கழுகுமலை சமண குடைவரைக் கோவில்
- கழுகுமலை எங்குள்ளது = தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம்.
- தமிழ்நாட்டில் சமணர் புத்துயிர் பெற்றதை குறிக்கும் கோவில் எது = கழுகுமலை சமண குடைவரைக் கோவில் ஆகும்.
- கழுகுமலை சமண குடைவரைக் கோவிலை உருவாக்கியவர் = பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையான்.
- “பஞ்சவர் படுக்கை” உள்ள இடம் = கழுகுமலை சமண குடைவரைக் கோவில், கோவில்பட்டி.
- கல் படுக்கைகள் உள்ள பாறை எவ்வாறு அழைக்கப்படுகிறது = பஞ்சவர் படுக்கை.
- இக்கோவிலில் தீர்தங்கர்களின் உருவங்களை தவிர “யக்சன், யக்சி” (ஆண், பெண் பணியாளர்) உருவச் சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.
- யக்சன், யக்சி உருவச்சிலைகள் உள்ள சமணக் கோவில் எது = கழுகுமலை சமணக் கோவில்.
- கழுகுமலை சமண குடைவரைக் கோவில் காலம் = கி.பி. எட்டாம் நூற்றாண்டு.
வேலூர் பைரவ மலை சமணர் படுக்கை
- வேலூர் பைரவ மலை சமணர் படுக்கை அமைக்கப்பட்ட காலம் = கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.
- வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, லத்தேரி அருகே குக்கரப்பள்ளி கிராமம் என்னுமிடத்தில் உள்ள பைரவ மலையில் இக்கல் படுக்கைகள் உள்ளன.
- மூன்று குகைகளில் இரண்டில் மட்டுமே கல் படுக்கைகள் உள்ளன.
- இரு குகையில் நான்கு கல் படுக்கைகளும், ஒரு குகையில் ஒரே ஒரு கல் படுக்கையும் உள்ளன.
- தலையணைப் பகுதி இல்லாமல் கல் படுக்கைகள் காணப்படும் இடம் = வேலூர் பைரவ மலை சமணர் படுக்கை குகை.
- தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்? = வேலூர் பைரவ மலை சமணர் படுக்கை
திருமலை சமணர் கோவில்
- திருமலை சமணர் கோவில் உள்ள இடம் = திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி.
- திருமலை சமணர் படுக்கை குகை காலம் = கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.
- மூன்று சமணக் குகைகளும், இரண்டு சமணக் கோவில்களும், 22வது தீர்த்தங்கரான “நேமிநாதரின்” 16 மீட்டர் உயரச் சிலையும் உள்ளன.
- 22வது சமணத் தீர்த்தங்கரர் = நேமிநாதர்.
- தமிழ்நாட்டில் உள்ள சமணச் சிலைகளில் மிகவும் உயரமானது = திருமலை சமணக் கோவிலில் உள்ள 16 மீட்டர் உயரமுடைய 22வது தீர்த்தங்கரான நேமிநாதரின் சிலை.
மதுரையில் சமணக் குகைகள்
- மதுரையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சமணக் குகைகள் = 26 குகைகளும், 200 சமண கல் படுக்கைகளும், 60 கல்வெட்டுகளும், 100க்கும் மேற்பட்ட சிலைகளும் உள்ளன.
கீழக் குயில்குடி குடைவரைக் கோவில்
- கீழக் குயில்குடி குடைவரைக் கோயில் எங்குள்ளது = மதுரை மாவட்டம்.
- கீழக் குயில்குடி குடைவரைக் கோவில் சிற்பங்கள் எக்காலத்தை சேர்ந்தவை = கி.பி. 860 முதல் 900 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் பராந்த வீரநாராயண பாண்டியன் காலத்தை சேர்ந்தது ஆகும்.
- கீழக் குயில்குடி குடைவரைக் கோவிலில் உள்ள சிற்பங்களின் எண்ணிக்கை = 8.
- “ஆதிநாதர்” என்று அழைக்கப்படுபவர் = ரிஷபதேவர் (ரிஷபநாதர்).
சமணர்களின் கல்வி பங்களிப்பு
- சமூக, சமய வேறுபாடு இல்லாமல் அனைவர்க்கும் கல்வியை கற்றுக் கொடுத்தனர் சமணர்கள்.
- “பள்ளி” என்பது = சமணர்களின் கல்வி மையங்களாகும்.
பௌத்த சமயம்
- புத்தரின் உண்மையான பெயர் = சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர்.
- “சித்தார்த்தர் சாக்கிய முனி கௌதமர்” என்பதன் பொருள் = கௌதமர் சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர், மேலும் அவர் முழுநிறைவு எனும் இலக்கை எட்டியவர்” என்பதாகும்.
- மகாவீரரின் சமகாலத்தவர் = புத்தர்.
- போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றார்.
- அரச வாழ்வு (மிகை ஆர்வமும் இன்ப நுகர்வும்), துறவு வாழ்வு (தன்னடக்க நிலையை எய்துதல்) ஆகிய இரண்டு வழிமுறைகளும் தவறு எனக் கூறினார் புத்தர்.
- இந்த இரண்டு வாழ்விற்கும் இடைப்பட்ட வழியை புத்தர் கண்டறிந்தார். அவை “எண் வகை வழிகள்” ஆகும்.
புத்தரின் எண்வகை வழிகள்
- நல்ல எண்ணங்கள்
- நல்ல குறிக்கோள்
- அன்பான பேச்சு
- நல்ல நடத்தை
- தீது செய்யா வாழ்க்கை
- நல்ல முயற்சி
- நல்ல அறிவு
- நல்ல தியானம்
புத்தரின் போதனைகள்
- அணைத்து மனிதர்களும் சமம்.
- புத்தர் தனது போதனைகளை “பிராகிருத” மொழியில் போதித்தார்.
புத்தரின் நான்கு உண்மைகள்
- வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
- துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
- ஆசையை துறந்தால், துயரங்களை வென்று மகிழ்ச்சியை பெறலாம்.
- ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் பெறலாம்.
பௌத்த சமய இலக்கியங்கள்
- புத்தரின் போதனைகள் கி.மு. 80 இல் எழுதப்பட்டன.
- புத்தரின் போதனைகள் “பாலி” மொழியில் நூல்களாக எழுதப்பட்டன.
திரிபிடகா
- புத்தரின் போதனைகள் “திரிபிடகா” என்னும் நூலாக பாலி மொழியில் எழுத்து தொகுக்கப்பட்டுள்ளன.
- பௌத்த விதிகள் மூன்று பிரிவுகளாக உள்ளன. அவற்றை “மூன்று கூடைகள்” என்று அழைப்பர். அவை,
- வினய பிடகா
- சுத்த பிடகா
- அபிதம்ம பிடகா
வினய பிடகா
- பௌத்த நூலான “திரிபிடகா” நூலின் மூன்று பிரிவில் ஒன்று வினய பிடகா.
- பௌத்த துறவிகளுக்கான (பிட்சுக்கள்) விதிமுறைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
- துறவிகள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சுத்த பிடகா
- பௌத்த நூலான “திரிபிடகா” நூலின் மூன்று பிரிவில் ஒன்று சுத்த பிடகா.
- விவாதங்களைக் சான்றுகளைக் கொண்டு பௌத்த மதத்தின் மூலக் கோட்பாடுகளைக் ஊறுகின்றது.
அபிதம்ம பிடகா
- பௌத்த நூலான “திரிபிடகா” நூலின் மூன்று பிரிவில் ஒன்று அபிதம்ம பிடகா.
- இது நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு ஆகியன குறித்து விளக்குவதாகும்.
புத்த ஜாதகக் கதைகள்
- பௌத்த இலக்கியங்களில் காணப்படும் புத்தருடைய வாழ்க்கை தொடர்பான கதைகளைக் கூறும் நூல்.
புத்தவம்சா
- கவிதை வடிவில் எழுதப்பட்ட நூல் = புத்தவம்சா.
- கௌதம புத்தருக்கு முன்னர் எத்தனை புத்தர் வாழ்ந்ததாக “புத்தவம்சா” நூல் கூறுகிறது = 24 புத்தர்கள்.
- கௌதம புத்தருக்கு முன்னர் 24 புத்தர்கள் வாழ்ந்ததாக கூறுகின்ற நூல் = புத்தவம்சம்.
மிலிந்தபன்கா
- “மிலிந்தபன்கா” என்பதன் பொருள் = மிலிந்தாவின் கேள்விகள்.
- யார் இருவருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் நிகழ்வே “மிலிந்தபன்கா” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது = புத்த துறவி நாகசேனர் மற்றும் கிரேக்க-பாக்டீரிய அரசர் மிலிந்தா.
- மிலிந்தபன்கா நூலின் மூலம், எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருதம்.
மகாவம்சம் தீபவம்சம்
- இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்று நூல்கள் = மகாவம்சம், தீபவம்சம்.
- மகாவம்சம் = இலங்கை உட்பட இந்தியத் துணைக் கண்டத்தின் அரச குலங்களைப் பற்றி கூறுகிறது.
- தீபவம்சம் = புத்தருடைய போதனைகள் மற்றும் அவற்றை பரப்ப இலங்கை வந்தோர் பற்றிய குறிப்புகள்
முதல் பௌத்த உரையாசிரியர்
- “முதல் பௌத்த உரையாசிரியர்” என்று கூறப்படுபவர் = புத்தகோசா.
- புத்தகோசா எழுதிய நூல் = “விசுத்திமக்கா”.
அஸ்வகோஷர்
- அஷ்வகோஷர் எழுதிய நூல் = புத்தசரிதம்.
- அச்வகோஷர் ஹீனயானப் பிரிவை சேர்ந்தவர்.
- புத்தசரிதம் எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருதம்.
- சமஸ்கிருதத்தில் இதிகாச பாணியில் எழுதப்பட்ட நூல் = புத்தசரிதம்.
- புத்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் = புத்தசரிதம்.
தமிழகத்தின் பௌத்தம்
- தமிழகத்தில் பௌத்த மதத்தை பரப்பியவர்கள் = இலங்கையை சேர்ந்த புத்த துறவிகள்.
- இலங்கையை சேர்ந்த புத்த துறவிகள் மூலம் தமிழகத்தில் பௌத்தம் பரவியதற்கான சான்று = பஞ்ச பாண்டவ மலை.
- சீனப்பயணி யுவான் சுவாங் தென்னிந்திய வந்த காலம் = கி.பி. ஏழாம் நூற்றாண்டு.
- “வீரசோழியம்” = இலக்கண நூல்.
- பௌத்தர் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூல் “வீரசோழியம்” கி.பி. 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நூலாகும்.
- புத்தரின் செப்பு சிலைகள் தமிழகத்தில் எங்கு கிடைத்தன = நாகப்பட்டினம்.
- நாகப்பட்டினத்தில் கிடைத்த புத்தரின் செப்பு சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தது = கி.பி. 13 ஆம் நூற்றாண்டு.
- புத்தரின் சிலைகள் தமிழகத்தில் எங்கு கிடைத்தன = சேலம் மாவட்டம் தியாகனூர் கிராமம்.
- தமிழகத்தில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்த பொழுது விதிவிலக்காக இருந்த ஒரே இடம் = நாகப்பட்டினம்.
- தமிழகத்தில் பௌத்த மதம் வீழ்ச்சி அடையாத ஒரே இடம் = நாகப்பட்டினம்.
- நாகப்பட்டினத்தில் பௌத்த மதத்தை ஆதரித்தவர்கள் = சோழர்கள் (அரசியல் காரணங்களுகாக).
- நாகப்பட்டினத்தில் “சூடாமணி விகாரத்தை” கட்டியவர் = ஸ்ரீவிஜய அரசர்.
- சூடாமணி விகாரைக்கு ஆதரவு அளித்த சோழ அரசர் = ராஜராஜ சோழன்.
- சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் இருந்த பௌத்த சமயம் தொடர்பான சொற்களை தமிழ்ப்படுத்தியவர் = சீத்தலைச் சாத்தனார்.
- பௌத்த சமயம் தொடர்பான பிறமொழிச் சொற்களை தமிழில் மொழிப்பெயர்த்தவர் = சீத்தலைச் சாத்தனார்.
- தாந்தரீக சடங்குகளில் திறன் பெற்று விளங்கிய “வஜ்ரபோதி” என்னும் பௌத்த துறவி, பல்லவ அரசபையில் இருந்து சீனா சென்றார் என்று கூறும் சான்று யாருடைய காலத்தை சேர்ந்தது = இரண்டாம் நரசிம்ம பல்லவன்.
- பௌத்த சமயம் சரிவை சந்தித்து கொண்டிருந்த சமயம் எனக் கூறிய அரசர் = மகேந்திரவர்ம பல்லவன்.
- பௌத்த சமயம் சரிவை சந்தித்து கொண்டிருந்த சமயம் எனக் கூறிய நூல் = மகேந்திரவர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகாசனம்”.
விகாரா என்றால் என்ன
- விகாரா என்பது சம்ஸ்கிருத சொல்.
- “விகாரா” என்பதன் பொருள் = வாழ்விடம் அல்லது இல்லம்.
- தொடக்கத்தில் சுற்றி அலைந்து திரியும் துறவிகள் மழைக்காலத்தில் தங்குமிடம் விகாரைகள் ஆகும்.
தமிழகத்தில் பௌத்த விகாரை
- அகழ்வாராய்ச்சியில் தமிழகத்தில் பௌத்த விகாரை கண்டுபிடிக்கப்பட்ட இடம் = காவிரிப்பூம்பட்டினம்.
- அகழ்வாய்வில் காவிரிப்பூம்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை = புத்த விகாரை மற்றும் ஒரு பௌத்த கோவில்.
பத்மாசன நிலையில் புத்தரின் சிலை
- தமிழகத்தில் பத்மாசன நிலையில் இருந்த புத்தரின் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது = திருவாரூர் மாவட்டம் திருநாட்டியட்டாங்குடி கிராமம்.
- திருவாரூர் மாவட்டம் திருநாட்டியட்டாங்குடி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பத்மாசன நிலையில் உள்ள புத்தரின் சிலை எவ்வளு உயரம் கொண்டது = 1.03 மீட்டர் உயரம்.
ஆசீவகத் தத்துவம்
- ஆசீவகப் பிரிவை உருவாக்கியவர் = கோசலா மன்காலிபுத்தா.
- ஆசீவக மதத்தை உருவாக்கியவர் = கோசலா மன்காலிபுத்தா.
- ஆசீவகர்கள் எந்த கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர் = வினைப்பயன் (கர்மா), மறுபிறவி, முன்தீர்மானம்.
- ஆசீவகத்திற்கான நூல்கள் எதுவும் இல்லை.
- வரலாறு முழுவதும் ஆசீவகர்கள் அணைத்து இடங்களிலும் துன்பங்களையே சந்தித்துள்ளனர்.
- இருந்த போதும் ஆசீவகர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகா, பாலாற்றின் பகுதிகளில் (வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்) ஆகிய இடங்களில் இருந்துள்ளனர்.
- ஆசீவகர்கள் இறுதியாக எந்த சமயத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் = வைணவம்.
புத்தக வினாக்கள்
- சமணப்பேரவை முதன் முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்? = பாடலிப்புத்திரம்.
- ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன? = அர்த்த-மகதி பிராகிருத மொழி
- கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது? = சமண மதம்.
- தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்? = வேலூர்.
- கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது? = பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையான்.
- தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ______________ ? = திருமலை சமணக் கோவில் உள்ள 22 வது தீர்தங்கரான நேமிநாதரின் சிலை.
- புத்த சரிதத்தை எழுதியவர் __________________ ஆவார்? = அஷ்வகோஷர்.
- _________________ நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வருகை தந்தார்? = கி.பி. ஏழாம்.
- பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என _________________ எடுத்துரைக்கிறது? = மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம்.
- மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ________________ ஆதரித்தனர்? = பௌத்தமதத்தை
- 12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாக கருதப்படுகிறது? = சரி.
- வரலாறு முழுவதும் ஆசீவகர்கள் அணைத்து இடங்களிலும் அடக்கமுறையை சந்திக்க நேர்ந்தது? = சரி.
- சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகள் இன்றி அனைவர்க்கும் கல்வி கற்பிக்கப்பட்டது? = சரி.
- நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகிய மிகச்சிறந்த புனிதத்தலங்கள் ஆகின? = தவறு.
- சோழர் காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது? = தவறு.
- 7TH தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
- 7TH HISTORY புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
- 7TH மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
- 7TH HISTORY முகலாயப் பேரரசு
- 7TH HISTORY விஜயநகர பாமினி அரசுகள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
- 7TH தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவங்கள்